புத்தகங்களைச் சேர்த்து வைப்பதால் ஒரு பயனுமில்லை, வீட்டில் உள்ள அலமாரி தான் அடைந்து போகிறது அதனால் படித்தவற்றைத் தூக்கி வெளியே போடுங்கள் என்று வீட்டோர் சொல்கிறார்கள், தூக்கி எறிய மனமில்லை, ஆனால் வைத்துக் கொள்ளவும் இடமில்லை , இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது, படிப்பது சரி என்று ஒத்துக் கொள்கிறவர்கள். புத்தகம் வைக்க இடமில்லை என்று சொல்வது என்னவிதமான மனநிலை, இது போல சங்கடங்கள் உங்களுக்கும் வந்திருக்கும் தானே இதை எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்று ஆங்கிலத்தில் டி. எஸ். வெங்கட் என்ற நண்பர் ஒரு மின்னஞசல் அனுப்பியிருந்தார், இதே விசயத்தைப் பற்றி சென்ற முறை கோவை வந்த போது ஒரு நண்பரின் மனைவி என்னிடம் நேரடியாகவே சண்டையிட்டார், அநேகமாக வாசிக்கும் விருப்பம் உள்ள எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரே சிக்கல் இது தான் என்று தோன்றுகிறது வாசிக்க விருப்பமுள்ளவர்கள் அத்தனை பேரின் கனவும் வீட்டில் ஒரு நல்ல நூலகம் அமைக்க வேண்டும் என்பது தான், ஆனால் அதை எங்கே வைப்பது, யார் பராமரிப்பது, எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்விகள் தொடர்ந்து துரத்திக் கொண்டேயிருக்கின்றன ஒருவகையில் புத்தகங்களை வைக...