Posts

விருது வழங்கும் விழா

Image
கன்னியகுமரி , தமிழ்நாடு கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக 25.08.2019 அன்று காலை 10.00 மணிக்கு நடந்த விருது வழங்கும் விழாவில் திரைப்பட இயக்குநர் பி.சி. அன்பழகன் அவர்களிடம் பேராசிரியர் மாமணி விருதை கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் பூ.மு. அன்புசிவா அவர்களுக்கு வழங்கிய போது எடுத்த படம்.

சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்

சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும் முன்னுரை காலம் காலமாகக் கதை சொல்வதும் , கதை கேட்பதும் எல்லாத் தேசங்களிலும் , எல்லா மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே , மக்கள் இனக் குழுக்களாக இயங்கி வந்த போது , ஓய்வு நேரங்களில் சக மனிதர்களிடம் தொடர்பு கொள்வதற்கும் , குடும்ப உறவினர்களுடன் பொழுதைக் கழிக்கவும் கதை கூறும் மரபைக் கையாண்டு வந்துள்ளனர். தமிழர்கள் காலந்தோறும் , இராமாயணம் , மகாபாரதம் , புராணக் கதைகள் , கிராமியக் கதைகள் , பஞ்சதந்திரக் கதைகள் , மரியாதைராமன் கதைகள் , தெனாலிராமன் கதைகள் , விக்கிரமாதித்தன் கதைகள் என பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. அதன் படிநிலை வளர்ச்சியை இக்கட்டுரையில் காண்போம். தொல்காப்பியர் கூறும் கதை மரபு கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர் ,                              ‘ பொருள் மரப...

my new home

Image

ஏ.பி.சர்வேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Image

தமிழின் செம்மொழித் தகுதிகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா தமிழ்த்துறைத்தலைவர் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி சரவணம்பட்டி,  கோயம்புத்தூர் - 641035. பேச : 09842495241. செம்மொழி என்ற நிலையில் ஒரு மொழி ஏற்கப்பட வேண்டுமானால் அதற்கென்று சில தகுதிப்பாடுகள் தேவைப்படுகின்றன. செம்மொழி என்று ஒரு மொழி அழைக்கப்பட வேண்டுமானால் அம்மொழி தொன்மைச் சிறப்பு வாய்ந்ததாக அதற்கென ஒரு தனித்த பண்பாடு உடையதாக, அந்தப் பண்பாடு எதனோடும் தொடர்பற்றதாக, வளமையான இலக்கியச் செழுமை வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்று கருதுகிறார் ஜார்ஜ் ஹர்ட். இவ்வளவில் சிறப்பு பெற்ற உலகச் செம்மொழிகளாக கிரேக்கம், இலத்தீன், அரபி, சமஸ்கிருதம், சீனம் போன்ற பல மொழிகள் திகழ்ந்து வருகின்றன. இவற்றோடு தற்போது தமிழும் செம்மொழியாக ஏற்கப் பெற்றுள்ளது. தமிழுக்கு எப்போதோ கிடைக்க வேண்டிய இந்தப் பெருமை தற்போதுதான் கிடைக்கப் பெற்றிருக்கிறது. தகைமைக்குரிய அளவுகோல்கள் ஒரு மொழி “செம்மொழி” என் அழைக்கப்படுவதற்கு சில அடிப்படைத் தகைமைகளைக் கொண்டிருக்கவேண்டும்.  அம்மொழி தொன்மை வாய்ந்த மொழியாக இருக்க வேண்டும்  அம்மொழி வேறு மரபிலிருந்து வந்த கிளையாக அல்லாமல் ...

கற்றலின் புதுமைகளும் மதிப்புக் கல்வியின் சவால்களும்

முனைவர் பூ.மு.அன்புசிவா  தமிழ்த்துறைத்தலைவர்,  சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, சரவணம்பட்டி,  கோயம்புத்தூர் - 641 035. பேச : 098424 95241. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு கற்பித்தலில் புதிய முறைகள் தோன்றின.   கற்பித்தலைச் சிறப்பாக்குவதற்கும் வெற்றிகரமாக முடிப்பதற்கும் முக்கியக் காரணியாக இருப்பது பாடங்களை முறையாகத் திட்டமிடுதலாகும்.  எவற்றைக் கற்பிப்பது எவ்வாறு கற்பிப்பது என்பதையும் ஆசிரியர் முன்கூட்டியே தெளிவுபெற்றிருக்கவேண்டும்.   கால மாற்றத்தால் கற்பித்தல் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு மொழிக்கு எற்றவாறும் நாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறும் மொழிக் கற்பித்தலின் போக்கு மாற்றம்பெற்றுவருகிறது. புதிய கற்பித்தல் முறைகளாக விளையாட்டு முறை, நடிப்பு முறை,   செயல்திட்ட முறை,   தனிப்பயிற்சி முறை போன்றவற்றைக் கல்வியாளர்கள் குறிப்பிடுவர். இவ்வகையில் புதிய கற்பித்தல் முறைகளைப் பற்றியும் அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதையும் பார்ப்போம். கற்பித்தலும் கற்றலும் பல்வேறு காரணிகளை உள்ளடக்கி...
Image
ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக தமிழ் மன்ற நிறைவு விழாவும், மகளிர் தின விழாவும்  04.03.2019 காலை 10.00 மணிக்கு கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றன. விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் பேரா. என். மஞ்சுளா அவர்கள் வரவேற்புரையாற்றினார். கல்லூரி தலைவர் திரு. ஆ. கார்த்திகேயன் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் கு. முத்துசாமி அவர்கள், கல்லூரி ஆலோசகர் முனைவர் ந. கந்தசாமி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்கள். கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பூ.மு. அன்புசிவா அவர்கள், “பெண் பெண்ணியம் ஆளுமை” என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ஜெ. வித்யா நன்றியுறையாற்றினார். 300க்கு மேற்பட்ட மாணவிகளும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.