பாலின அரசியல் நோக்கில் குறிஞ்சிப்பாட்டு
சங்க இலக்கியப் புனைகளுக்குப் பின்னால் செயல்படும் அந்தரங்க அரசியல் என்பது வீரயுகக் காலத்தின் தேவைக்கேற்ப புற இலக்கியதில் மனித உடலைக் கொண்டாடுவதும், உடைமைச் சமூகத்தின் தேவைக்கேற்ப அக இலக்கியத்தில் உடலை ஒடுக்க முயலுவதும் தானெனப்படுகிறது. உடலை ஒடுக்குவதற்கேற்ற சொல்லாடலைக் (discourse) கட்டமைப்பதைத் தவிர, ஒருத்திக்கு ஒருவன் என்ற ‘குடும்ப அமைப்பை’ வடிவமைக்க வேறு வழி ஏதும் இல்லை என்பது வெளிப்படை. இந்தக் குடும்ப வடிவமைப்பு என்ற வரலாற்று நிகழ்வில் இருந்து பெறப்பட்டதுதான் ஆண் து பெண் என்ற பாலின உறவுமுறை. இந்த உறவுமுறையின் தன்மையை ஆண்நலம் சார்ந்ததாக அமைத்துக்கொள்கிற ‘சொல்லாடல்தான்’சங்க இலக்கியம். இத்தகைய சொல்லாடலைக் குறிஞ்சி நிலத்தைப் பின்புலமாக வைத்துக்கொண்டு கடலலை எழுப்பும் பனித்திரை போல உச்சரித்த மொழியைச் சுற்றிப் பரவும் நுட்பமான தொனிகளை அமைத்துப் பாடுவதில் வல்லவர் எனப் பெயர் பெற்ற கபிலர் எவ்வாறு ‘குறிஞ்சிப்பாட்டில்’ அமைத்துள்ளார் என்பதை விளக்குவதற்கு இக்கட்டுரையில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நிச்சயமென எதுவும் அற்ற வாழ்வு வெளியில், மனித உயிர்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன. இந்த உயிர்களுக்கான ந...