திரைப்பட விமர்சனம்: அப்பா
குழந்தைகளை வளர்க்காதீர்கள் ; உயர்த்துங்கள் '' என்பதன் பின்னணியில் தற்கால கல்வி முறை , பகட்டான வாழ்வுக்கு ஆசைப்பட்டு தங்களின் இயல்பை தொலைத்தவர்களின் நிலை , குழந்தை வளர்ப்பு என பல விஷயங்களை நெஞ்சில் தைக்கிற மாதிரி சொல்லி அதிர வைக்கிறார் "அப்பா. ' மூன்று விதமான அப்பாக்கள். தங்களது பிள்ளைகளின் வளர்ப்பு , கல்வியை எப்படி அணுகுகிறார்கள் என்பதுதான் கதை. சமுத்திரக்கனி , தம்பி ராமையா , நமோ நாராயணன் ஆகியோருக்கு ஒரே சமயத்தில் குழந்தை பிறக்கிறது. அதற்கும் முன்னும் பின்னுமான சம்பவங்களின் உணர்ச்சிக் கோர்வைதான் படம். தகுதி , தராதரம் , மரியாதை என இன்ன பிற மேம்போக்கு அம்சங்கள் பார்த்துப் பிள்ளையை வளர்க்க ஆசைப்படும் தன் மனைவியின் பேச்சை மீறி , தனியார் பள்ளியிலிருந்து தன் மகனை தடம் மாற்றி அவனது இயல்பிலேயே வளர்த்து தனி மனிதனாக உயர்த்துகிறார் சமுத்திரக்கனி. வயிற்றில் வளரும் உங்கள் குழந்தை என்னவாக வரவேண்டும் ? என்கிற மருத்துவரின் கேள்விக்கு , அந்த பிள்ளையின் கடைசி காலம் வரை பட்டியல் வாசிக்கும் அப்பா தம்பி ராமையா. குறித்த தேதியில் அறுவை சிகிச்சை செய்து குழந்தைப் பி...