‘ஊக்குவித்தல்’(Motivation) என்ற சொல் இலத்தின் மொழிச் சொல்லான mover or
motum எனும் சொல்லில் இருந்து உருவானது. இச்சொல்லிற்குச் ‘செயல்படு’
அல்லது‘செயல்பாட்டிற்கு உட்படுத்து’ என்று பொருள். எந்த ‘ஒரு செயல்’ ஒருவரை
உடலியல் மற்றும் உளவியல் செயல்பாட்டிற்கு உட்படுத்தி, அதன் மூலம்
ஒருவருடைய தேவையையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்கின்றதோ, அச்செயலே
‘ஊக்குவித்தல்’எனப்படுகிறது.
.
‘மாஸ்லோ’ என்ற உளவியல் அறிஞர் ஊக்குவித்தல் என்பது ‘ஒரு தொடர் செயல்’,
‘முடிவுறாதது’, ‘மாறுபடக் கூடியது’ மற்றும் ‘கடினமானது’ என்று கூறுகிறார்;
மேலும் உலகில்உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உரிய குணம் என்றும்
குறிப்பிடுகிறார். ஊக்கம் என்பது ஒரு மாணவனின் ‘உள்ளத் திட்பம்’. அது
அவனுடைய குறிக்கோளை அடைய அகத்தூண்டுதல் காரணியாகச் செயல்படுகின்றது. ஒரு
மாணவன் தனது வாழ்க்கையில்
உயர்ந்த குறிக்கோளை அடைய கற்றல் மிக அவசியமானது.
No comments:
Post a Comment