சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக பத்மஸ்ரீ விருது பெற்ற திருமதி பாப்பம்மாள் அவர்களுக்கு பாராட்டு விழா கல்லூரி கலையரங்கத்தில் 20.02.2021 அன்று காலை 10.00 மணிக்கு கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமிகு வி. லட்சுமிநாராயணன் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.கே. வைத்தியநாதன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். சுகுணா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமிகு ஸ்ரீகாந்கண்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். திருமதி பாப்பம்மாள் பாட்டி பேசுகையில் நல்ல உணவு, மனதை எப்போதும் சந்தோநமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். முடிவில் கணினித்துறைத்தலைவர் பேராசிரியர் திருமதி சுகன்யா நன்றியுரையாற்றினார். தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பூ.மு.அன்புசிவா, மேலாண்மைத் துறைத்தலைவர் முனைவர் லட்சுமணன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர். 200க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு நாளைய நாயகர்கள் விருது வழங்கப்பட்டது. 20க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.

Comments
Post a Comment