Thursday, December 15, 2022

மகாகவி பாரதியார் விருது

 திருச்சி,தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு நடத்திய சிறந்த ஆசிரியர்களுக்கான (11.12.2022) விருது வழங்கும் விழா மயிலாடுதுறை கோவிந்தாம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவில் சென்னை,ஜேப்பியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பூ.மு.அன்புசிவா அவர்களுக்கு மகாகவி பாரதியார் விருதை கலைமகள் பள்ளியின் தாளாளர் திருமிகு குடியரசு அவர்கள் வழங்கிய போது எடுத்த படம். அருகில் தனியார் பள்ளியின் கூட்டமைப்பின் தலைவர் முனைவர் லாரன்ஸ் அவ்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளனர்.





Friday, August 05, 2022

மகாகவி பாரதியார் வரலாறு

சுப்பிரமணிய பாரதியார் பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் 1882-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் நாள் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் சின்னசாமி அய்யர், தாயாரின் பெயர் லட்சுமி அம்மாள்.

பெற்றோர் இவருக்கு சுப்பிரமணியன் என்று பெயர் சூட்டினர். இருப்பினும் அப்பெயரைச் சுருக்கி சுப்பையா’ என்றே அழைத்து வந்தனர்.

சிறுவயதிலேயே அறிவோடும் ஆற்றலோடும் விளங்கிய சுப்பையாவை பெற்றோர்கள் உரிய வயதில் பள்ளிக்கு அனுப்பினர். சுப்பையாவுக்கு பள்ளிப்படிப்பில் ஆர்வம் அதிகம் இல்லை bharathiyar history in tamil .

சுப்பையாவுக்கு ஐந்து வயதானபோது அவனது தாயார் லட்சுமி அம்மாள் மறைந்தார். தாயின் மறைவு சுப்பையாவின் மனதை வெகுவாகப் பாதித்தது.

பாரதியார் வரலாறு தாயில்லாமல் சுப்பையாவை வளர்க்கப் பெரிதும் சிரமப்பட்ட அவனது தந்தை சின்னசாமி அய்யர், 1889-ம் ஆண்டு வள்ளியம்மாள் என்ற பெண்மணியை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். வள்ளியம்மாளும் தன் சொந்தப் பிள்ளையைப் போலவே சுப்பையாவிடம் அன்பு காட்டினார்.


சின்னசாமி அய்யருக்கு சுப்பையாவை கலெக்டராக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே அவர் எப்போதும் சுப்பையாவிடம் பள்ளிப்பாடங்களைக் கவனத்துடன் படிக்கும்படி அறிவுறுத்தி வந்தார்.


ஆனால் சுப்பையாவுக்கோ பள்ளிப் படிப்பில் நாட்டமே இல்லை. அவன் இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்து, அக்காட்சிகளில் மனம் மகிழ்ந்திருந்தான்.


தந்தைக்குப் பயந்தும், விளையாட்டுத் தோழர்களும் இல்லாத நிலையில் சுப்பையா பெயரளவிற்குப் புத்தகமும் கையுமாகவே அமர்ந்திருந்தான். அவ்வேளையில் சுப்பையாவின் தோழர்கள் புத்தகங்களே என்றால் மிகையல்ல.


சுப்பையாவின் தந்தை சின்னசாமி அய்யர், எட்டயபுர அரசரின் அரண்மனையில் பணிபுரிந்து வந்தார். சுப்பையாவும் தந்தையுடன் அரண்மனைக்குச் செல்வான். அவ்வேளையில் அரசரின் அவையில் சமஸ்தானப் புலவர்கள் விவாதம் செய்து கொண்டிருப்பர். சுப்பையாவும் அவற்றைக் கவனித்துக் கொண்டிருப்பான்.


புலவர்கள் கூறுகின்ற சொற்களைக் கேட்டு, சுப்பையாவும் இனிமையான பாடல்களை இயற்றினான். அப்போது அவனுக்கு ஏழு வயதே நிரம்பியிருந்தது.


‘பாரதி’ என்னும் பட்டம்

பாரதியார் வரலாறு 1893 ஆம் ஆண்டு ஒருநாள் சுப்பையா எட்டயபுரம் அரண்மனைக்குச் சென்றிருந்தான். அப்போது அரசவைப் புலவர்கள் தந்த ஈற்றடிகளைக் கொண்டு, அற்புதமான கவிதைகளைப் பாடிக் காட்டினான்.


சுப்பையாவின் கவி பாடும் ஆற்றலைக் கண்ட எட்டயபுர அரசர் சுப்பையாவுக்கு ‘பாரதி’ என்னும் பட்டப் பெயரை வழங்கினார். அப்போது சுப்பையாவுக்கு பதினோரு வயதே நிரம்பியிருந்தது.


பாரதி என்கிற சொல்லுக்கு கல்விக் கடவுளான சரஸ்வதியின் அருள் பெற்றவர் என்பது பொருள். அதன் பிறகு சுப்பையா அனைவராலும் பாரதி என்றே அழைக்கப்பட்டான். அப்பெயரே சுப்பையாவுக்குப் பெருமையும் புகழும் பெற்றுத் தந்தது.


பாரதியார் பள்ளிப் படிப்பு 

பாரதிக்கு பள்ளிப் படிப்பில் ஆர்வமே இல்லை. அவருக்கு தமிழ்க் கவிதைகள் இயற்றுவதிலேயே பெரும் விருப்பம் இருந்தது. ஆனால் பாரதியின் தந்தைக்கோ தனது மகன் மேற்படிப்பு படித்து, அரசாங்கப் பணியில் சேர வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.


தந்தையின் மீதிருந்த மரியாதையின் காரணமாக பாரதி 1894 ஆம் ஆண்டு திருநெல்வேலியிலுள்ள இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார். அப்பள்ளியில் மூன்று ஆண்டுகள் படித்த பாரதி ஐந்தாம் படிவம் வரை படித்துத் தேர்ந்தார்.

 

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பாரதி தமிழ்ப் பண்டிதர்களைச் சந்தித்து உரையாடினார். தமிழ் இலக்கியங்கள் பற்றி அறிந்து கொண்டார். படிப்பை முடித்த பாரதி மீண்டும் எட்டயபுரம் திரும்பி வந்தார்.


பாரதியார் திருமணம்

அக்காலக் கட்டத்தில் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் முடித்து விடுவார்கள். சின்னசாமி அய்யரும் தனது மகன் பாரதிக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார்.


அதன்படி, 1897ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் நாள் கடையத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்ற பெண்ணிற்கும் பாரதிக்குத் திருமணம் நடைபெற்றது. அப்போது பாரதிக்கு பதினைந்து வயதும் செல்லம்மாளுக்கு ஏழு வயதுமே நிரம்பிருந்தது bharathiyar history in tamil .


பாரதியார் தந்தையின் மரணமும் காசி பயணமும்

 பாரதியின் தந்தை சின்னசாமி அய்யர் ஓரளவு வசதி படைத்தவர்தான். ஆனால் சில வஞ்சகர்களின் சூழ்ச்சியால் அவர் வறுமை நிலையை அடைந்தார். வறுமையும் மனக்கவலையும் சின்னசாமி அய்யரை நோயுறச் செய்தது. அவர் 1898ஆம் ஆண்டு காலமானார்.


குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த பாரதிக்கு தந்தையின் மறைவு பெரும் மனத்துயரம் தந்தது. தந்தையை இழந்து தவித்துக் கொண்டிருந்த பாரதிக்கு அடைக்கலம் தந்தவர் அவரது அத்தை குப்பம்மாள்தான்.


காசியில் வசித்து வந்த அவர் தன்னோடு பாரதியையும் காசிக்கே அழைத்துச் சென்றார். காசி சென்ற பின்பு பாரதியின் மனம் சிறிது ஆறுதல் அடைந்தது. அவர் காசியிலுள்ள இந்துப் பல்கலைக் கழகத்திலும் சேர்ந்து கல்வி கற்கத் தொடங்கினார்.


எட்டயபுரத்தில் இருந்தவரை தமிழும் ஆங்கிலமும் மட்டுமே அறிந்திருந்த பாரதி, காசியில் சமஸ்கிருதம், இந்தி மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். மேலும் பல்கலைக் கழக நூலகம் பாரதிக்கு மேலைநாட்டு இலக்கியங்களையும் அறிந்து கொள்ள உதவியது.


அவர் மேலைநாட்டு அறிஞர்களான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, பைரன், ஷேக்ஸ்பியர் போன்ற கவிஞர்கள் மற்றும் நாடக நூலாசிரியர்களின் நூற்கள் பலவற்றையும் கற்றார். அதனால் பாரதிக்கு மேலைநாட்டு இலக்கிய அறிவும், ஆங்கில அறிவும் வளர்ந்தது.


இவை அனைத்திற்கும் மேலாக காசி வாழ்க்கை பாரதியின் உள்ளத்தில் இந்திய சுதந்திர வேட்கையை உருவாக்கியது என்றால் அது மிகையல்ல.


வட இந்தியாவில் இந்திய சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றிருந்த வேளை அது. ஆங்காங்கே ஆங்கிலேயரை எதிர்த்து பல அரசியல் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. பாரதியும் அக்கூட்டங்களில் கலந்து கொண்டார்.


பாரதி எட்டயபுரத்தில் வாழ்ந்த அக்காலப் பிராமணர்கள் போலவே மழித்த முகமும், தலையில் குடுமியுமாகவே தோற்றமளித்தார்.


காசியில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட பல பிராமணர்கள் சிலர் தலைமுடியை வெட்டிக் கொண்டு, மீசையும் வைத்துக் காட்சியளித்ததைக் கண்ட பாரதியும் தலைக் குடுமியை வெட்டி, முறுக்கு மீசையும் வளர்த்துக் கொண்டார்.


இவை தவிர சுய மரியாதையின் அடையாளமாக தலைப்பாகை கட்டி வந்தனர். பாரதியும் தலைப்பாகை கட்டும் பழக்கத்தை மேற்கொண்டார்.


காசி மாநகரம் பாரதியின் அறிவை விரிவடையச் செய்தது. அவருக்கு காசி மாநகரம் மிகவும் பிடித்துவிட்டது. காசியிலேயே இனி தான் நிரந்தரமாகத் தங்கிவிடலாம் என்று தீர்மானித்தார். ஆனால் பாரதி மீண்டும் எட்டயபுரம் திரும்ப வேண்டிய அவசியம் வந்தது.


பாரதியார் எட்டயபுரம் திரும்புதல்

பாரதி காசியில் வசித்தபோது இந்தியாவின் பல சமஸ்தானத்து மன்னர்களும் கலந்து கொண்ட பேரவை ஒன்று டில்லியில் நடைபெற்றது. டில்லியில் நடைபெற்ற அக்கூட்டத்தில் கலந்து கொள்ள எட்டயபுர அரசரும் சென்றிருந்தார். பேரவையில் கலந்து கொண்ட அரசர், காசிக்குச் சென்ற அரசர், காசியிலுள்ள ஒரு மடத்தில் பாரதியைச் சந்தித்தார்.


பாரதியுடன் உரையாடிய அரசர், பாரதியின் பன்மொழித் திறமையையும், இலக்கிய அறிவையும் கண்டு பேராச்சரியம் அடைந்தார். அவர் பாரதியைத் தன்னோடு எட்டயபுரம் வந்துவிடுமாறும், அவருக்கு சமஸ்தானத்தில் உத்தியோகம் தரவிருப்பதாகவும் சொல்லி அழத்தார்.

 

அதன்படியே 1902 ஆம் ஆண்டு பாரதி எட்டயபுரம் திரும்பியதோடு, எட்டயபுர் சமஸ்தானத்திலும் பணிக்குச் சேர்ந்தார்.


பாரதியார் வரலாறு எட்டயபுர அரசவைக்கு வரவழைக்கப்படும் பத்திரிகைகளை மன்னாருக்குப் படித்துக் காட்ட வேண்டும்; அரசர் விரும்பும் நூற்களைப் படித்து அவற்றிற்கு விளக்கம் கூற மற்ற வேண்டும்.


மற்ற நேரங்களில் பாரதி அரசவைக்கு வரும் புலவர்கள், சான்றோர்களோடு சேர்ந்து பலவகை நூற்களை ஆராய்ச்சி செய்வார். இவை தவிர மன்னர் வெளியில் செல்லும் போது மன்னருக்குப் பேச்சுத் துணையாகவும் நண்பராகவும் அவரோடு சென்று வருவார். அவ்வளவுதான்!


பாரதி எட்டயபுரம் அரண்மனையில் இரண்டு ஆண்டுகள் இந்தப் பணியையே செய்து வந்தார். பாரதிக்கு சலிப்பு உண்டாயிற்று. வெறுமனே அரசரின் கைப்பாவையாக இருக்க விரும்பாத பாரதி 1904 ஆம் ஆண்டு எட்டயபுர சமஸ்தான வேலையை விட்டு விலகினார்.


பாரதியார் வரலாறு தமிழாசிரியர் பணி

எட்டயபுர சமஸ்தானத்தில் பணிபுரிந்த வேளையிலேயே மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த விவேகபானு என்னும் பத்திரிகையைப் பற்றி அறிந்திருந்தார். புலவர் கந்தசாமி என்பவர் அப்பத்திரிகையை நடத்தி வந்தார்.


அப்பத்திரிகையில் பாரதி இயற்றிய ‘தனிமை இரக்கம்’ என்ற கவிதை 1904ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகியிருந்தது. அச்சு வடிவில் வந்த பாரதியின் முதல் கவிதை இதுவேயாகும்.


ஒருமுறை அவர் மதுரைக்கு வந்திருந்த போது பாரதியின் பன்மொழிப் புலமையை அறிந்து பாரதியை சென்னைக்கு வருமாறு வேண்டிக் கொண்டார். பாரதியாரும் அதற்கு ஒப்புக் கொண்டார் அதன்படி பாரதியும் சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலிருந்து 1904 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விலகி, சென்னைக்குப் புறப்பட்டார்.


பாரதியார் சென்னைக்கு வந்தார்

சென்னைக்கு வந்து சேர்ந்த பாரதியார் சுதேசமித்திரன் நாளிதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். சுதேசமித்திரன் பத்திரிகைப் பணியின் மூலம் பாரதி பத்திரிகை பற்றி பெருமளவில் அறிந்து கொண்டார். பாரதியாரின் திறமையைக் கண்ட சுப்பிரமணிய அய்யரும் பாரதிக்கு ஊக்கவும் உற்சாகமும் ஊட்டினார்.


இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலம் அது. பாரதி இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்து பல பாடல்களை இயற்றினார். பாரதியின் பாடல்கள் ‘தேசபக்திப் பாடல்கள் என்ற பெயரில் சுதேசமித்திரன் பத்திரிகையில் தொடர்ந்து வெளியாகின.


சுதேசமித்திரன் பத்திரிகையில் அரசியல் தலையங்கங்கள் போன்றவற்றை அதன் ஆசிரியர் சுப்பிரமணிய அய்யரே எழுதி வந்தார், கவிதை, கட்டுரை, செய்தித் தொகுப்பு போன்றவற்றை பாரதியார் கூனித்துக் கொண்டார்.


ஸ்ரீமான் சுப்பிரமணிய அலயர் ஆங்கிலேய அரசை எதிர்த்தவராயினும் அவர் மிதவாத அமைப்பைச் சேர்ந்தவராகவே இருந்தார், அவர் ஆங்கிலேய அரசு மீதான எதிர்ப்பைக்கூட வெளிப்படையாக அப்பத்திரிகையில் வெளியிடவில்லை.


திலகர் தலைமை தாங்கிய தீவிரவாத அமைப்பை ஆதரித்து வந்த பாரதியாருக்கு ஸ்ரீமான் சுப்பிரமணிய அய்யர் மீது சற்று மனவருத்தம் உண்டானது.


இந்திய சுதந்திரம் பற்றிய தனது கருத்துக்களைத் தான் சுதந்திரமாக எழுதிட, தனக்கொரு பத்திரிகை வேண்டும் என்று நினைத்த பாரதியார் 1005 ஆம் ஆண்டு சக்கரவர்த்தினி’ என்ற புதிய தேசிய இதழைத் தொடங்கினார்.


பாரதியார் அரசியலில் தீவிரம் – பெண்ணுரிமைச் சிந்தனை

பாரதியார் சக்கரவர்த்தினி இதழைத் தொடங்கிய பிறகு தன்னுடைய கருத்துக்களை சுதந்திரமாக எழுத ஆரம்பித்தார். வங்காளத்தில் பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் என்ற கவிதையை தமிழில் மொழிபெயர்த்து சக்கரவர்த்தினி இதழில் வெளியிட்டார்.


இவ்வேளையில் பாரதியாரின் அரசியலில் ஆர்வமும் அதிகரித்தது. அவர் அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார்.


1905 ஆம் ஆண்டு காசி மாநகரில் நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மாநாட்டில் கலந்து கொண்டார். 1906ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்துகொண்டார் bharathiyar history in tamil .


கல்கத்தா சென்றிருந்த பாரதி அங்கே சுவாமி விவேகானந்தரின் பெண்சீடரான சகோதரி நிவேதிதையைச் சந்தித்தார். அப்போது சகோதரி நிவேதிதை பாரதியிடம், “உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா?” என்று கேட்டார்.


அதற்கு பாரதியாரும், “பெண்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்?” என்று பதில் கூறினார்.


உடனே நிவேதிதை பாரதியிடம், “நீங்கள் உங்கள் நாட்டிற்கு சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறீர்கள்.


ஆனால் உங்கள் நாட்டிலுள்ள பெண்களை அடிமைகளாகவே வைத்திருக் கிறீர்களே! இனியேனும் உங்கள் நாட்டுப் பெண்களுக்கும் சமஉரிமை தாருங்கள்!” – என்று சற்று கண்டிப்புடன் கேட்டுக் கொண்டார்.


நிவேதிதை கூறியது பாரதியின் உள்ளத்தில் பெண்ணுரிமைச் சிந்தனையை உருவாக்கியது. அவர் அன்று முதல் தன் மனைவி செல்லம்மாளையும் வெளியிடங்களுக்கும் அழைத்துச் செல்ல ஆரம்பித்தார். சகோதரி நிவேதிதையின் ஆன்மிகம் பற்றிய பல போதனைகளால் பாரதிக்கு ஆன்மிக ஆர்வமும் உண்டாயிற்று.


பாரதியார் ‘இந்தியா’ பத்திரிகை

மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார் என்பவர் தமிழில் சிறப்பானதொரு பத்திரிகை வெளிக் கொண்டுவர வேண்டும் என்று வெகு நாட்களாக விரும்பினார். அவர் ஒருமுறை பாரதியாரைச் சந்தித்தார். பாரதியாரின் அறிவாற்றலைக் கண்ட அவர் பாரதியிடம் தன் எண்ணத்தைக் கூறினார். பாரதியாரும் அதற்குச் சம்மதித்தார்.


அதன்படி 1906ஆம் ஆண்டு மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார் ‘இந்தியா’ என்னும் பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கினார். பாரதியாரை அப்பத்திரிகையின் பொறுப்பாசியராக நியமித்தார்.


பாரதியார் இந்தியா பத்திரிகையில் இந்திய நாட்டிற்காக உழைத்தவர்களைப் பாராட்டியதோடு, இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் புறக்கணித்தவர்களையும், அரசாங்கத்தை ஆதரித்தவர்களையும் கடுமையாக விமர்சித்தும் கட்டுரைகள் எழுதினார்.


பாரதியாரின் கைத்திறத்தால் ‘இந்தியா’ பத்திரிகை பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசியல் கருத்துக்கள் பாமா மக்களை எளிதில் சென்றடைய வேண்டுமென்று விரும்பிய பாரதியார் அரசியல் கருத்துக்களை கேலிச்சித்திரமாக (கார்ட்டூன்) வரைந்து வெளியிட்டார்.


இந்தியப் பத்திரிகையில் கேலிச் சித்திரங்களை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் பாரதியாரே ஆவார். மேலும், ‘பாலபாரத்’ என்னும் ஆங்கிலப் பத்திரிகையையும் பாரதியார் வெளிக் கொணர்ந்தார் bharathiyar history in tamil .


பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த பாரதியார், சென்னைக் கடற்கரையில் அரசியல் கூட்டங்களையும் நடத்தினார். அக்கூட்டங்களின் மூலம் இந்தியச் சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினார்.


இவ்வேளையில் டாக்டர் நஞ்சுண்டராவ், வி.சர்க்கரை ரெட்டியார், எஸ். துரைசாமி அய்யர், சுரேந்திரநாத் ஆர்யா போன்ற தலைவர்களோடு பாரதியாருக்கு நட்பு கிட்டியது.


பாரதியார் சென்னை ஜன சங்கம்

பாரதியார் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பால கங்காதரத் திலகரின் தீவிரவாதப் போக்கையே ஆதரித்து வந்தார்.


1907 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் நாள் ‘பஞ்சாப் சிங்கம்’ என்று போற்றப்பட்ட லாலா லஜபதிராய் ஆங்கில அரசால் நாடுகடத்தப்பட்டார். இதனைக் கண்டித்து மே மாதம் 17 ஆம் தேதி சென்னையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. பாரதியும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.


இவ்வேளையில் பாரதியாருக்கும் வ.உ.சிதம்பரனாருக்கும் நட்பு உண்டானது. முதல் சந்திப்பிலேயே அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதையும் நட்பும் கொண்டனர்.


இருவரும் மாலைநேரம் திருவல்லிக்கேணி கடற்கரைக்குச் சென்று இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றியும், வங்காள விடுதலை வீரர்கள் பற்றியும் கலந்துரையாடினர். பாரதிக்கும் வ.உ.சிக்கும் இடையில் நிலவிவந்த நட்பு அவர்களது இறுதிக்காலம் வரை நீடித்து என்றால் மிகையாகாது.


பாரதியார் வரலாறு 1907ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரசின் இருபத்து மூன்றாவது மாநாடு குஜராத்திலுள்ள சூரத் நகரில் நடைபெற்றது.


இம்மாநாட்டில் தமிழகத்திலிருந்து அனைத்து காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் செய்தி வெளியானது. பாரதியாரும் வ.உ.சிதம்பரனாரும் இணைந்தே இம்மாநாட்டில் பங்கேற்கச் சென்றனர்.


அங்குதான் பாரதியார் அரவிந்தர் மற்றும் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் போன்ற அரும்பெரும் தலைவர்களைச் சந்தித்து அத்தலைவர்களின் நட்பையும் பெற்றார்.


சூரத் மாநாட்டில் பங்கு கொண்ட பின் பாரதியாரின் மனதில் மேலும் இந்திர சுதந்திர வேட்கையும், ஆங்கிலேயரை எப்படியும் இந்தியாவைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற உறுதியும் ஏற்பட்டது.


பாரதியார் சூரத்திலிருந்து திரும்பி வந்தவுடன் ‘சென்னை ஜனசங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இந்த அமைப்பினர் ஒவ்வொரு ஊருக்கும் சென்றனர். அவ்விடமெங்கும் பிரச்சாரம் செய்தனர்.


“இந்தியர்கள் அனைவரும் இந்தியர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்!” என்று முழங்கினார். மேலும் பாரதியார், வ.உ. சிதம்பரனாரின் சுதேசக் கொள்கைகளின் அடிப்படையில் சுதேசிப் பொருட்கள் மட்டுமே அடங்கிய ‘பாரத பந்தர்’ என்ற பெயரால் கடை திறக்கவும் ஏற்பாடு செய்தார்.


பாரதியார் இயற்றிய நூல்கள்

இக்காலக் கட்டத்தில் பாரதியார் தான் இயற்றிய பாடல்களை நூல் வடிவில் வெளிக் கொணர விரும்பினார். 1907 ஆம் ஆண்டில் மிதவாத காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த வி.கிருஷ்ணசாமி அய்யர் என்பவர், பாரதியார் இயற்றிய மூன்று தேசியப் பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து சுதேச கீதங்கள்’ என்ற தலைப்பில் சிறு நூலாக வெளியிட்டார்.


அந்நூல்கள் பள்ளிக்கூடங்களுக்கும், மேலும் பல தன்னார்வ அமைப்புகளுக்கும் இலவசமாகவே விநியோகிக்கப்பட்டது. அச்சில் வெளிவந்த பாரதியாரின் முதல் நூல் இதுவாகும் bharathiyar history in tamil .


பாரதியார் இந்நூலில் மேலும் தான் இயற்றிய சில பாடல்களைச் சேர்க்க விரும்பினார். அதன்படி 1908ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதினான்கு பாடல்கள் கொண்ட ‘சுதேச கீதங்கள்’ என்று தலைப்பிட்ட நூலை தன் சொந்தச் செலவிலேயே வெளியிட்டார். இவ்வேளையில் பாரதியார் இந்தியா’ பத்திரிகையில் ‘ஞானரதம்’ என்ற உரைநடைக் காவியத்தை எழுதி வந்தார்.


பாரதியார் வரலாறு சுயராஜ்ய தினம்

1908ஆம் ஆண்டு திலகரின் ஆதரவாளர்கள் நாடெங்கும் சுயராஜ்ய தினத்தைக் கொண்டாட முடிவு செய்தனர். சென்னையில் பாரதியார் அந்நிகழ்ச்சியைக் கொண்டாட முடிவெடுத்தார். சென்னை ஜனசங்கத்தின் சார்பில் பல இளைஞர்களைக் கொண்டு வந்தே மாதரம்’ என்று முழங்கியபடி ஊர்வலம் ஒன்றையும் நடத்தினார்.


தூத்துக்குடியில் நடைபெற்ற சுயராஜ்ய தின விழாவிற்கு ஆங்கிலேய அரசு வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் தலைமை ஏற்றனர். அவர்கள் இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தது.


இதனையறிந்த பாரதியார் மிகவும் ஆத்திரம் கொண்டார். அவர் உடனே சென்னையிலிருந்து பாளையங்கோட்டைக்கு விரைந்து சென்றார். நண்பர்கள் இருவரையும் சிறையில் சந்தித்தார்.


வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா மீதான வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பாரதியார் நீதிமன்றத்திற்குச் சென்று அவர்கள் இருவருக்கும் ஆதரவாக சாட்சி கூறினார்.


இருப்பினும் ஆங்கிலேய அரசு அவர்களை விடுதலை செய்யாமல் சுப்பிரமணிய சிவாவிற்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்தது.


வ. உ. சி க்கும் சுப்பிரமணிய சிவாவிற்கும் வழங்கப்பட்ட தண்டனையைக் கண்டித்து பாரதியார் இந்தியா பத்திரிகையில் தலையங்கம் ஒன்றை எழுதி வெளியிட்டார்.


வ.உ.சி வழக்கில் நீதிபதியாக இருந்தவர் பின்ஹே என்ற ங்கிலேயர், “பாரதியாரின் பாடல்களைக் கேட்டால் செத்த பிணமும் உயிர்பெற்று எழுந்துவிடும். அடிமைப்பட்ட தேசம் எதுவாயினும் அது ஐந்து நிமிடங்களில் புத்துயிர் பெற்று நிமிர்ந்து நிற்கும்” – என்று கூறினார்.


பாரதியின் பாடல்களால் இந்திய மக்களிடையே தோன்றும் வீரத்தைக் கண்ட ஆங்கில அரசு, இந்தியாவில் எவ்விடத்திலும் பாரதியாரின் பாடல்களைப் பாடக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் பாரதியாரின் பாடல்களைப் பாடுவது ராஜ துரோகம் என்ற சட்டமும் கொண்டு வந்தது.


ஆனால் ஆங்கிலேய அரசின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத பாரதியார் தொடர்ந்து இந்தியா பத்திரிகையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கட்டுரைகளும், பாடல்களும், கேலிச்சித்திரங்களும் வெளியிட்டு வந்தார்.


பாரதியாரின் இச்செய்கையைப் பொறுத்துக் கொள்ள இயலாத ஆங்கில அரசு பாரதியாரின் எழுத்துக்களுக்கு முட்டுக்கட்டை போடத் தீர்மானித்தது.


ஆங்கில அரசு 1908ஆம் ஆண்டு புதிய பத்திரிகைச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. பத்திரிக்கச் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு ஒரு பொய்யான காரணமும் கூறப்பட்டது.


அதாவது, “சுதேச மொழிகளில் வெளிவரும் பத்திரிகைகள் இந்திய மக்களின் அறிவை வளர்ப்பதாகச் சொல்லி அரசுக்கு எதிரான எண்ணங்களைத் தூண்டி விடுகின்றன’ – என்பதே அரசு கூறிய காரணமாகும்.


புதிய பத்திரிகைச் சட்டத்தை இந்தியா பத்திரிகையின் மீது திணித்து, பாரதியாரை எப்படியேனும் கைது செய்துவிடலாம் என்பது ஆங்கிலேய அரசின் எண்ணமாக இருந்தது.


ஆனால் பத்திரிகைச் சட்டப்படி, ஒரு பத்திரிகையின் வெளியீட்டாளரையே விசாரணை செய்ய முடியும். அதன்பிறகுதான் ஆசிரியரின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்,


இந்தியா பத்திரிகையின் வெளியீட்டாளராக சீனிவாசன் என்பவரின் பெயரே பதிவு செய்யப்பட்டிருந்தது.


எனவே ஆங்கிலேய அரசு பாரதியாருக்குப் பதில் வெளியீட்டாளரான சீனிவாசனைக் கைது செய்து, ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. அதனால் இந்தியா’ பத்திரிகை வெளிவர இயலாமல் போய்விட்டது.


பாரதியார் அரவிந்தர் நட்பு

மகான் அரவிந்தர் என்று போற்றப்பட்ட அரவிந்த கோஷ் முதலில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் ஆவார். பின்னாளில்தான் ஆன்மிகத்தில் முழுக்கவனம் செலுத்தினார். ‘கர்மயோகின்’ என்ற ஆங்கில மாதப் பத்திரிகையையும் அவர் வெளியிட்டு வந்தார்.


பாரதியார் அப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, 1909ஆண்டு டிசம்பர் மாதம் ‘கர்மயோகி’ என்ற பெயரில் வெளியிட்டார். மேலும் அரவிந்தர் வங்காள மொழியில் வெளியிட்டு வந்த ‘தர்மா’ என்ற பத்திரிகையையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.


இப்பத்திரிகையில் பாரதியார் அரசியல் செய்திகள் எதையும் வெளியிடாமல் இந்தியக் கலாச்சாரம், பண்பாடு, ஆ ன்மிகம் சம்பந்தமான செய்திகளை வெளியிட்டார். கூடவே சமஸ்கிருத மொழியிலுள்ள பகவத் கீதையின் சுலோகங்களுக்கு எளிய தமிழ் விளக்கங்கள் எழுதி அவற்றையும் வெளியிட்டார்.


‘விஜயா’ என்ற தமிழ்ப் பத்திரிகையும், ‘பாலபாரதா’ என்ற ஆர் ங்கிலப் பத்திரிகையையும் பாரதியார் வெளியிட்டு வந்தார். இவை தவிர ‘சித்ராவளி’ என்ற மாத இதழும், சூர்யோதயம்’ என்ற வார இதழும் பாரதியாரின் மேற்பார்வையில் வெளியாயின.


ஆனால் பெரும்பாலான பத்திரிகைகள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியால் ஒரு ஆண்டிற்குள் நின்று போயின. தொடர்ந்து பொருளாதார நெருக்கடியால் தவித்த ‘இந்தியா’ பத்திரிகையும் 1910ஆம் ஆண்டு மார்ச் மாதத்தோடு நின்று விட்டது. இதனால் பாரதியாரின் மனம் வருந்தியது.


பாரதியார் கண்ணன் பாட்டு’, ‘குயில் பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’ போன்ற காவியங்களை இயற்றிக் கொண்டிருந்தார். பகவத் கீதை சுலோகங்களுக்கு தமிழில் விளக்கம் எழுதி வந்தார். பாரதியார் இப்படைப்புகளைப் படைத்தது 1912ஆம் ஆண்டு காலக்கட்டமாகும்.


எல்லோரும் ஓர் இனம்

அக்காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்கள் ஆங்கில அரசுக்கு எதிராக மட்டுமே போராடிக் கொண்டிருந்தனர். ஆனால் பாரதியாரோ உள் நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருந்த தீண்டாமை, சாதிபோதம் போன்ற சமூக அவலங்களையும் எதிர்த்து குரல் கொடுத்தார்.


அக்காலத்தில் உயர்சாதியினர் மட்டுமே கோயில்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர் தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.


உயர்சாதியினர் பயன்படுத்தும் குளங்கள் மற்றும் கிணறுகளை தாழ்த்தப் பட்டவர்கள் பயன்படுத்தக் கூடாது என்பன போன்ற பல கொடுமைகள் நடந்து வந்தன. பாரதியார் இவற்றைக் கண்டு மனம் கொதித்தார்.


பாரதியார் பிராமணக் குலத்தில் பிறந்திருந்த போதும் பூணூல் அணிவதை விட்டுவிட்டார். ‘எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம்’ என்ற சமுதாயம் மலர அவர் விரும்பினார்.


பாரதியார் வரலாறு 1913ஆம் ஆண்டின் ஒருநாள் கனகலிங்கம் என்ற ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அழைத்தார். உயர்சாதியினர் குளிக்கும் குளத்தில் அவரை குளிக்கச் செய்து, அவருக்குப் பூணூல் அணிவித்தார்.


அவருக்கும் பிராமணர்கள் அறிந்து வைத்திருந்த வேத மந்திரங்களைக் கற்றுக் கொடுத்ததோடு “இனி நீயும் பிராமணன்தான்!” என்று அந்த இளைஞரிடம் கூறினார்.


பாரதியாரின் இச்செயலைக் கண்டு பலர் அவரைப் பாராட்டினர். ஆனால் சாதிப்பித்து பிடித்த பலரோ, ‘பாரதியார் பிராமணக் குலத்திற்கு தீங்கு செய்துவிட்டார்’ என்று அவர் மீது குற்றம் சாட்டினார்கள்.


பாரதியார் வரலாறு பாரதியார் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை. அவர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமின்றி, பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களோடு நட்பு பாராட்டியதோடு அவர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்து வந்து அவர்களோடு சரிசமமாக உணவருந்தினார்.


பாரதியார் புதுச்சேரியில்

புதுச்சேரியில் வசித்த பெரும்பாலான நாட்களில் ஆன்மிகத்தில் கவனம் செலுத்தி வந்தார் என்று கண்டோம். அவர் பகவத்கீதை மற்றும் பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பெற்ற நாலாயிரத் திவ்விய பிரபந்தம் போன்ற வைணவ நூல்களைக் கற்று வந்தார்.


அதனால் வைணவத்தின் மீது அவருக்கு ஈடுபாடு அதிகரித்தது. பாரதியார் வைணவர் போலவே நெற்றியில் திருநாமம் இட்டுக் கொண்டார்.


ஒருநாள் பாரதியார் தனது நெருங்கிய நண்பரான குவளையூ கிருஷ்ணமாச்சாரியாருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது பாரதியார் குவளையூராரிடம், “நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்று கூறுகிறோமே! அந்த நாலாயிரம் பாசுரங்களையும் எத்தனை ஆழ்வார்கள் பாடினார்கள்?” என்று கேட்டார்.


அதற்கு குவளையூரார், “பன்னிரெண்டு ஆழ்வார்கள் சேர்ந்து பாடிய பாடல்கள் தான் நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆகும்” என்று பதில் கூறினார்.


உடனே பாரதியார், “கிருஷ்ணா! பன்னிரெண்டு பேர் சேர்ந்து நாலாயிரம் பாடல்கள் பாடினார்கள். ஆனால் நான் ஒருவனே ஆறாயிரம் பாடல்களைப் பாடப் போகிறேன்!” – என்று கூறினார்.


பாரதியார் கூறியதைக் கேட்ட குவளையூர் கிருஷ்ண மாச்சாரியார், “ஐயா! அது உங்களால் முடியாது. காரணம் இது கலி முற்றிவிட்ட காலம். அதிகபட்சமாக மனிதன் ஆயுள் நூற்றியிருபது ஆண்டுகள் தான். அதனால் அந்தக் காலக்கட்டத்திற்குள் உங்களால் ஆறாயிரம் பாசுரங்களைப் பாடி முடிக்க முடியாது!” என்று பதில் கூறினார்.


ஆனால் பாரதியாரோ, “இல்லையில்லை. நான் நிச்சயம் ஆறாயிரம் பாசுரங்கள் பாடி முடிப்பேன். நீயும் பார்க்கத்தான் போகிறாய்!” – என்று நம்பிக்கையோடு கூறினார். கூறியது போலவே பாரதி ஆறாயிரம்’ என்ற தலைப்பில் பாடல்களை இயற்றவும் தொடங்கினார்.


ஆனால் பாரதியார் தனது வாழ்நாளில் அறுபத்தாறு பாசுரங்களை மட்டுமே இயற்ற முடிந்தது. பிற்காலத்தில் அப்பாடல்கள் ‘பாரதி அறுபத்தாறு’ என்ற தலைப்பில் வெளியானது.


பாரதியார் எப்படி இறந்தார்

பாரதியார் சென்னையில் வசித்து வந்த காலத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்று, பெருமாளை வணங்கி வருவது வழக்கம். அக்கோயிலில் யானை ஒன்று இருந்தது. பொதுவாகவே பாரதியாருக்கு வாயில்லா பிராணிகளிடம் அன்பு அதிகம்.


மகாகவி பாரதியார் நாள் தோறும் அந்த யானை உண்பதற்கு தேங்காய், பழம் போன்றவற்றை வாங்கித் தருவார். யானையும் பாரதியாரிடம் மிகவும் அன்பாகவே பழகி வந்தது.


1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம். ஒருநாள் பாரதியார் வழக்கம்போல யானைக்குப் பழம், தேங்காய் வாங்கிக் கொண்டு யானையின் அருகில் சென்றார். அன்று யானைக்கு மதம் பிடித்திருந்ததை அறிந்த பலர் பாரதியாரிடம் யானையின் அருகில் செல்ல வேண்டாம் என்று எச்சரித்தார்கள். ஆனால் பாரதியாரோ அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.


இத்தனை நாளும் மிகுந்த நட்போடு பழகிய யானைதானே என்று நினைத்த பாரதியார் யானையின் அருகில் சென்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் யானை, பாரதியாரைத் தனது தும்பிக்கையால் தூக்கி வீசியது. ஏற்கனவே உடல்நலிவுற்றிருந்த பாரதியார், தூக்கி எறியவும் அப்படியே மூர்ச்சையாகிவிட்டார்.


அதைக்கண்ட பலரும் பதறித் தவித்தனர். இருப்பினும் யானையின் அருகில் சென்று பாரதியாரைத் தூக்கிவிட அனைவரும் அஞ்சினார்கள்.


ஆனால் பாரதியின் நண்பர் குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார், யானையைக் குறித்து கொஞ்சமும் அஞ்சாமல் பாரதியாரின் அருகில் சென்று அவரைத் தூக்கினார்.


மேலும் சிலரும் சேர்ந்து பாரதியாரை இராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிலநாட்கள் பாரதியார் அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இரண்டொரு தினங்களில் அவருக்குக் குணமும் கிட்டியது.


பாரதியார் ஓரளவு உடல்நிலை தேறிவிட்டார். அவர் அடுத்து வந்த நாட்களில் சுதேசமித்திரன் பத்திரிகை அலுவலகம் சென்று தன் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்.


பாரதியார் ஆகஸ்ட் மாதம் 2ஆம் நாள் ஈரோட்டிற்கு அருகில் உள்ள கருங்கல் பாளையம் என்னும் ஊருக்குச் சென்று, மனிதனுக்கு மரணமில்லை’ என்ற பொருளில் மிக அருமையான சொற்பொழிவையும் ஆற்றிவிட்டுத் திரும்பினார்.


அதே நாளில் வாய்க்கரை என்னுமிடத்தில் ‘இந்தியாவின் எதிர்கால நிலை’ என்ற தலைப்பில் சிறப்பான சொற்பொழிவாற்றினார். மேற்கூறிய இரண்டு சொற்பொழிவுகளுமே பாரதியார் ஆற்றிய இறுதிக் சொற்பொழிவுகளாகும் bharathiyar biography in tamil.


சென்னைக்கு வந்த நாள் முதலே பாரதியாரின் உடல்நிலை நலிவுற்றிருந்தது. கோயில் யானை வேறு தாக்கியதால் பாரதியாரின் உடல்நிலை மிகவும் மோசமாகி வந்தது.


1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கி, பாரதியாருக்கு வயிற்றுக்கடுப்பு நோய் பீடித்து உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. செப்டம் 12ஆம் நாள், திங்கட்கிழமை அதிகாலை ஏறக்குறைய இரண்டு மணி அளவில் பாரதியார் இவ்வுலகைவிட்டு மறைந்தார். பாரதியார் மறைந்தபோது முப்பத்தி ஒன்பது வயது மட்டுமே நிரம்பியிருந்தது.


தனது குறுகிய கால வாழ்க்கையிலும் தாய்நாட்டின் மீதிருந்த பக்தியால் எண்ணற்ற தேசப்பாடல்களை இயற்றினார் அவர்.


பாரதியார் தேசியக்கவி

தாய்நாட்டிற்குள்ளேயே மக்களைப் பீடித்திருந்த சாதிவெறி, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், அச்சம், கோழைத்தனம் உள்ளிட்ட எண்ணற்ற நோய்களைத் தீர்க்கவல்ல மாமருந்தான பாடல்களையும் அவர் பாடிச் சென்றார். அதனால்தான் இன்றளவும் பாரதியார் தேசியக்கவி என்றும் மகாகவி என்றும் மக்களால் போற்றப்படுகின்றார்.


உலகம் போற்றும் பாடல்களை இயற்றி, இந்திய மக்களின் மனதில் அறிவையும், துணிவையும், வீரத்தைப் புகட்டிய மகாகவி பாரதியார் மறைந்துவிட்டாலும், அவரது பாடல்கள் அவரது புகழை என்றும் நிலைத்து நிற்கச் செய்யும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை

ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கை வரலாறு

ஆபிரகாம் லிங்கன் அறிமுகம் 

ஆபிரகாம் லிங்கன் சுய முன்னேற்றத்துக்கான அடிப்படைப் பண்புகளும், வெற்றிக்கான தகுதிகளும் ஒரு சேரப் பெற்றவர் ஆபிரகாம் லிங்கன். அவர் நற்பண்பு களைத் தேடிப் பெற்றவர், தகுதிகளை வளர்த்துக் கொண்டவர்.

மரம் வெட்டுவதில் இருந்து, நாட்டை ஆள்கிறது வரை அத்தனைக்கும் பொருத்தமான ஆளாய் இருந்தார் அவர். அமெரிக்கக் குடியரசின் பதினாறாவது அதிபரான லிங்கன் சுயமாய் படித்து முன்னுக்கு வந்தவர். 

மிகவும் எளிமையான குடும்பத்தில் 1809-ஆம் ஆண்டு அவர் பிறந்தார். விறகுக் கட்டை அல்லது மிருகக் கொழுப்பை எரியவிட்டு அந்த வெளிச்சத்தில் படிப்பார். புத்தகங்களை இரவலாய் பெற்றுவர வெகு தொலைவு நடந்து சென்றிருக்கிறார்.

படிப்பதில் அத்தனை ஆர்வம், சொந்த மாய் புத்தகம் வாங்க முடியாத அளவுக்கு வறுமை! அப்படிப் படித்துதான் அவர் வழக்கறிஞரானார். தான் காதலித்த பெண்ணை மணக்க முடியாத ஓர் அதிர்ஷ்க்கட்டை அவர். 


ஆபிரகாம் லிங்கன் திருமண வாழ்க்கை 

மரத்தாலான சிறு குடிசையில் பிறந்த லிங்கன் மேரிடாட் என்கிற பணக்கார வீட்டுப் பெண்ணை மணந்ததும் அவருடைய துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

யானையைக் கட்டித் தீனி போடுகிற மாதிரி அந்தப் பெண்ணின் செலவுகளுக்குத் தேவையான பணத்தைச் சம்பாதித்துத் தர அவர் வெகு வாய் பாடுபட்டிருக்கிறார்.

 

ஆனாலும், ஒருவிதத்தில் அவருடைய உயர்வுகளுக்கு அவள் தெரிந்தோ தெரியா மலோ காரணமாயிருந்திருக்கிறாள். ஆம், ‘மீண்டும் முயற்சி செய், இன்னும் உயர்ந்த பதவிக்குச் செல்’ என்று அவள்தான் அவரை உந்திக் கொண்டேயிருந்தாள்.


அவள் ஊதாரிப் பெண், எதிலும் திருப்தியடையாதவள். லிங்கனுக்குப் பிறகு ஒரு மனநோயாளிகள் இல்லத்தில் தன்னுடைய இறுதிக் காலத்தைக் கழிக்கிற அவல நிலைக்கு அவள் தள்ளப்பட்டது வேறு கதை.


லிங்கன் பேச்சாற்றல் மிக்கவர். செனட் தேர்தலின் போது கெட்டிஸ்பர்க் என்ற இடத்தில் அவர் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. அவருடைய எளிமை குறிப்பிடத்தக்கது.


தாம் மண் தரையில் வசித்த நாட்களை கடைசிவரை அவர் மறந்துவிடவில்லை. வெள்ளை மாளிகையில் இருந்தபோதும் தம்முடைய ஷூக்களுக்குத் தாமேதான் பாலீஷ் போட்டுக் கொள்வார்.


மணவாழ்க்கை அவருக்கு மனவருத்தமளிப்பதாகவே இருந்தது. அவருடைய தளபதி ஸ்டாண்டன் கூறுவான், ‘அழக்கூடாதே என்பதற்காக அவர் சிரித்தார்’ என்று. லிங்கன் மரணமடைந்த தறுவாயில் அவருடைய மகன் ‘டெட்’ சொன்னான், ‘என் தந்தை கட்டாயம் சொர்க்கத் துக்குத்தான் செல்வார்.


நரகத்தை அவர் இங்கேயே அனுபவித்தாயிற்று’ என்று. லிங்கன் ஒரு சமயம் மதபோதகர் ஒருவருடைய பிரார்த்தனைக் கூட்டத்துக்குச் சென்றிருந்தார். மதகுரு கூட்டத்தினரை நோக்கி ‘உங்களில் சொர்க்கத்துக்குப் போக விரும்புகிறவர் கையைத் தூக்குங்கள்’ என்றார். லிங்கனைத் தவிர எல்லாரும் கையை உயர்த்தினர். 


எங்கே போவதாய் உத்தேசம்’ என்று லிங்கனிடம் ‘நீங்கள் சொர்க்கத்துக்குப் போக விரும்பாவிட்டால் வேறு போதகர் கேட்டார். நான் ‘செனட் (சட்டமன்ற மேலவை) மத லிங்கன்.


அப்படியோர் உயர்ந்த குறிக்கோளை ஏற்டிற்குச் செல்ல விரும்புகிறேன்’ என்று பதிலளித்தார் படுத்திக் கொண்டிருந்தார் அவர். அவருக்குத் தம்முடைய குறிக்கோளைத் தவிர வேறெதுவும் தேவைப் பட்டிருக்கவில்லை.


ஆபிரகாம் லிங்கன் குழந்தை மரணம் 

தம்முடைய குழந்தைகளைப் பெரிதும் நேசித்தார் அவர். ராபர்ட், வில்லி, டெட் என மூன்று பையன்கள், அவருடைய இரண்டாவது மகன் வில்லி கடின உழைப்பாளி, நன்றாய் படிப்பான்.


ஆனால் காய்ச்சல் வந்து அகால மரணமடைந்தான். லிங்கன் வாழ்வில் அதுபோல் எத்தனையோ சோகங்கள். அவர் நேர்மையானவர், தம்முடைய பதவியைத் தவ றான விதத்தில் பயன்படுத்திப் பணம் சேர்க்கவில்லை.


தாம் சிக்கனமாய் இருந்து மிச்சப்படுத்திய ஊதியத்தில் தான் மனைவி பட்ட கடன்களை அவர் அடைத்தார். 


ஆபிரகாம் லிங்கன் குடியரசு தலைவர் 

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்கக் குடியரசுத் தலைவராய் பதவி வகித்தபோது தென் அமெரிக்காவில் நிறவெறிக் கொடுமை தலை விரித்தாடியது. மனிதனை மனிதன் அடிமையாக்கும் அவலம் கண்டு மனம் கொதித்தார் அவர்.


வட அமெரிக்க மக்களின் ஆதரவோடு தென் அமெரிக்கா வுடன் ‘உள்நாட்டு யுத்தம் நடத்தி 35,00,000 அடிமை களை அவர் விடுவித்தார். நீக்ரோக்களின் விடுதலைக்குப் பாடுபட்ட முதல் அமெரிக்கர் அவர்.


தம்முடைய சாதனைகளைப் பற்றி அவர் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. ‘முட்புதர்கள் இருந்த இடத்தில் முட்களை அகற்றி ரோஜாவை மலர வைத்தான் 


இவன் என்று வரலாறு இரண்டு வரிகள் என்னைப் பற்றி எழுதினால் போதும் என்று அவர் கூறுவார். ‘என்னுடைய பேனா முனை ஒரு நிரபராதியை தூக்குத் தண்டனையில் இருந்து விடுவிக்க முடியும் என்கிறபோது அனாவசியமாக அவனைச் சாகடிக்க மாட்டேன்’ என்று தன்னுடைய நாட்குறிப்பில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


1865-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் தம்முடைய மனைவியோடு நடன நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காய் சென்றிருந்தார் லிங்கன். கணவர் போரில் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்காக மேரி ஏற்பாடு செய்திருந்த கொண்டாட்டத்தில் ஒரு பகுதிதான் நடனம்.


அப்போ ஜான் வில்க்ஸ் பூத் என்கிற நிறவெறியன் லிங்கனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். இன்று லிங்கன் மெமோரியல் கட்டடத்தில் சிலை யாய் அமர்ந்திருக்கும் லிங்கன் இலட்சோபலட்சம் அமெரிக்க இளைஞர்களால் மரியாதையுடன் வணங்கப்படுகிறார்.


எளிமை, கம்பீரம், விடாமுயற்சி உள்ள அந்தப் பெருந்தலைவரின் வாழ்க்கையை முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் முன்மாதிரியாய் கொண்டதில் வியப்பில்லை. லிங்கன் அத்தனை வெற்றிக்கும், புகழுக் கும் முற்றிலும் பொருத்தமானவராகவே இருந்திருக்கிறார்.


பல தோல்விகளுக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றியைக் கண்டவர் அவர். அவருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கவனிக்கும் போது அது எத்தனை உண்மை என்பதை நீங்களே உணர்வீர்கள். 


ஆபிரகாம் லிங்கன் தோல்விகள் 

‘1816-ல் அவருக்கு ஏழு வயதாயிருக்கும் போது அவருடைய குடும்பம் ஊரைவிட்டே வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற தந்தையுடன் மகனும் வேலைக்குச் சென்றார். 


1881-ல் அவர் வீட்டை விட்டு வெளியேறி தொழில் தொடங்கினார். தொழிலில் தோல்வி. . 1832-ல் இல்லினாய்ஸ் மாநில சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு தோல்வி. 1833-ல் நண்பரிடம் கடன் வாங்கி தொடங்கிய தொழிலில் நஷ்டம்.


1000 டாலர் கடனை அடைக்க 17 ஆண்டுகள் கஷ்டப்பட்டிருக்கிறார். 1835 – காதலி ஆன்ரட் லட்ஜ் இறந்துவிட்டாள். 1837 – பழைய சிநேகிதி மேரி ஓவன்ஸிடம் திருமணக் கோரிக்கை வைத்துத் தோற்றார்.


1838-ல் சட்டப்பேரவை சபாநாயகராக முயன்று தோல்வி. 1840-ல் நகராட்சித் தேர்தலில் தோல்வி 1843-ல் மாமன்ற(Congress)த் தேர்தலில் தோற்றார். 1846-ல் மாமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவர். 1848-ல் மறுதேர்தலில் பதவியை இழந்தார்.


1849-ல் ஸ்பிரிங் ஃபீல்டு (சொந்த ஊர்) ஜெனரல் லேண்ட் ஆபீஸ் கமிஷனர் பதவிக்குப் போட்டி யிட்டு தோற்றார். 1854-ல் அமெரிக்க செனட்டிற்கு நின்று தோற்றிருக்கிறார்.


1856-ல் துணை அதிபர் தேர்தலில் ரிபப்ளிகன் பார்ட்டி வேட்பாளராய் போட்டியிட்டு தோல்வி. தோற்றார். 1858-ல் மீண்டும் செனட்டிற்கு நின்று மீண்டும் . 1860-ல் அமெரிக்கக் குடியரசுத் தேர்தலில் போட்டி யிட்டு வென்றார். நாட்டின் அதிபரானார்.

ஆபிரஹாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

காலங்கள் பல கடந்தாலும், உலக மக்களின் நினைவில் ஆபிரஹாம் லிங்கன் இருக்க காரணம் அவரது ஆட்சித்திறமை மட்டும் காரணமல்ல. யாருக்கும் தீமை செய்யாமல், சட்டம் மற்றும் விதிகளை மீறாமல் அவர் நடந்து கொண்டதே. இதற்கு உதாரணமாக, தன் மகன் படித்த பள்ளி ஆசிரியருக்கு ஆபிரஹாம் லிங்கன் எழுதிய கடிதத்தை குறிப்பிடலாம். இதோ அந்த கடிதம்...


'அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் மனிதர்களில் பகைவர்களுக்கு இடையில் நண்பர்களும் இருக்கிறார்கள் என்பதை என் மகனுக்கு கற்றுக் கொடுங்கள்.


அவனுக்கு பொறாமை குணம் வந்துவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து சுருங்கிக் கொள்வது, கோழைத்தனம் என்பதை புரியவையுங்கள். புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.


வானில் பறக்கும் பறவைகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும், பசுமையான மலை அடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க அவனுக்குகற்றுக் கொடுங்கள்.


ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை பள்ளியில் அவனுக்கு கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.


மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்கு பயிற்சி கொடுங்கள்.


அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். எனினும் உண்மை என்னும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுத்த வேண்டும். துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு கற்றுக்கொடுங்கள். போலியான நடிப்பை கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள். அவனை அன்பாக நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம் காட்டி சார்ந்திருக்கவைக்க வேண்டாம்.


தவறு கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு கற்றுக்கொடுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...


இதில் உங்களுக்கு சாத்தியமான தையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

                                                                                                                              இப்படிக்கு

                                                                                                          ஆபிரஹாம் லிங்கன்.


ஆசிரியரும் வகுப்பறைச் செயற்பாடுகளும் - அதன் பிரதிபலிப்பும்

ஆசிரியரும் வகுப்பறையும்

ஆசிரியர்கள் தனிமனிதனையும் சமூகத்தையும் முழு உலகினையும் கூட உருவாக்குபவர்களாவர். ஆசான்களின்றி கல்விச் செயன்முறை நடைபெறலாம். ஆனால் பூரணமான முழுமையான கல்வியைப் பெற்றுக் கொள்வது என்பது இயலாத காரியமாகும். ஒரு சிற்பியானவன் எவ்வாறான நுணுக்கங்களைக் கொண்டு சிலை ஒன்றினை செதுக்குகின்றானோ? அது போலவே ஆசிரியரும் சிறந்த எண்ணங்களையும், சிந்தனைகளையும், நுணுக்கங்களையும் கொண்டு ஒரு தனி மனிதனை செதுக்குகின்றார்.


எண்ணங்கள் சிந்தனைகள் நோக்கங்கள் எவ்வளவு சிறந்தனவாக இருப்பினும், நிர்வாகம் எவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாக இருப்பினும், கற்பதற்கான வளங்கள் எவ்வளவு ஏராளமானதாகவும் காலத்துக்கு ஏற்றனவாகவும் இருப்பினும் அவற்றால் மாணவர்கள் அடையும் பயன் ஆசிரியர்களை பொறுத்தே ஆகும். மாணவர்களின் அறிவு மட்ட வளர்ச்சி ஆசிரியர்களது அறிவு மட்ட வளர்ச்சி என்பவற்றுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்ற கோட்பாடும் காணப்படுகின்றது.


ஆசிரியரும் வகுப்பறைச்  செயற்பாடுகளும்

ஆசிரியரும் வகுப்பறைச்  செயற்பாடுகளும்


வினைத்திறனுடைய ஆசிரியர் ஒருவர் மாணவரின் தேவைகளைக் கனிப்பவராகவும், மாணவர்கள் பிரச்சினைக்கு உள்ளாகும் போது அவர்களை நன்கு புரிந்துகொண்டு செயற்படுபவராகவும் இருக்க வேண்டும். வகுப்பறையில் மாணவர்கள் வெறுமனே கற்பவர்கள் என்ற எண்ணப்பாடின்றி அவர்கள் கற்பதற்கு ஏற்றவகையிலான வசதிகளை உருவாக்கி தொடர்ந்து அவதானிப்பவராகவும் விளங்குதல் ஆசிரியர் மாணவர்களுக்கிடையேயான உறவினை சிறக்கச் செய்யும்.


மாணவர் தமது இளம்பராயத்தில் ஆசிரியரானவர் தமக்கு பிடித்தவராகம், அன்பை பொழிபவராகவும் தம் மீது அக்கறை காட்டுபவராகவும், தம்மை மதிப்பவராகவும் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். பாடசாலைக்கு வரும் ஒவ்வொரு மாணவர்களும் வெவ்வேறு விதமான குடும்ப சூழல், அழுத்தங்கள், பின்னனிகள், சகபாடிகள், வறுமை, மன அழுத்தங்களோடு பாடசாலைக்கு வருகின்றனர். இத்தகைய அழுத்தங்கள் பற்றி அவர்கள் வெளியில் தெரியப்படுத்துவதில்லை. இந்நிலைமையை ஆசிரியரானவர் தாமாக அறிந்து கொள்ளவேண்டியவராக காணப்படுகின்றார். ஆசிரியர் இதன் போது அவர்களது தேவைகளை உணர்ந்து, அவர்களது குறைகளை செவிமடுத்து அதற்கேற்றாற் போல் அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பராக இருக்க வேண்டும்.


மாணவர்கள் எப்போதும் ஆசிரியரிடம் உயர்ந்தளவு எதிர்ப்பார்ப்புக்களுடன் கூடியவர்களாகக் காணப்படுவார்கள். தற்காலத்தில் கல்வியின் தேவை அதிகரித்து காணப்படுவதுடன் போட்டியும் நிலவுகின்றமையே காரணமாகும். ஆகையினால் ஆசிரியரானவர் எப்போதும் கற்பவராக இருத்தல் அவசியமாகிறது. மாணவர்களின் உயர் எதிர்ப்பார்ப்புக்களுடன் கூடியவர்களாக ஆசிரியர்கள் செயற்படும் பொழுது, மாணவரின் கல்விப் பெறுபேறுகள் அதிகரிக்கும். வீட்டுச்சூழல் பெற்றோருடைய கல்வியறிவு  மாணவர்களின் கற்றலில்  செல்வாக்குச் செலுத்துகின்ற போதிலும், பாடசலைகளில் ஆசிரியர்கள் வழங்கும் தூண்டுதல்கள் இவற்றை வெற்றி கொள்ள உதவும். வகுப்பறையில் மாணவர்கள் எல்லோரும் வெற்றியடைவீர்கள் என்ற சாதகமான மனப்பான்மையுடனும், நம்பிக்கையோடும் மாணவர்களை செயற்படுத்தும் போது மாணவர்கள் ஆசிரியர்கள் மீது கொண்டுள்ள எதிர்ப்பார்ப்புக்கள் வெற்றித்தரும்.


ஆசிரியர் எப்போதும் மாணவர்களிடம் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான விடயம் மாணவரின் ஒழுக்கக் கடப்பாடு ஆகும். ஒழுக்கம், கட்டுப்பாடு பற்றிய கல்வியை பாடசாலை பருவத்திளேயே மாணவர்களிடத்தில் வழங்க முடியும் அந்நவகையில் இச் செயற்பாடானது வகுப்பறையில் ஒவ்வொரு ஆசிரியரினதும் கட்டாய கடமையாகின்றது. ஒழுக்காற்று செயல் தொடர்பாக ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையே தற்காலத்தில் முரண்பட்ட தன்மையே காணமுடிகிறது. 


பொருத்தமான முறையினை கையாண்டு ஒழுக்க கல்வியை மாணவர்களுக்கு வகுப்பறையில் வழங்குவது கட்டாயமானது. அப்போதுதான் எதிர்காலத்தில் ஒழுக்கசீலமான சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆசிரியரானவர் மாணவர்களை எப்போதும் ஊக்கப்படுத்துதல் வேண்டும். மாணவர்கள் கற்றல் சார்ந்த விடயங்களில் ஈடுபடுவதற்கான காலம் மற்றும் சக்தி ஆகியவற்றை ஊக்கலே தீர்மானிக்கின்றது. 


வகுப்பறையில் மாணவருக்கான ஊக்குவிப்பினை வழங்கும் போது மாணவர்களின் கல்விப் பணிகளில் ஆர்வத்தை தூண்டுதல், கற்கும் விடயங்களுக்கான பின்னூட்டல், மாணவரின் தன் நம்பிக்கையை வளர்த்தல், மாணவரின் சுய கற்றல் திறனை அதிகரித்தல், மாணவரின் துணிவாற்றலை ஊக்குவித்தல் போன்றனவற்றிகற்கு துணையாக அமையும் என புரோபி என்பவர் கூறுகின்றார். 


சுதந்திரமாகக் கற்றல், கூட்டுக்கற்றல், கற்பித்தல் சாதனங்களைப் பயன்படுத்துதல், குறிப்பாக கற்பித்தல் நுட்பங்களை பயன்படுத்துதல், சுயச்சிந்தனையை வளம்படுத்துதல் ஆகியவற்றை வகுப்பறையில் மாணவர்களுக்கு ஒழுங்கமைக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறையில் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் ஆர்வத்தினை தூண்டுபவராக செயற்படுவர். வகுப்பறை முகாமைத்துவத்தினை உயரிய மட்டத்தில் பேணுபவராகவும் விளங்குவார்.


மாணவர்கள் தொடர்பாக ஆசிரியர்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் செல்வாக்குச் செலுத்துகின்றன. நீண்டகாலச் சேவையும் அனுபவமும் கொண்ட ஆசிரியர்கள் கூட மாணவர்களைப் பார்க்கும் போது அவர்களுடைய புறத்தோற்றத்தினைக் கொண்டு வகைப்படுத்தி வருகின்றனர். நீண்டகால அவதானமும் அடிப்படைத் தகவல்களும் இன்றி மாணவர்களை வகைப்படுத்துதல் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.


மாணவன் படிக்கமாட்டான், பெற்றோரும் படிப்பறிவு அற்றவர்கள், கல்விபற்றி பெற்றோருக்கு ஒன்றும் தெரியாது, அவன் வாழும் சூழல் சரியில்லை என்ற காரணங்கள் பலவற்றைக் கூறி மாணவர்களின் கல்விசார் முயற்சிகளுக்குத் தடைபோடும் ஆசிரியர்களைப் பாடசாலைகளில் சாதாரணமாகக் காணலாம். பணக்காரப் பிள்ளைகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சில ஆசிரியர்களையும் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான எண்ணங்கள், பிரிவினைகளுடனும் வகுப்பறைக்குச் செல்லும் ஆசிரியர்கள் எல்லா மாணவர்களையும் ஒன்றாக அவதானிக்காமல் செயலாற்றுகின்றனர். 


மாணவர்களுடன் ஆசிரியர் பேசுகின்ற முறைமை, அவருடைய உடை,நடை,மொழி, அசைவுகள், நடுவு நிலையுடன் செயற்படுதல், மகிழ்ச்சிகரமாக பேசுதல் என்னும் விடயங்களில் கவனம் செலுத்துவதில்லை. தேவையின்றி மாணவரை பேசுதல், அச்சுறுத்துதல், சுயக்கட்டுப்பாட்டினை இழந்து பொறுத்தமற்ற தண்டனையை வழங்குதல், நம்பிக்கை இழப்பு போன்றவற்றால் அநேகமான பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையிலான உறவு நிலை பாதிக்கப்படுகின்றது. இந் நிலைமைக்கு காரணம் ஆசிரியர் மாணவர்களிடம் காட்டுகின்ற வேறுபாட்டுத் தன்மையேயாகும்.


நகர மற்றும் கிராமப்புறங்களில் பாடசாலைக்கு வருகைத்தர மறுக்கும் நடத்தைக் கோலமும் மாணவர்களிடையே உள்ளது. இவை வகுப்பறையில் அல்லது பாடசாலையில் இடம்பெறும் சில நிகழ்வுகளில் இருந்தே என்பதை நாம் ஊகிக்கலாம். ஆசிரியரின் அச்சுறுத்தல்கள் மற்றும் தண்டனைகளாலும் இவை தோன்றலாம். ஆசிரியரின் செயலின் காரணமாக ஒரு பிள்ளை பாடசாலைக்கு வரவில்லையென வெளிப்படையாகக் கூறுவானானால் ஆசிரியர் தனது கல்வியில் அவர் கற்றுக்கொண்ட உளவியல் மற்றும் ஆலோசனை கூறுகலால் எவ்வித பயன்களும் கிடைக்கவில்லை என்பதோடு, ஒரு மாணவனின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றனர் என்றே கூறவேண்டும்.


பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் வழங்கும் கல்விசார் பாடங்களும், பயிற்சிகளும் தனிப்பட்ட முiறியில் ஆசிரியர்களின் தகைமைகளை அதிகரிக்கவும், பதவி உயர்வுகளுக்கும், ஊதிய அதிகரிப்பிற்கும் பயன்படுகின்றனவே தவிர மாணவர் மேம்பாடு குறித்துப் பயன்படுத்தப்படுவது மிகவும் குறைவு. உயர்தொழிலாகக் கருதப்படும் ஆசிரியர் தொழிலை இறுதிப் புகலிடமாக கருதி அத்தொழிலுக்கு வந்து சேர்ந்த பின்னர், இவர்கள் பெற்றுக்கொண்ட கல்வியையும், பயிற்சியையும் உணர்வுப்பூர்வமாக மாணவர் மேம்பாட்டிற்காக வினைத்திறனுடன் பயன்படுத்தும் விருப்பினையும், ஆர்வத்தினையும் விருத்தி செய்துகொள்ள வேண்டும்.

ஆகவே இங்கு குறிப்பிட்ட விடயங்களினைக் கருத்திற்கொண்டு பாடசாலையிலும் வகுப்பறையிலும் ஆசிரியர்கள் செயற்படுவார்களானால் மாணவரின் கற்றல் மேம்படுவதோடு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கிடையிலான உறவு ஒரு உன்னத நிலையை அடையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

வகுப்பாசிரியரின் பணியும் வகுப்பறையில் ஆசிரியர் பேணவேண்டிய ஆவணங்களும்

பல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும்  நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின்  தேவையற்ற  நடத்தைகளைக் கட்டுப் படுத்தும் வகையிலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு அணுகுமுறையே வகுப்பறை முகாமைத்துவமாகும். வகுப்பறையானது நன்கு கட்டமைக்கப்பட்ட கற்றல் கவிநிலையை ஏற்படுத்துவதாகவும், தீய நடத்தைகளைக்  கட்டுப்படுத்தி, கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக் கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இவற்றை அடைவதற்கேற்ற தெளிவாக வரையறை செய்யப்பட்ட சட்ட விதிகளைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும்.

ஆசிரியர் ஓர் முகாமையாளராக பல பொறுப்புக்களை கொண்டுள்ளார்.

திட்டமிடல்.

ஒழுங்கமைத்தல்.

வழிப்படுத்தல்.

தொடர்பாடல்.

அறிக்கைப்படுத்தல்.

தலைமைத்துவம் உண்டாக்கல்.

வரவு செலவுக்குட்படுத்தல்.

வகுப்பறைகளை மேம்படுத்துவதில் வகுப்பாசிரியரின் பணியும்,கவனிக்கவேண்டிய விடயங்களும்

வகுப்பறையினை மேம்;படுத்துவதில் ஆசிரியர் கொண்டுள்ள பொறுப்புக்களை நாம் பின்வரும் விடயங்களினூடாக ஆராய்ந்து நோக்கலாம்.

1. ஆசிரியரின் தலைமைத்துவப் பொறுப்புக்கள்.

குழுவினது புலனை அல்லது சிந்தனையைக் கற்றலுக்குக் கொண்டுவருதல்.

கற்றலுக்கான பயனுள்ள சூழலை உருவக்குதல்.

விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளல்.

கற்றல் செயற்பாட்டில் ஈடுபட மாணவர்களை ஊக்குவித்தல்.

ஓர் ஆசிரியர் ஜனநாயகப் போக்கைக் கொண்டவராக அமைதல் வேண்டும்.

ஓர் ஆசிரியர் மாணவரை இனங்காண பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை மேற்பார்வை,பரிசோதனை,எழுத்து,வாய்மொழிப் பரீட்சை,பிரதிபலிப்பு அறிக்கை போன்றவை ஆகும்.

ஓர் ஆசிரியர் பல்வேறு தேவைக் கொள்கைகளை பூர்த்தி செய்பவராக அமைதல் வேண்டும். 

உதாரணம் : உடலியல் தேவை,பாதுகாப்புத் தேவை,அன்புத் தேவை,கணிப்புத் தேவை, சுயதிறனில் நிறைவுத் தேவை

2. வகுப்பறைகளின் பௌதிக நிலையை மேம்படுத்துதல்:

வகுப்பு ஆசிரியர் தனது மாணவர்கள் பயன்படுத்துகின்ற பௌதிக வளங்கள் தொடர்பாக கவனத்தில் கொள்ளவேண்டும்.                                                                                              

வகுப்பறையில் காணப்படும் பௌதிக வளங்கள் பயன்படுத்த முடியாத வகையில் உடைந்திருக்கின்றனவா? அல்லது மாணவர்களின் தொகைக்கு  பற்றாக்குறையாக உள்ளனவா? அல்லது மாணவர்களின் வயது, உயரம் என்பவற்றிகேற்ப பொருத்தமற்றவையாக உள்ளனவா? என்பதில் கவனத்தைச் செலுத்தி இவற்றை மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகளை வகுப்பு ஆசிரியரே மேற்கொள்ளுதல் வேண்டும்.

வகுப்பறைக்கு போதியளவு வெளிச்சம், காற்றோட்ட வசதிகள், மழை நேரங்களில் ஏற்படும் நீர்க்கசிவுகள் அல்லது தூறல், மற்றும் வகுப்பறைச் சூழலை மாசுபடுத்தும் புற ஒலிகளின் தலையீடுகள் என்பன இருக்குமாயின் அவற்றைக் கவனித்து, இது தொடர்பாக அதிபர், மற்றும் பெற்றோர்களுடனான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவற்றிற்கான தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுத்தல். மாணவர்களின் சுய ஆக்கங்களைக் கொண்டு வகுப்பறைச் சுவர்களில் காட்சிப்படுத்தி அழகுபடுத்துவது ஒவ்வொரு மாணவரையும் அங்கீகரிப்பதுடன் அவர்களை ஊக்குவிப்பதாகவும்  அமையும். 

3. மாணவர் நடத்தைகளில் கவனம் செலுத்துதல்:

தனிநபர்களை,குழுவைஇனங்காணுதல்             

மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகச் செயற்படும் பொழுதோ அல்லது  தனியாக இருக்கும் பொழுதோ அவர்களுடைய நடத்தைகளை அவதானிக்க வேண்டும்.                                                                             மாணவர்கள் குழுக்களாக இயங்கும் பொழுது அவர்களுடைய நடத்தைகள், மற்றவர்களுடன் பழகும் தன்மை பயன்படுத்தப்படும் பேச்சு மொழிகள் என்பவற்றை அவதானித்து வரவேண்டும். அதேவேளை ஒவ்வொருவரினதும் நண்பர்கள் தொடர்பான விழிப்புணர்வையும் ஆசிரியர்கள் மேற்கொண்டு அதற்கேற்ப உரிய வழிகாட்டல்களைச்  செய்ய வேண்டும்.

பெற்றோருடன் உரையாடல்:                                         

வகுப்பு ஆசிரியருக்கும், வகுப்பறையில் உள்ள பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் இடையில் நல்லுறவு பேணப்படுதல் வேண்டும். பிள்ளைகள் தொடர்பான முன்னேற்றம், அவர்களது நடத்தைகள், பழக்கவழக்கங்கள், பேசும் மொழி தொடர்பான கலந்துரையாடல்களை பெற்றோர்களுடன் மேற்கொள்ளவேண்டும். மேலும் சிறப்பான உறவு முறையை வளர்க்க வேண்டு மானால் வகுப்பு ஆசிரியர் தனது மாணவர்களின் வீட்டிற்குச் சென்று பெற்றோருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், வீட்டுச் சூழலையும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான நல்லுறவைப் பேணுவதன் மூலம் பின்வரும் அனுகூலங்களை ஆசிரியர் அடைந்து கொள்வர்.

குடும்பச் சூழலை அறிந்து கொள்வதால், ஒவ்வொரு பிள்ளையினதும் தேவைகளை ஆசிரியர் இனங்காண்பதால், அந்த மாணவர்களின் தேவைகள் நிறைவு செய்வதற்கும், அவர்கள் மீது சிறப்பான அக்கறையைக் காட்டவும் வாய்ப்புக்கள் ஏற்படும் இவ்வாறான அணுகு முறைகளினால், வகுப்பறையின் அமைதி, நிறைந்த கவிநிலை, மாணவர்களின் ஒழுக்கம் என்பன சிறப்பாகப் பேணப்படும்.

இவ்வாறான கலந்துரையாடல் பிள்ளை மையமாக இருப்பதால் பிள்ளைகளின் குறைபாடுகள், நிறைவுகள், அவர்களது தேவைகள் பற்றிய மதிப்பீடுகள் மேற் கொள்ளப்படும். இதனால் குறித்த வகுப்பில் உள்ள எல்லா மாணவர்கள் மீதும் ஆசிரியர்களின் கவனம் ஈரக்கப்படும். இதனால் ஒட்டு மொத்தமாக அனைத்து மாணவர்களும் உயர்ந்த விழுமியங்களைப் பெற்றுக் கொள்வதுடன் கல்வியில் உயர்ந்த அடைவு மட்டத்தையும் அடைந்து கொள்வர். இது பாடசாலைகளில் நடைமுறையில் உள்ள தரவட்டம் போன்று வகுப்புத் தரவட்டமாக இருப்பதால் அந்த வகுப்பின் தரமும் உயரும்.

4. நிபுணத்துவ ஆசிரியர் உதவிகள் பெறல்:                      

தேவை ஏற்படும் இடத்து சில துறை சார்ந்த நிபுணத்துவ ஆற்றல் கொண்ட ஆசிரியர்களையோ அல்லது பாடசாலைக்கு வெளியில் இருந்து வளவாளர் களையோ அதிபரின் உதவியுடன் ஒழுங்கு செய்து வகுப்பில் விசேட செயலமர்வுகளை நடத்துதல். இது ஒரு மாற்றத்திற்கான வழியாகவும் இருக்கும்.

5. கற்றல் மேம்பாடு.                                    

வகுப்பறையின் பிரதானமான குறிக்கோளாக அமைவது மாணவர்களின் கற்றலை மேம்பாடடையச் செய்தலே.  அந்த வகையில் மேலே குறிப்பிட்ட விடயங்களுடன் கற்றல் மேம்பாட்டிலான கவனம் ஒவ்வொரு ஆசிரியரினாலும் எடுக்கப்பட வேண்டும். கற்பித்தல் செயற்பாடு திட்டமிடப்பட்ட முறையிலான ஒழுங்கு, இலகுவாக மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலான எளிமை, புதியவிடயங்களைக் கொண்ட உள்ளடக்கம், மாணவர் மகிழ்ச்சியுடன் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய தன்மை என்பவற்றைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அதேவேளை மாணவர்களின் வயது மற்றும் வகுப்புக்குப் பொருத்தமானதாகவும் அமையுமானால் வகுப்பறை முகாமைத்துவம் என்பது மகிழ்ச்சிகரமான சூழலில் காணப்படும்

6. கற்றல் இடர்ப்பாடு இனங்காணல்:

ஒரு பிள்ளை கற்றலின்போது எய்த வேண்டிய தேர்ச்சியை எய்த இயலாமல் தத்தளிக்கும் நிலையே கற்றல் இடர்ப்பாடு ஆகும். இதற்கான காரணங்களை இனங்காண்டு தீர்த்து வைக்கும் தலையாய பொறுப்பு ஆசிரியருடையதாகும்.

7.. கற்றல் சூழலை மாற்றுதல்:

மாணவர்களிடையே ஏற்படும் கற்றல் இடர்ப்பாடுகளை நீக்குவதற்கு ஒரு  ஆசிரியர் வகுப்பறைச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.  அத்துடன் கற்றல் கற்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய இடர்ப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒழுங்கு முறைகளைக் கையாள வேண்டும்.

8. கற்றல் குழக்களை உருவாக்கல்:

வகுப்பில் கற்றலுக்கான சூழலை ஏற்படுத்தவேண்டுமாயின் மாணவர் குழுக்களுக் கிடையே ஒத்த தன்மையை ஏற்படுத்தவேண்டும். வெவ்வேறு சிந்தனை,  இலக்கு, மாறுபட்ட குடும்பச் சூழல் போன்றவற்றிலிருந்து வரும் பிள்ளைகளுக்கிடையே ஒருங்கிசைவை ஏற்படுத்தும்  வகையில் அவர்களைக் குழுக்களாக்கி கற்பதற்கான குழு ஒருமைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு வகையான கற்றல் செயற்பாட்டை வழங்கவேண்டும். அவற்றை பின்னர் குழு ரீதியாக முன்னளிக்கைப்படுத்த வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு தடவை குழு உறுப்பினர்களை மாற்றி புதிய ஒரு கற்றல் குழுவை உருவாக்கவேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாகக் கற்றல் குழுக்கள் உருவாக்கப்படும் பொழுது ஒவ்வொருவரிடமும் தாமாகவே கற்க வேண்டும் என்ற உந்து சக்தி உருவாக்கப்படும்.

5. மாணவர் செயற்பாடுகளை ஊக்குவித்தல்:

ஒரேவகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் எல்லோரும் ஒரே தரத்தில் உள்ளவர்கள் என்ற எடுகோளுடனேயே வகுப்பு ஆசிரியர் தனது கற்பித்தல் செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டும். பழைமைமுறையான ஆசிரியர் மையக் கல்வியில் இருந்து மாணவர் மையக் கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். இதனால் மாணவர்களுக்கான சமமான வாய்ப்பு, ஊக்குவிப்பு, வினைத் திறன் மிக்க செயற்பாடுகள், தன்னம்பிக்கை வளர்தல், குழுச்செயற்பாட்டில் ஆர்வம் ஏற்படுதல் என்பன வளர்த்தெடுக்கப்படும்.  

6. மதிப்பீடு:

கற்றலையும் கற்பித்தலையும் முன்னேற்றுவதற்கு உதவும் வகையில் மாணவர்களின் அறிவு மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல். ஒரு வகுப்பறையில் மேற்கொள்ளப்படும் மதிப்பீடு அளவு சார் மதிப்பீடாகவோ அல்லது பண்பு சார் மதிப்பீடாகவோ இருக்கலாம். இவ்வாறான மதிப்பீடுகள் ஒரு மாணவனின் அடைவு மட்டத்தை உயர்த்த உதவுதுடன் பாடத் தேர்ச்சி தொடர்பான  தெளிவையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். மதிப்பீடு என்பது மாணவர்களை ஊக்குவித்து முன்னேற்றமடைய வைக்கவேண்டுமே ஒழிய அவர்களைப் பலவீனப்படுத்துவதாகவோ அல்லது நம்பிக்கை இழக்கவைப்பதாகவோ இருக்கக்கூடாது.   

ஒவ்வொரு மாணவரும் தமது கற்றல்  திறனையும், தான் எங்கே நிற்கின்றேன் என்பதையும் தாமே மதிப்பிட்டுக் கொள்ளுதலே சுயமதிப்பீடாகும். இவ்வாறான சுய மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்களையும், ஆலோசனை களையும் வகுப்பு ஆசிரியர் வழங்கவேண்டும். இவ்வாறான சுய மதிப்பீடுகள் அடுத்த கட்டத்தில் தான் என்ன செய்யவேண்டும் என்ற சரியான தீர்மானத்தை எடுப்பதற்கும் உதவும்.

7. உடனடியான பின்னூட்டல்:     

கற்றலையும் கற்பித்தலையும் மேலும் முன்னேற்றமடையச் செய்வதற்கு உதவக் கூடிய ஒரு முக்கியமான செயற்பாடாக அமைவது பின்னூட்டலாகும். அதுவும் எப்பொழுதும் பின்னூட்டல்கள் உடனடியாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். காலம் தாழ்த்திய பின்னூட்டல்கள் பயனற்றதாகவே போய்விடும். இவ்வாறு பின்னூட்டல் களை மேற்கொள் வதன் மூலம் தமது தவறுகளைத் தாமே திருத்திக் கொள்வதற்கும் சரியானவற்றைச் சரியாகவும் சரியான நேரத்திலும் செய்வதற்கும் உதவும். அதேவேளை அடைவு மட்டத்தை உயர்த்திக் கொள்ளவும் முடியும். மிக இலகுவான, வினாக்களை மாணவர்களிடம் வினாவுதல் என்பதும் மிக எளிமையான பின்னூட்டலாக அமையும்.

8. இணைப்பாட விதான செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல்:

பாடசாலையில் நடைபெறுகின்ற கலை நிகழ்வுகள்,போட்டிகள்,விளையாட்டு,பரீட்சைகள்,சுற்றூலா போன்ற பல்வேறுபட்ட இணைகலைத்திட்ட செயற்பாடுகளில் மாணவர்களை பங்காற்றச் செய்வதன் மூலம் அவர்களின் திறமைகள்,எண்ணங்கள்,சிந்தனைகளை போன்றவற்றை வளர்த்தெடுத்தல்...

மேற்படி விடயங்களினூடாக ஆசிரியர் தான் கொண்டுள்ள தலையாய கடமைகள், பொறுப்புக்கள் எவை என்பதனை மிக எளிமையாக புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆசிரியரின் பொறுப்புக்களும்,கடமைகளும்

ஆசிரியர் மாணவரின் மூன்றாவது பெற்றோர் ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நிலையான நேர்மறையான, முன்னுதாரணமான முன்மாதிரியாக எப்போதும் இருக்க வேண்டும். ஆசிரியரானவரான பிள்ளைக்கு அடிப்படை அறிவு, திறன், மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வதுடன் இன்னும் பல பொறுப்புக்களையும் கடமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளார். அவ்வாறு அனுதினமும் ஆற்றும் பொறுப்புக்களையும் கடமைகளையும் ஒருபோதும் வரையரை செய்து கூற முடியாது. 

தினமும் ஆசிரியரால் ஆற்றப்படும் கடமைகளும் பொறுப்புக்களும்

பிள்ளையினது அறிவு,  திறன்,  மனப்பாங்கு,  பலம்  மற்றும் பலவீனங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் மதிப்பிடுதல்.

வகுப்பறை விதிகளை திட்டமிடல்,  நடைமுறைப்படுத்தல்.

மாணவர்களை தயார்படுத்துதல். (பரீட்சை, போட்டிகள்,விளையாட்டு, ஏனையவை)

மாணவர் முன்னேற்றம் தொடர்பாக பெற்றோருக்கு தெரிவித்தல். (கற்றல், பரீட்சை புள்ளிகள், ஒழுக்கம், செயற்பாடுகள்)

மேற்பார்வை செய்தல்.

வகுப்பறைச் செயற்பாடுகளைகளை ஒழுங்கமைத்து மேற்கொள்ளுதல்.

       போன்ற பல கடமைகளை தினமும் பொறுப்பாக நிறைவேற்றுகின்றார்.

புதிய மாணவன் என்பவன் எந்த பயிரையும் பயிர்செய்யக்கூடிய விளைநிலம் போன்றவன். அதிலே நல்ல பயிர்களை போல நல்ல எண்ணங்களை விதைத்து விளைநிலமாக்க வேண்டிய கடமை ஆசியரின் கடமையாகின்றது. அதற்காக மாணவர்களிடம் ஒழிந்திருக்கும் திறன்கள் மற்றும் அவனது பலம் பலவீனம் என்பவற்றை அறிந்து அவனுக்குரியவற்றை சரியாக வழங்கும் போது சிறந்த அறுவடையை பெற்றுக்கொள்ள முடிகின்றது.


பிள்ளையின் மனம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றினை போன்றது. சரியான பாதையில் அவர்களை திருப்பிவிட்டால் அதற்கும் மற்றவர்களுக்கும் பயன் அதேபோலவே தான் மாணவனின் மன ஓட்டத்தினை  நல்ல பாதையில் ஓடவிட்டு கரையாக ஆசிரியர் இருப்பது பொறுப்பு. 


அவ்வாறு மாணவனை சரியான பாதையில் திருப்புவதற்காக உரியவாறு திட்டமிட்டு செயற்படுத்துவதன் மூலமே மாணவனின் பாதையை முறையாக அமைக்க முடிகின்றது. உதாரணமாக கற்பித்தல் செய்றபாட்டில் ஈடுபடும் போது மாணவனது மனநிலை தொடக்கம் அவனுக்கு பயன்படுத்தும் சகல விடயங்கள் தொடர்பாகவும் முறையாக திட்டமிட்டு செயற்படுத்துவதன் மூலம் சரியான திசையில் மாணவனை அழைத்து செல்வது ஆசிரியரின் பொறுப்பாகும்.


மாணவனை எதிர்காலத்தில் சிறந்த வளமிக்கவனாக தயார்படுத்தும் கடமை ஆசிரியருடையதாகும். தொழிநுட்ப உலகில் பிள்ளைகள் புள்ளியை அடிப்படையாகக் கொண்டு மிகச் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக் கொள்வதனை நோக்காமாகக் கொண்டு கற்கின்றனர் அதற்கு அவர்களை தயார்படுத்துவது ஆசிரியராவார். மாணவன் எதிர்கொள்ளவிருக்கும் பரீட்சைக்கு உரியவாறு மாணவனை தயார்படுத்தி சிறந்த பெறுபேற்றை பெறச் செய்வது ஆசிரியரின் கடமையாகின்றது. 


ஒரு மாணவனின் முன்னேற்றம் தொடர்பாக எப்போதும் பெற்றோரும் அறியும் வகையில் தொடர்பினை பேணுதல் ஆசிரியரின் பொறுப்பாகின்றது. வகுப்பறையில் மாணவன் கற்றலில் கொண்டுள்ள முன்னேற்றம் ஆர்வம் தொடர்பாகவும் பெற்றோருக்கு அறியத்தருவதன் மூலம் எப்போதும் மாணவனின் முன்னேற்றத்தினை நிலையானதாக பேணுவது தலையாய கடமையும் பொறுப்புமாகும்.


வீட்டில் இருந்து புறப்பட்ட மாணவன் வீடு போய்ச் சேரும் வரை ஆசிரியரே அவனது மூன்றாம் நிலை பெற்றோர் ஆவார்கள். பாடசாலைக்குள் காலடி வைத்ததும் மாணவனை முழுமையாக கவனித்து பாதுகாத்துக் கொள்பவர்கள் ஆசிரியர்கள் என்ற வகையில் அவ் வேளையை இலகுபடுத்துவதற்காக சில விதிமுறைளை உருவாக்குகின்றனர். 


இவ் விதி முறைகள் யாவும் வகுப்பறைக்கும் வகுப்பறைக்கு வெளியேயும் அனைவருக்கும் பொருந்தும் வகையிலே உருவாக்கப்படுகின்றது. இதன் மூலம் பாடசாலைக்குள் தன்னிச்சையாக செயற்படுவதனை தடுக்கின்றது. அதனால் மாணவன் சூழல் நேயமிக்க மாணவனாக மாறுகின்றான். இவ்வாறாக ஆசிரியர்கள் கைக்கொள்ளும் விதிமுறைகள் மாணவனை ஓழுக்கமுள்ளவனாகவும், நேர்மையானவனாகவும் சிறந்த மாணவானாக உருவாக்கின்றது. ஆகையினால் சமுகத்தில சிறந்த மாணவனையும், மனிதனையும் உருவாக்குவது ஆசிரியரின் பொறுப்பாகின்றது.


மாணவர்களின் ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் அவதானமாக மேற்பார்வை செய்வதும் கடமையாகின்றது. கற்றல், இணைகலைத்திட்ட செயற்பாடுகள், பழக்கவழக்கம், பண்பாடு, வகுப்பறை, மைதானம் போன்ற பலவிடயங்களில் அவதானித்து மேற்பார்வை செய்து தேவையானவற்றை அவர்களுக்கு போதித்தல் கடமையாகின்றது. 


ஒவ்வொரு மாணவனும் வேறுபட்ட மனநிலையை கொண்டிருப்பவர்கள். அவர்கள் அனைவரும் ஒன்று சேரும் போது வெவ்வேறுபட்ட எண்ணத்தினையும் சிந்தனையும் வெளிப்படுத்த முனைவார்கள். அதனால் மாணவர்களிடையே முரண்பட்ட நிலை உருவாகலாம் அதனால் தொடர்ந்து ஒவ்வொரு செய்றபாட்டின் போதும் மேற்பார்பார்வை செய்து நன்மை தீமைகளை எடுத்துக்காட்டி நல்வழிப்படுத்துவது கட்டாயமாகின்றது.


நல்வழியில் கைபிடித்துச் செல்லும் ஆசிரியர் மாணவனை அவனது எதிர்காலத்திலும் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கும் துணைபுரிகிறார். அதற்காக வகுப்பறை செயற்பாடுகளில் மாணவனை ஆர்வத்துடன் ஈடுபடுத்தி கற்றலில் முழுமையடையச் செய்து சிறந்த பெறுபேற்றை பெற்று சமூகத்தில் சிறந்த பிரசையாக வாழ்வதற்கு உதவி புரிகிறார். இதற்காக வகுப்பறையில் ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் அவனது வெற்றி தோல்வியின் போதும் கூடவே இருந்து ஊக்கமளித்து முன்னேறச் செய்வது ஆசிரியரின் கடமையாகின்றது.


ஆசிரியரானவர் மேற்படி பல்வேறு பொறுப்புக்களையும், கடமைகளையும் தன்னகத்தே கொண்டு தனது பணியினை சிறப்பாக புரிகிறார் என்பது தெளிவாகின்றது. இதை ஒவ்வொரு ஆசிரியரும்  உணர்ந்து செயல்பட்டால் ஒவ்வொரு மாணவனும் உயர்ந்தவன் ஆவான் ….

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...