Wednesday, January 27, 2016

கவிஞர் வைரமுத்து படைப்புகளில் பெண்ணியமும் பின் நவீனத்துவமும்

தமிழினம் இன்றைய உலகில் அனைத்து முன்னேற்றங்களையும் அடைந்து பயன்பெறுதல் வேண்டும். கற்காலத்தில் நாகரிகமற்ற முறையில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்த மனிதனை, சமூக அமைப்புடன் கூடிய நாகரிக மனிதனாக மாற்றியது திருமண முறையே ஆகும். ஆரம்ப காலத்தில் வாழ்ந்த மக்களிடையே குழு அமைப்பும் பழங்குடி அமைப்புமே காணப்பட்டன. இவ்வாழ்க்கை முறை சிறந்ததாகவோ, நாகரிக வளர்ச்சியுடையதாகவோ கொண்டிருக்கவில்லை.
தொடக்க காலத்தில் மனித குலம் வரைமுறையற்ற பால்உறவுகளில் ஈடுபட்டிருந்த நிலையில் தான் இருந்தது. அதன் பின் வாழ்ந்த சூழலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. திருமணம் என்ற நிகழ்வின் மூலம் குடும்பம் என்ற அமைப்பு ஏற்பட்டது. திருமணத்தால் தகாப் புணர்ச்சி நிலை தடுக்கப்பட்டு கணவன்-மனைவி, தாய்_தந்தை, அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை போன்ற பல்வேறு உறவுமுறைகள் உருவாயின. குடும்பம் என்பது உறவு. இப்படிப் பட்ட குடும்ப உறவு நிலைக்கு வித்திட்டது ஆண்_பெண் இருவரிடையே ஏற்பட்ட உறவு நிலையே ஆகும்.
ஆதி காலத் தாய்மைச் சமூகத்தில் மனித வளத்தைப் பெருக்கும் ஜீவாதாரச் சக்தியாய் பெண் மதிக்கப்பெற்றாள். பின்னர் வந்த உடைமைச் சமூகம்_ஆண் தன் உழைப்பின் மூலம் பெற்ற உற்பத்திப் பொருட்களையும் உடைமைகளையும் தனக்குப் பிறந்த மக்களுக்கு மட்டுமே உரிமைப்படுத்தும் நோக்குடன் ‘ஒருத்திக்கு ஒருவன்’ எனும் கற்புக் கோட் பாட்டை உருவாக்கினான். இதன் வளர்ச்சிப் போக்கில் பெண்ணும் ஓர் உடைமைப் பொருளானாள் -பெண் சார்ந்த சமூக மதிப்பீடுகளை மாற்றியது.
ஆனால் இன்றைய அறிவியல் உலகில் பெண்களும் கல்வி பயின்று ஆண்களுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் ஈடுபட்டு, பல்வேறு சிறப்புக்களையும் பொருளாதார முன்னேற்றங்களையும் பெற்று வளர்ந்து வருகின்றனர். இருப்பினும் ஒரு புறம் அன்றைய காலந்தொட்டு இன்றைய காலம்
வரை ஆண்-பெண் பாகு பாடு காரணமாக ஏற்றத் தாழ்வு நிலை இருந்து வருவதும் நிதர்சன மானதாக உள்ளது. இத்தகைய முரண்பாட்டு நிலையினை பாரதியார் காலத்திற்குப் பிறகு வந்த பல்வேறு படைப்பாளர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தமது படைப்புகளில் பெண்கள் தொடர்பான உரிமைப் பிரச்சனைகளை பல்வேறு நிலைகளில் நின்று சித்தரித்துக் காட்டுகிறார். பெண்ணைத் தாயாக, தெய்வமாக, குழந்தையாக, கருவியாக, வேலைக்காரியாக, போகப்பொருளாக அனைத்து நிலையிலும் பார்க்கும் ஆண் வர்க்கம், அவளும் ஒரு தனித்துவமுள்ளவள் என்பதைப் பல நேரங்களில் மறந்து விடுகின்றனர். இவ்வாறான பாகுபாட்டு நிலையினை பல்வேறு படைப்பாளர்களும் தங்கள் படைப்புக்களில் பிரதிபலிக்கின்றனர். அந்த வகையில் இன்றைய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிற கவிஞர் வைரமுத்து சமூகத்திலும் குடும்ப வாழ்க்கையிலும் பெண்களுக்குக் கிடைக்கின்ற அங்கீகாரத்தினை தமது படைப்புக்களில் எடுத்துக் காட்டுகிறார்.
பெண் சமுதாயத்தின் சரிபாதி அங்கமாவாள். பெண் இல்லாத மனித வாழ்க்கை மாலுமி இல்லாத மரக்கலம் போன்றது. ஆயினும் நம் சமுதாயத்தில் பெண் பிறப்பு முதல் இறப்பு வரை ஒருவரைச் சார்ந்தே வாழ வேண்டியவளாக உருவாக்கப்படுகின்றாள்.
21-ஆம் நூற்றாண்டு பல இலக்கியக் கோட்பாடுகளை உருவாக்கி வந்துள்ளது. இன்று இலக்கியத்தில் ‘பின் நவீனத்துவம்’ என்ற முழக்கம் உலகம் முழுவதும் பின்பற்றக் கூடிய, திறனாயக் கூடிய போக்காக வளர்ந்து வருகிறது. பின் நவீனத்துவத்தில் அடங்கும் கோட்பாடுகள் பெண்ணியம், தலித்தியம், காந்தியம், சோசலிசம் போன்றவை தனித்தனியே ஆய்வுப் போக்கைக் கொண்டு வளர்ந்து வருகின்றன. பின் நவீனத்துவக் கோட்பாடுகளில் இன்றியமையாத ஒரு சிறப்பு பெண்ணியத்திற்கு உண்டு. படைப்பிலக்கியங்களான கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, புதினம், நாடகம் போன்றவற்றுள் பெண்ணியக் கோட்பாட்டுப் பதிவுகள் ஏராளமாக உள்ளன. அதனால் தனித்த எல்லைப் பரப்புடன் பெண்ணிய இலக்கியம் ஊடகங் களில் வலம் வருகின்றது.
பெண்ணியம்
பெண்ணியம் என்ற சொல் 1890 முதல் பாலின சமத்துவக் கோட்பாடுகளையும் பெண் ணுரிமைகளைப் பெறச் செயற்படும் இயக்கங்களையும் குறிக்கப் பயன்பட்டு வருகிறது. இச்சொல் இன்று உலகளவில் பேசப்பட்டு வருகிறது. பெண்ணியம் என்பது ஆண்களை எதிர்ப்பதன்று, ஆண்களுக்கு நிகராக உரிமைகளைப் பெற வேண்டும் என்பது ஆகும்.
சொற்பொருள்  விளக்கம்
‘பெண்ணியம்’ என்ற சொல் ‘குநஅinளைஅ’ என்ற ஆங்கிலச் சொல்லை அடிப்படையாகக் கொண்டது. ‘குநஅiயெ’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் திரிபு தான் ‘குநஅinளைஅ’ ‘குநஅiயெ’ என்பதற்கு பெண்ணின் குணாதிசயங்களைக் கொண்டுள்ள என்பது பொருள். இச்சொல் திறனாய்வுக் கொள்கைகளுள் ஒன்றாகப் பெண்ணியவாதத் திறனாய்வைக் குறிப்பிட்டு அஃது இலக்கியம் சார்ந்து எழுந்ததாகத் தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு கூறுகிறது என முனைவர் க. பஞ்சாங்கம் கூறுகிறார்.
கழகத் தமிழ் அகராதி “பெண்’’ என்பதற்கு பெண்கள், மகள், மணமகள், சிறுமி என்றும் பெண்மை என்பதற்கு பெண்தன்மை, நிறை, பெண்ணுக்குரிய நலம், பெண் பிறப்பு, அனுமதித் தன்மை என்று விளக்கம் தருகிறது.
இலக்கணம் காட்டும் பெண்ணியம்
வீட்டை, குடும்பத்தைக் காப்பவள், பேணுபவள் என்றும் பொருளுடைய ‘பேண்’ என்ற வினைச்சொல் ‘பெண்’ என்னும் பெயர்ச் சொல் ஆயிற்று. ஆண் என்பது ஆளுமைக்குரிய சொல். மற்றவற்றை ஆளுவது ஒரு புறம் இருந்தாலும் பெண்ணை ஆள்பவன் என்ற கருத்து தான் ‘ஆண்’ என்ற சொல்லில் இருக்கிறது. இதே போல் பெண் என்ற சொல் ‘பெட்டி’ அல்லது விரும்பப்படும் தன்மை. அதாவது ஆனால் விரும்பப்படுபவள் என்ற கருத்தில் இருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இலக்கணம் கூற வந்த தொல்காப்பியம்,
‘பெருமையும் உரனும் ஆடூஉருமேன’ என்று பெருமை, வலிமை என இருப்பவன் ‘ஆண்’ எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்’’
அறிவும் அருமையும் பெண்பாலன’’ (தொல்காப்பியம்) அடக்கமும் மனவமைதியும் நேர்மையும் சிறந்த செயல்களைக் கூறுவதும் அருமைப்பாடும் பெண் மக்களிடத்தன. என்று பெண்ணின் இயல்பைக் கூறுகிறது.
இலக்கியங்கள் காட்டும் பெண்ணியம்
பெண்ணை இல்லக்கிழத்தியாக, இல்லறக் கடமைகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட மனையாளாக சங்ககாலச் சமுதாயம் கருதியது. ஏனைய கடமைகள் ஆடவர்க்குரிய கடமையாக, சமுதாயம் சார்ந்த கடமைகளாகக் கருதப்பட்டது. இதனை,
“வினையே ஆடவர்க்கு உயிரே
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” (135)
என்ற குறுந்தொகை வரிகள் பெண் கணவனைச் சார்ந்து நிற்க வேண்டியவளாய் இருந்தாள் என்பதை உணர்த்துகிறது.
வீரகாவியங்களான மகாபாரதமும் இராமாயணமும் பெண்களை முன்னிலைப் படுத்தியதால் தான் இன்றும் இயங்கி வருகிறது. இனியும் இயங்கி வரும். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெரும் காப்பியங் களும் மகளிரின் சிறப்பையே நிலைத்து நின்று போற்றி வருகின்றன.
சிலப்பதிகாரம் ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோரேத்தலும்’ என்று பெண்மையின் சிறப்பை உலகுக்கு உணர்த்தும் விளக்கமாகவே கொண்டுள்ளது. அதன் தொடக்கமான ‘திங்களைப் போற்றுதூஉம் என்னும் தொடக் கமே பெண்களைத் திங்களாகப் போற்றிய தற்காக அல்ல, கண்ணகியை முதன்மைப் படுத்துவதற்காக எனக் கொள்ளலாம்.
அறிஞர் கருத்து
திருவள்ளுவர் ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ எனக் கேட்டு பெண்மையின் சிறப்பை உணர்த்துகிறார்.
பாரதியாரும்
“பெண்கள் வாழ்கென்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா’’
என்று பெண்மையை உயர்த்துவதில் மகிழ்ச்சி கொண்டார். கணவன் ஒரு தெய்வம் என்றால் மனைவியும் ஒரு தேவதை தான் என்கிறார் காந்தியடிகள். பெண்களுக்குத் துன்பம் செய்பவரை பாரதிதாசன் ‘குள்ளர்கள்’ என்கிறார்.
“என் வாழ்விற்கு நாடோறும் துணை புரியும் இயற்கைப் பெண்ணாகவே காட்சியளிக்கிறாள். யான் தொழும் அன்புத் தெய்வமும் பெண் ணாகவே இருக்கிறது. என் உள்ளத்துள்ள பெண்மை அருளைச் சொரிகின்றது. யான் பேசும் மொழி எனக்குப் பெண்ணின்பம் நல்குகிறது. எல்லாம் பெண் மயமாக என்னைச் சூழ்ந்து என்னுடலுக்கும் உயிருக்கும் நலஞ்சேர்க் கின்றன. இத்தகைய பெண் தெய்வத்தை முதன்மைப் பொருளாகப் போற்றுகிறேன். பெண்ணே முதன்மை யுடையவள் என்று திரு.வி.க. பெண்ணை உலகத்தில் முதல் பொருளாக முதன்மைப்படுத்துகிறார்.
“அடக்கம், பொறுமை, தியாகம், பரநலம், இரக்கம், அழகு, ஒப்புரவு, தொண்டு முதலிய அமைந்த ஒன்று பெண்மை எனப்படும்’’ என திரு.வி.க. பெண்ணின் பெருமையினைப் பகர்கிறார். மானுடத்தின் இரு கண்களாகக் கருதப்படுபவர்கள் ஆணும் பெண்ணும். இவர்களுள் ஒருவர் உயர்வு மற்றவர் தாழ்வு எனக் கருதினால் இரு கண்களுள் ஒன்றை இழந்த நிலை ஆகும். இருவரும் சமம் என்பதே உண்மை.
பெண்ணியம் வரையரை
பெண்ணியம் என்ற சொல் மிக அண்மைக் காலத்தில் தோன்றி வளர்ந்து வருகிறது. அது பெண்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு புதிய இயக்கமாகும். அத்தோடு பெண்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் பெண் ஆணுக்குச் சமமானவள் என்னும் உயர் நெறியை நிலை நாட்டும் நோக்கத்தைக் கருவாகக் கொண்டு இயங்குகிறது எனக் கலைக்களஞ்சியம் புலப்படுத்துகின்றது.
‘மேலை நாடுகளில் பெண்ணியம்’ என்ற கோட்பாடு 17ஆம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்தது என்பார்’’ எஸ். திருமூர்த்தி.
தமிழ் இலக்கியச் சொல் வழக்கில் ‘பெண்ணியம்’ என்பது பெண்ணின் தன்மை எனப் பொருள்படும் தன்மையையும் உணர்ந்து கொள்ளலாம். இதனை அறிந்து கொள்ள தேசியம், காந்தியம், போன்ற சொல் வழக்குகளை எண்ணிப் பார்த்தால் போதும், பெண்ணியம் என்ற சொல் புரிதலாகும்.
இந்திய நாட்டைப் பொறுத்தவரை பண்டைக் காலந்தொட்டே பெண்மை நலம் போற்றப்பட்டு வந்துள்ளது. பெண் என்பவள் தாய், தெய்வம், இறைவி, சக்தியாக மதிக்கப் பட்டுள்ளாள். நாட்டைக் கூட தாய்த்திருநாடு என்றே அழைத்து மகிழ்கிறோம். கல்வி, செல்வம், வீரம் போன்ற நெறிகளுக்கும் பெண் கடவுளையே வைத்து வணங்கி வருகிறோம்.
இன்ன பிற சிறப்புக்கள் பெண்களுக்கென்று இருந்தாலும் சமூக அமைப்பில் பின்னடைவு நிலவுகின்றது; இந்த இருளைப் போக்கும் முகமாகக் கருத்தாக்கமாக உருவாகின்றது. இது குறுகிய காலத்தில் சமூக அறிவியலின் அனைத்துத் தத்துவங்களையும் சித்தார்ந்தங்களையும் மறு பரிசீலனைக்கு உட்படுத்தத் தூண்டு கின்ற எழுச்சி மிக ஆற்றலாக உள்ளது.
பெண்ணிய இலக்கு
“சார்ந்து வாழாமல், தான் தன் காலில் நிற்பதற்குரிய ஆற்றல் பெற்று, எப்பொழுதும் எவரிடத்தும் சுயத்தை இழக்காது அடிமைத் தளைக்குள் ஆட்படாது மானுடராயும்   மனித மதிப்புடனும் உலக மகளிர் வாழ வேண்டும்’’ பொறுப்புகளை ஏற்று, மீட்சி பெற்றுத் தன்னுரிமையும் வாழ்வுரிமையையும் இலக்காகக் கொண்டது பெண்ணியமாகும்.
பெண்ணியமும் புரட்சியும்
பெண்ணியத்தின் தீவிரத்தன்மை புரட்சியாய் விளங்குகிறது. மனிதனின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் பொழுதும் இயல்பான தகுதிகள் மறைக்கப்படும் பொழுதும் ஏற்படுகின்ற உள்ளக் கொந்தளிப்பு புரட்சியாக உருவெடுக்கின்றது. சமுதாயத்தில் பெண்களின் அடிப்படை உரிமைகள் முடக்கப்பட்டிருப் பதைக் கண்டு பாரதி கொந்தளித்தார் என்பர் ஆய்வியலாளர். அக்கொந்தளிப்பே பெண்ணியக் கோட்பாடு உருவாகக் காரணமாய் அமைகின்றது.

பெண்ணின் பெருமை
பெண்மையின் சிறப்பை உணர்ந்து தான் நம் முன்னோர் நதியையும் பூமியையும் பெண்ணாக எண்ணிப் போற்றி வணங்கினர்.
எந்த நாட்டில் பெண்மைக்கு மதிப்பும் பெருமையும் இருக்கின்றவோ அந்த நாடு முன்னேற்றம் பெற்ற நாடாகும். பெண்மைக்குச் சிறுமையும் இழிவும் கற்பிக்கும் நாடு அடிமை நாடு அல்லது பிற்போக்கான நாடாகும் என்று மு. வரதராசனார் கூறியுள்ளார்.
பெண்மை என்பது தாய்மையில் தான் நிறைவடைகிறது என்று காலம் காலமாகக் கருதப்பட்டு வருகிறது. இதனையே திரு.வி.க. அவர்கள் “பெண்மையெல்லாம் தாய்மை தான்’’ என்றுரைப்பார். வள்ளுவரோ, பெண்ணைப் பற்றி,
‘மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு’’ கூறுகிறார்.
உயர்வும் தாழ்வும்
மனித சமுதாயம் ஐந்திணை ஒழுக்கத்தில் குறிஞ்சி உரிப்பொருளாகப் ‘புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என்று இருந்த நிலையில்  ஆண், பெண் இணைந்தே வாழ்ந்தனர். முல்லை, மருதம், நெய்தல், பாலை என இடம் மாறிய வேளையில் ஆணின் முதல் ஆதிக்கம் அரும்பியது. இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என இருவரும் தனித்தனி பொருள் வழியில் ஆண் பிரிந்து சென்ற நிலையில் அவனை எதிர்நோக்கி பெண் சமுதாயம் வாழத் தொடங்கியது.
மனித சமூகத்தில் ஆதிகாலத்தில் ஆடவர் பெண்டிரிடையே ஏற்றத்தாழ்வு இல்லை. உணவு சேகரிக்கும் தொடக்க நிலையை அடைந்தபோது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மெல்லிய பிரிவு தோன்றியது. எனினும் இது கூட இருவரிடையே ஏற்றத்தாழ்வை உண்டாக்க வில்லை. பின்பு நிலவுடைமைச் சமுதாயம் தோன்றியது.
பெண்களே ஆதி நிலக்கிழார்களாக அமைந்தனர். நிலவுடைமையும் சொத்துடைமையும் ஆதிகாலத்தில் பெண்களுக்கே இருந்து வந்தன. மேய்ச்சல் சமுதாய அமைப்பு, காடும் காடு சார்ந்த இடமும் கொண்டு இருத்தலும் இருத்தல் நிமித்தமும் உரிப்பொருளாகி ‘ஆநிரை’ வாழ்க்கை தொடங்கிய காலத்தில் ஆணாதிக்கம் உருவாகத் தொடங்கியது. பொருள் உற்பத்தியில் இருந்து பெண் மெல்ல மெல்ல விலக்கப்பட்டாள்.
“பொருள் ஈட்டுவோர் ஆணாக ஆகி வெளியே வேலை செய்வோரும் ஆணாக இருந்ததால் வீட்டை ஆட்சி செய்யும் வீட்டுப் பெண்மணியாகப் பெண் பொறுப்பேற்கத் தொடங்கினாள். இதுவே பெண் அடிமைப் படுத்தப்பட்டதின் அழுத்தமான தொடக்க நிகழ்ச்சி’’ எனத்தாயம்மாள் அறவாணன் கூறுகிறார். இந்த ஏற்றத்தாழ்வால் மகளிர் கூட்டம் வலிமையற்றதாக ஆக்கப்பட்டது. உற்பத்தியில் இருந்து விலக்கப்பட்ட பெண் குழந்தை உற்பத்திக்கென்றே ஆக்கப்பட்டாள். அதன் விளைவாகப் பெண் போகப் பொருள் என்ற கோட்பாடும் பின்பற்றப்பட்டது. உலக வரலாற்றில் தாய் வழிச் சமுதாயத்தில் வீழ்ச்சி பெண்ணினத்திற்கு ஏற்பட்ட ஒரு பெரும் வீழ்ச்சி  என்பார் எங்கெல்ஸ்.
“மனையுறை மகளிர்க் காடவருயிர்’’ எனக் குறுந்தொகை பகிர்கின்றது ஆதிகாலத்திலேயே பெண்களின் நிலை வரன் முறைப்படுத்தப்பட்டு விட்டது. ஆண்களைக் கவர்வதற்காகவே பெண் பிறப்பெடுக்கிறாள் என்பது எழுதாதச் சட்டமாக ஆக்கப்பட்டது; ஆடை அணிகலன், ஆசைக்கு வாசமலர் தேடுவதும், ஆடவர்க்கும் சேவித்திருப்பதுவும் அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் கெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர் கூட்டம் மானிடர் கூட்டத்தில் வலிமையற்ற ஒரு பகுதி’’ என்று பாரதிதாசனால் படம் பிடித்துக் காட்டப்பட்டது.
தந்தை பெரியார், ஆணின் நலத்துக்குப் பயன்படுவதற்கும் ஆணின் திருப்திக்கும் ஆணின் பெருமைக்கும் பெண் ஒர் உபகருவி என்ப தல்லாமல் வேறு என்ன? ஓர் ஆணுக்குச் சமையல்காரி. ஓர் ஆணின் வீட்டிற்கு வேலைக்காரி. ஓர் ஆணின் குடும்பப் பெருக்குக்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பெண்ணை, ஓர் ஆணின் கண் அழகிற்கும் மனப்புளகாங்கி தற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்களை பெரிதும் எதற்காகப் பயன்படுத்துகிறார்கள்’’ எனக் கேட்டார்.
“சமுதாயத்தைப் பொறுத்தவரை பெண் ஓர் ஏழை நடிகை. வாழ்க்கை நாடகத்தில் அவளுக்கு எந்தப் பாத்திரம் தரப்படுகிறதோ, அதை அவள் முணுமுணுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்தப் பாத்திரத்தையும் அவள் வெறுமனே நடிக்கக் கூடாது, பாத்திரமாகவே வாழ வேண்டும். கடைசி வரை கதை, வசனம், இயக்கம், ஒப்பனை எல்லாமே சமூகம் தான். அவளுடைய சொந்த விருப்பு வெறுப்பிற்கு அதில் இடமில்லை. சமூகத்தின் கவலையெல் லாம் நாடகம் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பது தான்’’ என்று கலை நயத்தோடு பெண்களின் நிலைமையைக் கவிஞர் அப்துல் ரகுமான் குறிப்பிடுகின்றனார்.
இந்த இழிநிலை மாறவேண்டும் என்று மனம் புழுங்குவோர் பலர். “இன்று தமிழ் நாட்டில் மாத்திரமே அல்லது பூ மண்டலம் முழுவதிலும் ஆணை மேலாகக் கருதி நடத்தும் முறை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம். அநீதி களுக்கெல்லாம் அடிப்படை. துன்பங்களுக் கெல்லாம் கோட்டை கலியுகத்திற்கும் பிறப்பிடம்’’ என பெ.தூரன் மொழிகிறார்.
காலந்தோறும் வந்த நிலை
தொல்பழங்காலத்திலேயே பெண்மைக்கும் ஆண்மைக்கும் உள்ள குண நலன்கள் தனித் தனியே வரையறுக்ப்பட்டன. வலிமையான செயல்கள் பெருமையான செயல்கள் எல்லாம் ஆணுக்கே உரியவை என்ற கருத்தை பெண் களுக்குத் தனியாகச் சொல்லாமல், பெண்களைப் பாராட்டுவதைப் போல மென்மையான செயல்கள் எல்லாம் பெண்களுக்கே உரியன என்ற உறுதிப்பாட்டை ஏற்க வைத்து விட்டனர்.
“மனைக்கு விளக்காகிய வாணுதல்’’ (புறம்)
“மனை மாண்சுடர்’’ (நற்றிணை)
“மனைக்கு விளக்கம் மடவார்’’ (நான்மணிக்கடிகை)
என்றெல்லாம் சங்க காலம் பெண்களைப் பெரிதும் போற்றி மகிழ்ந்தது.
உலகில் தோன்றிய காப்பியங்கள் எல்லாம் அரசர்களையோ, தெய்வங் களையோ காப்பியத் தலைவனாகக் கொண்டிருக்கத் தமிழில் தோன்றிய முதற்காப்பியங்களான சிலப்பதிகார மும் மணிமேகலையும் பெண்ணுக்குப் பெரிதும் ஏற்றம் தந்து பெண்மையைப் புகழ்ந்திருக்கின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்றம் பெற்ற பெண்மை இடைக்காலத்தில் முற்றிலும் அடிமை யாக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
சமணநெறி பெண்ணின் தொடர்பை விலக்குவதே உயர்வு என்று கூறி அதன் வழி பெண்ணை இழிவுப்படுத்தியது. சமணக் காப்பியமான சிந்தாமணி, சீவகன் எண்மரை மணந்து இறுதியில் துறவு பூண்டதாகக் காட்டுகிறது.’’
“பெண்ணின் பிறவியும் பீடுடைத்தன்றே’’
“பெண்ணாக வந்தவொரு மாயப்பிசாசம்’’
“மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும்’’
என்று இராமலிங்க அடிகள் கூறுகிறார்.    
“பெண் துறவு பூண்டாலும் சுவர்க்கத்தை அடைய முடியாது; பெண்ணாகப் பிறந்த பாவத்தைப் போக்கிக் கொள்வதன் வாயிலாக ஆணாகப் பிறக்கலாம். பின்பு தான் சுவர்க்கத்தை அடைய முடியும்’’ என்று சமண மதம் கூறுகிறது. மனித குலத்தின் முதல் பெண்ணாகிய ஏவாளைப் படைத்த கடவுள், ஆதாமின் துணைக்காக என்று அவன் உடலின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அதைப் பெண்ணாக்கி அவனிடம் அளித்தார். அவளே ஏவாள் என்று விவிலியம் நூலின் ஆதியாகமம் கூறுகிறது.
நபிகள் நாயகம் பெண்களுக்குக் காமக்கிழத்தி என்ற நிலையை ஒழித்து மனைவி என்ற தகுதியை ஏற்படுத்தினார். அப்படிச் செய்தும் அவரே, “பெண்டிர் என்போர் இறைவனால் ஆடவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அடைக்கலப் பொருட்கள் ஆவர். ஆகவே, அவர்கள் மீது அதிகாரம் செலுத்துங்கள், அதை அன்போடு செலுத்துங்கள்’’ என்று நபிகள் நாயகம் கூறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
“மானஞ் சேர்க்க மனைவியின் வார்த்தைகள்
கலி யழிப்பது பெண்களறமடா’’
என்றெல்லாம் பாடிப் பெண்மை நலம் பற்றிய உயரிய எண்ணங்களை மக்கள் மனத்தில் படர விடுகிறார் பாரதிதாசன். பாரதி வட்டத்தில் இருக்கும் கவிமணி பெண்ணின் பெருமையை,
“மங்கை யராகப் பிறப்பதற்கே -நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா -அவர்
பங்கயக் கைநலம் பார்த்தலவோ -இந்தப்
பாரில் அறங்கள் செழிக்குதம்மா’’
எனப் பாடிப் பரவசப்படுகிறார் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை.
பெண் உரிமை
பெண்களின் சமுதாய நிலையை முன்னேற் றும் வகையில் உலகம் முழுவதிலும் இயங்கி வரும் அமைப்புகள் பெண் கல்வியை ஓர் இன்றியமையாத கருவியாகக் கொண்டு வலியுறுத்தி வருகின்றன. கல்வி, வாய்ப்பு வசதி ஆகியவற்றில் பெண்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் மரபு வழி மறுப்புகளை அகற்றிச் சமுதாயச் சீர்திருத்தங்களை ஏற்படுத்த கி.பி. 19ஆம் நூற்றாண்டிருந்தே முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அடுப்பூதும் பெண்களக்குப் படிப்பெதற்கு என்ற அவலம் விரைவில் மறைந்து ‘பட்டங்கள் பெறுவதிலும் சட்டங்கள் செய்வதி லும் ஆணும், பெண்ணும் சமம்’ எனும் அறிஞர் வாக்கு இன்று உண்மையாகிவிட்டது.
“ஓ நல்லவரே ஏற்கனவே தவறுகள் செய்தாயிற்று. இப்பொழுதும் செய்கிறீர்கள். பின்னரும் செய்யப் போகிறீர்கள். மானங் கெட்டவரே இதில் எந்தத் தவற்றை நான் மன்னிப்பது’’ என்று குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கும் தலைவனை நேர் நிறுத்திக் கேட்கும் பெண்ணைக் காட்டும் படைப்பாளர் மட்டுமல்ல.
தங்களுடைய உணர்வுகளுக்கும் தாங்கள் படைத்த இலக்கியத்திற்கும் உண்மையாக இருக்கும் பெண்களின் போக்கு என்பது கடைச்சங்க காலத்துக்கு முற்பட்டதாகவே இருந்து பின்னர் வழக்கொழிந்து போய் விட்டதோ என்ற ஐயம் ஏற்படத் தோன்றுகிறது.
அப்படி இல்லை என்று ஒலிக்கிற ஒற்றைக் குரலாகச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி தோன்றுகிறாள்.
“மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன், தோழி நான்”
என்றும்
“கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ
மருப்பொசித்த மதவின்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விசிருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழிவெண் சங்கே”
என்றும்,
“அவரைப் பிராயந் தொடங்க என்றும்
ஆதரித் தெழுந்தவெண் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சாவிக்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒவ்வை விதிக் கிற்றியே”
என்றும் கண்ணன் என்னும் கருந்தெய்வம் மேல் தான் கொண்டிருந்த காதல் தாபத்தை, வார்த்தைப் படுத்தும் வல்லமை கொண்ட ஆண்டாளின் குரல் தமிழிலக்கியம் என்னும் தோப்பில் தன்னந்தனியான பெண்குரலாக ஒலிக்கிறது. அதற்குப் பிறகு நூறு நூறு ஆண்டுகளாக தமிழிலக்கியப் பரப்பில் பெண் குரல் மௌனப்பாட்டே போய் விட்டது எனலாம்.
“பெண்ணடிமைக்கு விடுதலை கொடுக்க வேண்டும். பெண்ணடிமையை அடியோடு ஒழிக்க வேண்டும். இன்று தமிழ் நாட்டில் மாத்திரமே இல்லாது பூ மண்டலம் முழுவதி லும் பெண்ணைத் தாழ்வாகவும் ஆண்களை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு’’ என்ற கருத்தின் வழி அறிந்து கொள்ளலாம்.
ஆண்களின் எண்ணம், இதயம், ஏக்கம் அனைத்தையும் தங்கள் எழுத்தினால் அப்படியே ஒற்றியடிக்கிற பெண் எழுத்தாளர்கள் இல்லையா? என்றால்,
“இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று மண் தில்ல
ஞாயிறு காயும் வௌ;வறை மருங்கில்
கையில் வளமன் கண்ணின் காக்கும்
பெண்ணெய் உனங்கல் போலப்
போலப் பரந்தன்று, இந்நோய் நோன்று கொளற்க அரிதே”
என்ற குறுந்தொகைப் பாடலில் வெள்ளி வீதியார் ஒரு ஆணின் பிரிவுத் துயரைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
இதனாலேயே ஆண்களைப் பற்றி பெண்கள் முற்ற முழுமையாக சித்தரித்து விட முடியும் என்றோ பெண்களை ஆண்கள் அப்பட்டமாக தங்கள் படைப்பில் வடித்துக் காட்டி விட முடியும் என்றோ சொல்லி விட முடியுமா?
உடற்கூறு எண்ணப் போக்கு மற்றும் சமூகவியல் காரணங்களால் இருபாலருக்கும் நுண்மையான பிரத்யேகமான அனுபவங்கள் வாழ்வில் சித்தரிக்கப்படுகின்றன என்பதே உண்மை. இதை மிகச் சரியாகச் சொல்ல அதை அனுபவித்தவர்களாலேயே முடியும்.
அப்படியே பார்க்கும்போது அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்று கற்பிக்கப்பட்ட தளைகளுக்குள் சிக்குண்டு கிடக்கும் பெண்கள் தங்களைச் சரியாகவும் உண்மையாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்திக் கொள்வது என்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது.
சங்க காலப் புலவர்கள் எவரும் பெண்களை இழிவாகப் பேசியதில்லை. பாடியதில்லை. அவர்களைப் போலவே இக்காலக் கவிஞர்களும் பெண்களின் பெருமையைச் சிறப்பித்தே பாடுகின்றனர். கவிஞர் வைரமுத்துவும் தன்னுடைய கவிதைகளில் பெண்களின் தன்மையைக் கூறியுள்ளார்.
பெண் சுதந்திரம்
தனி மனித சுதந்திரத்திலும் பெண்ணுரிமைப் போராட்டத்திலும் அதிக நாட்டம் கொண்டு நின்ற பாரதி, பாரதிதாசன், வாணிதாசன் போன்று கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளில் பெண்மையைப் பாராட்டி அவர்களின் அடிமைத் தனத்தைப் போக்க, உரிமை வாழ்வைப் பெற்றுத்தர தன் கவிதையைத் தொட்ட இடங்களில் எல்லாம் அவர்களின் நிலையைப் பாடியிருக்கிறார்.
“இந்தக் கவிதைகள்
என்னை எனக்குக் காட்டச் சொல்லி
நானே படைத்த வற்புறுத்திய
வார்த்தைக் கண்ணாடிகள்
பெண்களைச் சார்ந்த கவிதைகள் மிகுதிதான்
காரணம் -பெண்களை எனக்குப்
பிடித்திருக்கிறது -தவறு, பெண்களை
எனக்கும் பிடித்திருக்கிறது.’’
என்று தமது முதல் நூலான வைகறை மேகங் களின் முன்னுரையில் தெளிவுபடுத்துகிறார் வைரமுத்து.
கூட்டுப் புழுக்களாக இருந்து வண்ணத்துப் பூச்சிகளாக மாறுவதே பரிணாம வளர்ச்சி. ஆனால் பெண்ணினத்து வரலாற்றில் பட்டுப் பூச்சிகளையெல்லாம் கூட்டுப் புழுக்களாக மாற்றும் எதிர்ப் பரிமாணந்தான் நடைபெற்று வருகிறது.
“அடிநாள் முதலாய் இந்த
ஆண்வர்க்கம்
பெண்ணைக் கர்ப்பம்
சுமக்க மட்டும்
கை குலுக்கி வரவேற்கும்
உற்பத்தி உறவுகளில்
ஒதுக்கித்தான் வைத்திருக்கம்’’
என வருந்துகிறார் வைரமுத்து.
பெண்கள் தங்கள் குடும்பத்து ஆண் மக்கள் முன்பாக வருவதும் அவர்களுடன் பழகுவதும் கூடத் தவறு என்று கருதப்பட்டதைக் கடுமை யாகக் கண்டிக்கிறார். இந்த நிலைமை பெண்களின் மனமும் அறிவும் வளர்ச்சி அடையத் தடையாக இருக்குமென்றும், பெண்கள் படுக்கையறையில் தீபங்களாகவும் சமையலறையில் விறகுகளாகவும் தங்களையே எரித்துக் கொள்ள வேண்டிய இழிநிலையில் இருப்பதை எடுத்துக் கூறுகிறார் அவர். பெண்ணியத்திற்குப் பாடப்பட்டிருக்கும் பழைய கட்டுப்பாடுகளையெல்லாம் அறிவின் துணைக் கொண்டு தகர்த்து எதிர்த்தால் விடுதலை ஏற்படும் என்பதையும் காட்டி பெண் முன்னேற்றமும் விடுதலையும் எழுச்சி பெறத் தூண்டு கிறார். மேலும்,
“அடுக்களை துடைப்பதும்
படுக்கையை விரிப்பதும் _ அது
பெண்ணின் தொழிலில்லையே
சரித்திரம் படைக்கவும்
வருவதில் பிழை யில்லையே’’
என்று கூறி ஒரு புதுமைப் பெண்ணைக் கண்முன் காட்டுகிறார். மேற்கண்டவற்றிலிருந்து பெண்ணியம் குறித்தும் கவிஞர் வைரமுத்து தமது கவிதையின் மூலம் பெண்களின் சுதந்திரத்தை எடுத்துக் கூறுவதிலிருந்தும் பெண்களின் உரிமை குறித்த அவரின் கருத்திலிருந்தும் பெண்ணியத்திற்கும் அவருக்கும் இடையே உள்ள பற்றுதலை நன்கு உணர முடிகிறது.
பெண் என்பவள் சமுதாயத்தின் சரிபாதி அங்கமாவாள். பெண் இல்லாத மனித வாழ்க்கை. மாலுமி இல்லாத மரக்கலம் போன்றது. 21ஆம் நூற்றாண்டு பல இலக்கியங்களையும் கோட்பாடு களையும் உருவாக்கித் தந்துள்ளது. பின் நவீனத்துவமும் தோன்றி வளர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...