Thursday, December 10, 2020

தமிழ் இலக்கியத்தில் அறிவியல் கூறுகள்

 

                                      முனைவர் பூ.மு.அன்புசிவா

தமிழ்த்துறைத்தலைவர்

சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நேரு நகர், காளப்பட்டி சாலை,

கோயம்புத்தூர்-641014.

பேச: 98424 95241.

முன்னுரை

காலந்தோறும் மொழி வளர்ச்சியுற்று வருவது என்பது இயற்கையாகும்.  அண்மைக் காலத்தில் மனித சமூகத்தில் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றம், தொழில்துறை முன்னேற்றம் ஆகியவை காரணமாக உலக மொழிகள் பலவற்றிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வகை மாற்றங்கள் தமிழ் மொழியிலும் புதுமையாக்க மாற்றமும், வளர்ச்சியும் நடைபெற்றது எனலாம்.  ஒவ்வொரு இலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டு திகழ்கிறது. அறிஞர்களும், இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் கண்ணாடி என்கிறார்கள். எந்த ஒரு இலக்கியமும் தான் தோன்றிய அச் சமுதாயத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும், பொருளாதாரத்தையும் அக்கால மக்களின் அறிவையும், பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாய் விளங்குவதைக் காணலாம். இந்த அடிப்படையில்தான் நமது தமிழ் இலக்கியங்களும் விஞ்ஞானப்பூர்வமாக மிளிர்கின்றன.   அவைகளில் முதன்மையாக எழுத்தாக்கம், தகுமொழியாக்கம், சொல்லாக்கம், நடையாக்கம், சமூகம் மற்றும் பண்பாடு போன்றவைகளில் மிகப்பெரிய வளர்ச்சி நடைபெற்றது எனலாம்.

 

அறிவியல் தமிழ்

            இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் தமிழ் என்பது புறநிலை வளர்ச்சியால் புதிய துறையாக வளர்ந்து வருகிறது.  அறிவியல்  தமிழ்க் கட்டடங்களுக்கு செங்கல் போன்றவை கலைச் சொற்கள். அறிவியல் கருத்துகளைத் தமிழில் தருவதில் கலைச்சொற்கள் உயிர் நாடியாக விளக்குகின்றன, அறிவியல் கலைச் சொற்கள் மட்டுமே அறிவியல் மொழி ஆகிவிடும் என்பது தவறான கருத்தாகும. மொழிநடை, உரைப்பாங்கு ஆகியவை பற்றியும் அறிவியல் தமிழில் ஆராய வேண்டும். ஆங்கிலத்தில் wisdom, knowledge என்ற இருசொற்கள் நாம் அறிந்தவை.  இவற்றிற்கு நேரான தமிழ்ச் சொற்களை பரிமேலழகர் மெய்யறிவு, கல்வியறிவு என்று இரு சொற்களை பயன்படுத்துகிறார்.  இலங்கையில் வாழ்ந்த அமெரிக்கரான டாக்டர் சாமுவேல் கிரீன் என்பவர் வேதியியல், ஆங்கில மருத்துவம் முதலிய பாடங்களைத் தமிழில் கற்பித்தார்.  இதற்காக 1850-1880 காலப் பகுதியில் பல மருத்துவ நூல்களைத் தமிழாக்கம் செய்தார்.

 

இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்

'' எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப அறிவு '' -குறள். 355

'' எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு '' -குறள். 423

-என்ற குறளிலும் தெளிவுபடுத்தி உள்ளார். விருப்பு வெறுப்பற்ற தன்மை உடையது அறிவியல் என்பதைத் தம் சிந்தனையாக வைத்துள்ளார். இயற்பியல் ஒரு பிரிவாக விளங்குவது அணுவியல். அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான வளர்ச்சி பெற்று இருப்பது அணுவியலாகும். முதலில் அணுவைப் பிளக்க இயலாது என்ற கொள்கை தோன்றியது.பின்னர் ஓர் அறிஞர் அணுவைப் பிளக்க இயலும் என்ற புதிய கருத்தை வெளியிட்டார். இக்கொள்கையுடைய தமிழ்ச் சான்றோர்கள் சிலர் இருந்தமை இலக்கியத்தில் நாம் காணலாம்.

            சந்திர கிரகணத்தைக் குறிக்க வந்த புலவர்கள் திங்களைப் பாம்பு விழுங்கியது என்று குறித்துள்;ளனர்.  அக்காலத்தில் ராகு கேது என்றும் பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுங்க முயல்வதாக மக்கள் கருதியிருந்த கருத்தே அதற்கு காரணமாகும்.  பழங்காலத்தில் மேகம் கடலுக்கு சென்று நீரை முகந்து கொண்டு வானத்தில் ஏறிவந்து மழை பொழிவதாக மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.  இதற்க்கு சான்றாக

முந்நால் திங்கள் நிறைபொறுத்து அசை

ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்

கடுஞ்சூல் மகளிர் போல நீர்கொண்டு

விசும்புஇவர் கல்லாது தாங்குபு புணரி

செழும்பல் குன்றம் நோக்கிப்

பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே(குறுந்தொகை: 287)

            கார்காலத்தில் பெருமழை பெய்வதற்க்காக மேகம் தன்னிடம் எஞ்சியிருந்த பழைய நீரை மழையாக பெய்துவிட்டு கடலை நோக்கி செல்வதாக கூறும் பாட்டு

கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர்

புதுநீர் கொளிஇய உகுத்தரும்

நொதுமல் வானத்து முழுங்குகுரல் கேட்டே  (குறுந்தொகை: 251)

 

நீரில் அறிவியல்

            தமிழர் மரபுபடி சனிக்கிழமை நீராடுவது வழக்கம், இதன் பொருள் சனிக்கிழமை மட்டும் நீராடுவது அல்ல.  உடல் ஆரோக்கியத்துடன் இருக்க கந்தகத்தன்மை சேர்ந்த தண்ணீரில் குளி என்பது பொருள்படும்.  இதன்படி சனிக்கோளில் (கரிக்கோள்), கந்தகத்தன்மை உள்ளதாக அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  பலகோடி விண்மீன்கள் விண்வெளியில் உள்ளன. இதனை பார்த்த தமிழன் எண்ண ஓட்டம் 27 விண்மீன்களை மட்டும் எடுத்து ஒரு மாதத்தின் 27 நாட்களின் பார்வையில் சேர்த்து பார்க்கிறான். அந்த 27 நாட்களில் உதயாதி நாழிகை வேறுபாட்டை அறிகிறான். இந்த 27 விண்னமீன்களையும் 12 ஆக பிரித்து பார்க்கிறான். இந்த விண்மீன் சுற்று பாதையில் வழியாக சூரியன் செல்லும் பாதை அமைகிறது. இதையே பிற்காலத்தில் 12 வட்டங்களாக ராசி என்ற பெயரிட்டு அழைத்தார்கள். 

விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப

எரிசடை எழில் வேழம் தலையெனச் கீழிருந்து

தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற் றிருக்கையுள்

உருகெழு வெள்ளிவந்த தேற்றியல் சேர(பரிபாடல் 11,1-4)

 

அறிவியல் மருத்துவத்தின் மகத்துவம்

            தற்காலத்தில் மருத்துவமும் மனித வாழ்வோடு இரண்டறக் கலந்துள்ளது. நவீன காலத்தில் செய்யும் மருத்துவ முறைகளில் சங்க இலக்கியத்தில் இதற்க்கான செய்திகள் காணப்படுகின்றன எனலாம்.

மீன்தேர் சொட்டின் பனிக்கயம் மூழ்கிச்

சிலர் பெயர்த் தன்ன நெடுவெள் ஊசி

நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்(பதிற்று: 5:42)

என்கிறது பாடல்.  நீரில் உள்ள மீன்களை கொத்தி நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் பறவையைபோலவும் நீண்ட ஊசி புண்ணில் நுழைந்து வருவது போலவும் பாடல் கூறுகிறது. அக்காலத்தில் ஊசியைக் கொண்டு தைக்கும் முறையினை பாடல் குறிக்கின்றது.  தற்காலத்தில் மருத்துவமுறையில் வெட்டு, அடிபடும் புண்களுக்கு ஊசியைக் கொண்டு தைக்கும் முறையினை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.

 

சங்க இலக்கியங்களில் கருவியல் கோட்பாடுகள்

            தமிழிலக்கிய வரலாற்றில் பல அறிவியல் கோட்பாடுகள் பொதிந்துள்ளன. அவற்றில் சங்க கால இலக்கியங்களின் பல சான்றுகள் உள்ளன.  கி.மு.3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை தோன்றிய இலக்கியங்கள்; சங்க இலக்கியமாகும். இவ்விலக்கியங்களில் பல அறிவியல் கோட்பாடுகள் உள்ளன. அவைகள்

            முதல் மாதத்தில் கரு 4.மி.மீ உள்ளதாக இருக்கும்.  இது இருபது நாட்களில் வளர்ச்சியுற்று இருதயம் துடிக்கச் செய்யும். இரண்டாவது மாதத்தில் கருவானது கருமுட்டையை விட 40,000 மடங்கு அதிகரிக்கும், என்கிறது கருவியல் நூல்.

வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது

பகைவருண்ணா வருமண்ணினையே” (புற:20 14.15)

மூன்று மாதத்தில் கரு அசைவு, நான்காம் மாதத்தில் பார்வைப்புலன் வளர்ச்சி அடையும் என்பதை மணிவாசகர்

பேரிருள் பிழைத்தும்

என்று பத்து மாதத்தின் குழந்தைகளின் வளர்ச்சி படிநிலைகளை கருவியல் விளக்குகிறது. இந்த படிநிலைகள் பல விஞ்ஞான வளர்ச்சியடைந்த போதிலும் கருவியல் கூறும் படிநிலைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது என்பது கருவியலில் உள்ள ஆச்சரியமாகும்.

 

வள்ளுவரின் மருந்து

            தமிழ் இலக்கியத்தில் மருத்துவ செய்திகளையும், சிகிச்சை முறைகளையும் காணலாம்.  திருக்குறளில் மருந்துஎன்ற அதிகாரத்தில் நோய் வருவதையும், அதற்க்கான காரணங்களையும்  அவை வராமல் தடுக்கும் முறைகளையும் பற்றி பல செய்திகள் தரப்பெற்றுள்ளன.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்(குறள்: 948)

            மருத்துவர் நோய் எதனால் வந்தது என்ற காரணத்தை முதலில் ஆராயவேண்டும்.  அதன்பின் அந்த நோயை தடுக்கும் முறைகளையும் பற்றி கூறுதல் மருத்துவரின் கடமை என்று வள்ளுவம் கூறுகிறது.

 

இலக்கியத்தில் இயற்பியல்

            ஒளிக் கதிர்கள் எந்த அளவிற்க்கு பிரகாசம் என்பதையும் சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் அறிந்து வைத்திருந்தனர்.

ஓளி பற்றிய ஆற்றலை பரிபாடல் கூறும் செய்தி, ஒளியை முருகனுடைய ஒளி பொருந்திய சாயலுக்கும் அவன் வேலுக்கும் ஒப்பிட்டுள்ளன.

வெண்சுடர் செவ்வேல் விரைமயில் மேல் ஞாயிறு

என்கிறது பரிபாடல்.  இந்த உலகம் நீரால் சூழப்பட்டது. உலகத்தில் ஒரு பகுதி நிலமும், மூன்று பகுதி நீராலும் சூழப்பட்டு உள்ளது என்பதை

மாநிலம் தோன்றாமை மலிபெயல் தலை

ஏமநீர் எழில்வானம் இறுதிதரும் பொழுதினான்

என்கிறது பரிபாடல்.

 

            அறிவியலில் மின்னனுக்களுடன் தொடர்புடைய துறையாக உள்ளது எனலாம். மூலக்கூறு என்பது அந்த பொருள்களில் உள்ள அணுக்களைப் பொருத்து அமைந்துள்ளது இதனை

தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம் நீ

கல்லினுள் மணியும்நீ (பரி: 3,63-64)

என்கிறது இந்தப் பாடல்.

 

அறிவியல் தமிழில் ஆழிப்பேரலைகள்

            உலகத்தில் அழிவு ஒன்று உண்டு அழிந்து மீண்டும் தோன்றும் என்று பழமை நூல்களும், வேத சாஸ்திரங்களும் கூறுகின்றன.  கிருத்துவ புனித நூலான விவிலியத்தில் உலகம் பல்வேறு மாற்றங்களால் அழிவு நேரிடும் என்று கூறுகின்றது. இயற்கையின் பேரழிவால் உலகம் அழிய வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்த உலகம் அழிந்து மீண்டும் தோன்றும் முறையை பரிபாடல் கூறுகிறது. நிலம், நீரிலும்,  நீர் தீயிலும் (சுனாமி) அதாவது நீருக்குள் நெருப்பு ஏற்பட்டு வெடித்தால் சுனாமி கடலில் ஏற்படுகிறது.  காற்று வானத்திலும், வானம் மூலப்பொருளிலும் ஒன்றனுள் ஒன்றாக ஒடுங்கும் முறையில் கோள்கள் அழிந்து சிதறுகிறது இதனை,

தொல்முறை இயற்கையின் மதியொ

………..மரபிற்று ஆக

பசும்பொன் னுலகமும் மண்ணும் பாழ்பட

விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல” (பரி:2, 1-4)

மீண்டும் பீடு உயர்வு ஈண்டு அவற்றிற்கும்

உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்(பரி:2, 11-12)

என்கிறது பரிபாடல்.

 

 எண்கணிதத்தில் தமிழ் அறிவியல்

            கணக்கு மக்களின் வாழ்வோடு ஒட்டியது. கணிதம் இல்லாமல் வாழ்வியல் முறை இல்லை என்றே கூறலாம்.

நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்

மைஇல் கமலமும் வெள்ளமும் நுதலிய” (பரி:2,13-14)

என்கிறது பரிபாடல் மேற்கண்ட பாடலில் எண் கணிதம் அமைந்துள்ளளது.  கணக்கற்ற பல ஊழிகள் பலகோடி ஆயிரம் காலத்தை குறிக்கின்றது.  இதில் ஆம்பல் என்பது ஆயிரம் கோடி என்ற பேரியல் எண்ணைக் குறிக்கின்றது. வெள்ளம் என்பது கோடி கோடியையும், கமலம் என்பது நூறு ஆயிரம் கோடியையும், பத்மம் என்பது சங்கம் பத்து நூறாயிரம் கோடி, நெய்தல் அல்லது குவளை நூறுகோடி எனவும், பாழ் என்பது பூஜ்யம் என்பது முதல் பல் அடுக்கு ஆம்பலான ஆயிரம் கோடி வரையிலும். ஆதற்கு மேலும் கணிதமுறையில் பின்னல்கள் முறையிலும் தனித் தனி பெயர்களைத் தமிழர்கள் கையாண்டு வந்திருக்கின்றனர் என்பது இதன் மூலம் நாம் அறியமுடிகிறது.

 

முடிவுரை

            பண்டைய தமிழ் இலக்கியத்தில் தமிழர்களிடம் அறிவியலறிவு நிறைந்திருந்தது என்பதற்க்கும், அதனை அவர்கள் நன்கு வளர்ந்தனர் என்பதற்க்கும் தனி நூல்களின் சான்றுகள் இல்லாமல்  போயினும், அவர்களின் அறிவியல் முறைகளை இலக்கிய சான்றுகள் மூலம் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றது எனலாம்.  தமிழிலக்கியங்களில் பரவலாக அறிவியல் கோட்பாடுகள் அமைந்துள்ளதை நாம் காணலாம். இன்றைய அறிவியலுக்குச் சிந்தனை வித்தாக அமைந்து முறையான வளர்ச்சி நிலையினை உடையனவாய் இருக்கிறது. இந்த வளர்ச்சி எதிர்காலத்தில் ஆல்போல் பரந்து, விரிந்து, ஊன்றி நமது தமிழ் இலக்கியங்கள் உலத்தோடு ஒத்துள்ளதை உலகு அறிய அதிக தூரமில்லை.

 

Monday, November 30, 2020

மன அழுத்தம் போக்க என்ன செய்யலாம் ?

மன அழுத்தம்(டிப்றசன்), ஸ்ட்ரெஸ் , டென்சன் என்ற வார்த்தைகள் இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகி வருகிறது. இதற்கு காரணம் மதிப்பெண்களுக்காக மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம், வாழ்க்கை பற்றிய பயமும் இளவயது பிள்ளைகளின் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. இதனால் எதிர்மறை எண்ணங்களும், கவலை, பயம், டென்சன் போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும், இளம் வயதினரிடமும் அன்பாக பழகினால் அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்று உளவியல் வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நண்பர்களுடன் உரையாடுவதை கூட விரும்புவதில்லை.தனிமையில் அமர்ந்து எதையாவது சிந்தித்தவண்ணம் இருக்கின்றனர். இதனால் பள்ளிகளில் கவனிக்கும் திறன் குறைகிறது. எனவே குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த மன அழுத்தத்தை களைவது அவசியம் என்று தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

எளிமையான எதிர்பார்ப்பு

கவுன்சிலிங், உளவியல் சிகிச்சை போன்றவற்றையும் அளிக்கலாம். அதேசமயம் இள வயதினருக்கு குரூப் சைக்கோ தெரபி என்னும் சிகிச்சை முறையினை கையாண்டு அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த பழக்க வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

நட்பான சூழல் அவசியம்

வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும். டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. எனவே இளம் வயதிலே வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம்.

சத்துக் குறைபாடு தரும் மன அழுத்தம்

குழந்தைகளின் உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு விற்றமின் சத்துக் குறைபாடு, ரத்தத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவுப் பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம். அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அதுவே மன அழுத்தமாக மாறிவிடும்.

சூரியஒளி இல்லாத குளிர்காலமும் புலத்தில் வாழும் தமிழர்களும்

சூரியஒளி இல்லாத குளிர்காலம் அனைவருக்கும் விற்றமின் D குறைவையும், நோய் எதிர்ப்புசக்தி குறைவையும் ஏற்படுத்துகிறது. உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் . விற்றமின் D இன்மையால் மாரடைப்பு , மனஅழுத்தம், ஒற்றைதலைவலி, நரம்பு, மூட்டு சம்பந்தமான நோய்கள் உருவாகின்றன. இதனை புலத்தில் வாழும் தமிழர்கள் கவனத்தில்கொண்டு விற்றமின் D – 35 mg மாத்திரைகளை மறக்காது தினமும் இரண்டு குளிர்காலத்தில் உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். அத்துடன் குளிர்கால இருட்டும் மனஅழுத்தத்திற்கு காரணமாகிறது. அக்காலத்தில் றியூப் பல்ப் மூலம் வீட்டு மண்டபத்தை பிரகாசமாக்கினால் மனமும் பிரகாசமாகும், உற்சாகமும் வரும்.

தேவையற்ற டென்ஷன்

நேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது, அடுத்தவர் மற்றும் தேவையற்ற விடயங்கள் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்றவற்றின் மூலம் மனதை இயல்பாக வைத்திருக்க முடியும். இந்த பழக்கங்களை சிறு வயது முதலே பழக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள், இதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவதில் இருந்து அனைவரையும் காக்க முடியும் என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்தாகும். அத்துடன் பிடித்த இசை, தியானம் என்பனவும் டென்சனிலிருந்து விடுபட உதவும்.

பதின்ம வயதினரில் மன அழுத்தம்

உணர்வுகளை வெளிப்படுத்துவது மூளையின் பல தொழிற்பாடுகளில் ஒன்று. தேவையான நேரத்தில் உகந்த ஹோர்மோன் சுரப்புக்களைச் செய்வதன் மூலம் உணர்வுகளைக் கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்துவதில் மூளை பெரும்பங்கு வகிக்கிறது. இக் கட்டுபாட்டில் பிசகு ஏற்படும்போது வெளிப்படும் ஒழுங்கற்ற உணர்வு மன அழுத்தம் என விபரிக்கப்படுகிறது.

மன அழுத்தத்தின்போது பெரும்பாலும் தொடரும் எதிர்மறையான எண்ணங்கள் அடிக்கடி உறுத்திக்கொண்டிருக்கும். இவ்வெதிர்மறை உணர்வுகள் சமூகம், கல்விச் சூழல், தனிப்பட்ட உறவுகள், குடும்ப உறவு போன்ற பல விடயங்களில் மிகவும் பாதகமான நிலைகளை ஏற்படுத்திவிடுகின்றன.

மன அழுத்தத்தைப் பலரும் சரியாக இனங்காண்பதில்லை. அதனால் அதற்கான சிகிச்சைகளையும் உரிய காலத்தில் மேற்கொள்வதில்லை.

மன அழுத்தம் சோகம் (sadness), மன உடைவு (feeling down) போன்ற சாதாரண உணர்வு நிலைகளின் வெளிப்பாடல்ல. அது மூளையின் கட்டுப்பாடட்டில் ஏற்படும் பிசகினால் ஏற்படும் ஒரு மருத்துவப் பிரச்சினை (medical condition). மன அழுத்தம், ஒருவர் சிந்திக்கும், உணரும், செயற்படும் முறைகளைப் பாதிக்கிறது. அவர் உலகைப் பார்ப்பதும் அனுபவிப்பதும் எப்போதும் எதிர்மறையானதாகவே இருக்கிறது.

மன அழுத்தம் ஏற்படும்போது அது பல மாதங்கள் நீடிக்கலாம். இதை மன அழுத்தத்தின் ஒரு அத்தியாயம் (episode of depression) எனச் சிலர் வர்ணிப்பதுண்டு. மன அழுத்ததுக்குள்ளாகும் பலர் தம் வாழ்நாளில் பல ‘அத்தியாயங்களைச் சந்தித்திருப்பர்.

சிலரது வாழ்வில் ஏற்படும் அதிர்சி தரும், துன்பகரமான சம்பவங்கள் (மிகவும் நேசித்த ஒருவரின் இழப்பு, நீண்டகால மன இறுக்கம் போன்றன) மன அழுத்தத்தின் ஒரு அத்தியாயத்தைக் கிளறிவிடுகின்றன, இருப்பினும் பின்னர் பல அத்தியாயங்கள் தாமாகவே தோற்றம்பெறுகின்றன. அது பொதுவாக மனப் பதட்டத்துடன் (anxiety) சேர்ந்தே ஏற்படுகிறது. குடும்பம், நண்பர்கள், வேலை, பாடசாலை எனப் பல விடயங்களையும் மன அழுத்தம் வெகுவாகப் பாதிக்கிறது.

பதின்ம வயதில் மன அழுத்தம் (Teen Depression)

பதின்ம வயதில் ஏற்படும் மன அழுத்தம் தீவிர மனநிலைத் தளும்பல்கள் (mood swings), மற்றும் எதிலும் ஆர்வமின்மை போன்ற அறிகுறிகளைக் காட்டுகின்றன. மன அழுத்தம் ஒரு பதின்ம வயது ஆணோ பெண்ணோ சிந்திப்பதிலும், உணர்வதிலும், நடத்தையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் வாழ்வின் எந்தப் பருவத்திலும் தாக்காலாமெனினும், அவற்றின் அறிகுறிகள் பதின்ம வயதினருக்கும் முதியோருக்குமிடையில் வேறுபடுகின்றன.

பாடசாலைகள் பதின்ம வயதினரின் மன அழுத்த உருவாக்கத்துக்கு மிகவும் உகந்த விளைநிலமாக இருக்கின்றன. தோழமை அழுத்தங்கள் (peer pressure), கல்வியில் உயர் பெறுபேறுகளின் எதிர்பார்ப்புகள் (academic expectations), உடலில் ஏற்படும் பெளதீக மாற்றங்கள் (changing bodies) போன்றன பதின்ம வயதினரில் பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டுவருகின்றன. இறக்கங்கள், சில பதின்ம வயதினருக்கு, தற்காலிக உணர்வு மாற்றங்கள் என்பதிலிருந்து மன அழுத்தத்தின் வெளிப்பாடுகளாக மாறுகின்றன.

பதின்ம வயதில் ஏற்படும் மன அழுத்தம் ஒரு பலவீனமோ, அல்லது மனப் பலத்தினால் வென்றுவிடக்கூடிய ஒரு விடயமோ, அல்ல. அது மோசமான விளைவுகளை உருவாக்க வல்லது. நீண்டகால சிகிச்சை தேவைப்படுமொன்று. பல பதின்ம வயதினரின் மன அழுத்தம் மருந்தினாலும், உள வள ஆலோசனைகளாலும் தீர்க்கப்பட்டிருக்கிறது.

அவதானிக்கக்கூடிய மாற்றங்கள்

பதின்ம வயதினரில் ஏற்படும் மன அழுத்தத்தின் அறிகுறிகள் பல. பதின்ம வயதினர் ஒருவரின் மனப்பாங்கில் (attitude) மற்றும் நடத்தை (behaviour) ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள், நட்புச் சூழலிலோ, வீட்டிலோ, சமூகக் கூடல்களிலோ இதர சூழல்களிலோ உடனடியாக அவதானிக்கப்படக் கூடியவை. மன அழுத்தத்தின் அறிகுறிகள் அவற்றின் தீவிரத்தில் மாறுபடலாம். ஒரு பதின்ம வயதினரின் மனநிலையிலோ, நடத்தையிலோ ஏற்படும் மாற்றங்கள் சில:

உணர்வுநிலை மாற்றங்கள்:

மனச் சோர்வு, காரணமில்லாது அழுதல்

சிறிய விடயங்களுக்கும் கோபமும் விரக்தியும் ஏற்படுதல்

வெறுமையும், எதிலும் நம்பிக்கையீனமும்

காரணமில்லது எரிந்து விழுதல்

இயல்பான செயற்பாடுகளிலோ, குடும்ப விடயங்களிலோ, நண்பர்களிடமோ ஆர்வமில்லாதிருத்தல்                                                                

சுய மரியாதையீனம், தன்மீது வெறுப்பு, தான் பயனற்றவரென உணர்தல், குற்ற உணர்வு

முந்திய தவறுகளை மீண்டும் நினைவு மீட்டல், தேவைக்கதிகமாக தற்பிழை கற்பித்தல், சுய விமர்சனம் செய்தல்

தவறுகள், நிராகரிப்புகள் விடயத்தில் அதீத கவனம் கொள்ளல், மித மிஞ்சிய ஐயம் தெளிதல்

சிந்திப்பதில், மனக்குவிப்பில், முடிவுகளை எடுப்பதில், ஞாபகம் வைத்திருப்பதில் சிரமப்படுதல்

எதிர்காலம் இருண்டது, பிரகாசமற்றது எனத் தொடர்ந்து எண்ணுதல்

இறப்பும், தற்கொலையும் அடிக்கடி நினைவில் வரல்

நடத்தை மாற்றங்கள்:

இலகுவில் களைத்துப்போதல், பலவீனமாக உணர்தல்

தூக்கமின்மை அல்லது அதிகமாகத் தூங்குதல்

பசியில் மாற்றங்கள் – பசியின்மையால் சாப்பிடாது உடல் மெலிதல் அல்லது பசியினால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமனாதல்

மது அல்லது போதை வஸ்து பாவித்தல்

பதட்டப்படுதல் அல்லது துடிப்பு அதிகமாதல் (சுற்றிச் சுற்றி குறு நடை நடத்தல், கைகளை அடிக்கடி முறுக்கிக் கொள்ளல், ஓரிடத்தில் தொடர்ந்து இருக்க முடியாதிருத்தல்)

வேகமாகச், சிந்திக்க, பேச அல்லது உடலசைவுகளை மேற்கொள்ள முடியாமை

விளக்க முடியாத உடல் வலியும் தலை வலியும்; அடிக்கடி பாடசாலைத் தாதியிடம் செல்வதும்

தனிமையை விரும்புவது

கல்வியின் பெறு பேறுகளில் வீழ்ச்சி

பாடசாலை செல்வதில் ஒழுங்கீனம்

சுய ஆரோக்கியத்திலோ தோற்றத்திலோ அக்கறையின்மை

கோபத்தில் பிறரில் எரிந்து விழுதல், தன்னைத் தானே சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், வழக்கத்துக்கு மாறான வகைகளில் நடந்துகொள்ளல்

சுய துன்புறுத்தல் (தன்னைத் தானே வெட்டிக்கொள்தல், எரித்துக் கொள்தல், தேவைக்கு அதிகமாக உறுப்புகளில் துவாரங்களை இட்டுக் கொள்ளல் அல்லது பச்சை குத்திக் கொள்தல்

தற்கொலைக்குத் திட்டமிடுதல் அல்லது முயற்சித்தல்

எது சாதாரணமானது அல்லது சாதாரணமற்றது?

பதின்ம வயதினரின் நடத்தைகள் பொதுவாகவே ஏற்ற இறக்கங்களைக் கொண்டவை. தமக்குத் தேவையான அல்லது விருப்பமான நிகழ்வுகள் நடைபெறாதபோது இறக்கங்களையும், நடைபெறும்போது ஏற்றங்களையும் வெளிக்காட்டுவது இயல்பு. இதனால் மன அழுத்தம் காரணமாக வெளிப்படும் ஏற்ற இறக்கங்களையும் இயல்பானவையென எடுத்துவிடக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு.

பதின்ம வயதினரில் மாற்றங்களை அவதானிக்க முடிந்தால் அவர்களுடன் உரையாடுவது நல்லது. அவை சாதாரண பதின்ம வயதிற்கு இயல்பாக ஏற்படும் மாற்றங்களாயினும் சரி, மன அழுத்தத்தினால் ஏற்படும் மாற்றங்களாயினும் சரி அவர்களுடன் உரையாடி அம் மாற்றங்களைச் சமாளிக்க அவர்களால் முடிகிறதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அவர்களது வாழ்க்கையில் தாங்கமுடியாத சுமைகள் ஏதாவது இருக்கின்றனவா எனபதை விசாரிக்க வேண்டும்.

எப்போது மருத்துவரைப் பார்ப்பது?

பதின்ம வயதினரில் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் தெரியவாரம்பித்ததும் அவரகளுடன் உரையாடலை உடனேயே ஆரம்பிப்பது நல்லது. ஒரு மருத்துவருடன் அல்லது உள நல சேவையாளருடன் பேசுவது நல்லது. பதின்ம வயதுப் பிள்ளையின் குடும்ப வைத்தியர் அல்லது பாடசாலையால் பரிந்துரைக்கப்படும் வைத்தியரை முதலில் அணுகுவது நல்லது. மன அழுத்ததின் அறிகுறிகள் தாமாகவே தீர்ந்து விடுவனவல்ல. சிகிச்சையளிக்காது போனால் அது மேலும் பல மோசமான விளைவுகளுக்குக் காரணமாகிவிடலாம்.

நீங்கள் ஒரு பதின்ம வயதினராக இருந்து மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதினாலோ அல்லது உங்களது நண்பரோ நண்பியோ மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறாரென அறிந்தாலோ உடனே மருத்துவ உதவியை நாடுங்கள். உங்கள் மருத்துவர் அல்லது பாடசாலைத் தாதியை முதலில் அணுகுங்கள். உங்கள் ஆதங்கங்களைப் பெற்றோரிடமோ, உற்ற நண்பரிடமோ, ஆசிரியரிடமோ அல்லது நீங்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவரிடமோ தெரிவியுங்கள்.

மன அழுத்தத்திற்கான காரணங்கள்

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் இதுவரைக்கும் அறியப்படவில்லை ஆனால் சில விடயங்கள் மீது ஊகங்கள் எழுப்பப்படுகின்றன. அவை:

மூளையின் இரசாயனம் (Brain chemistry).  நரம்பணுக்கடத்திகள் (Neurotransmitters) எனப்படுபவை இயற்கையாக மூளையில் ஏற்படும் இரசாயனப் பொருட்கள். மூளையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கோ அல்லது உடலின் இன்னொரு பகுதிக்கோ சமிக்ஞைகளைக் (signals) கடத்துபவை இவைதான். இவ்விரசாயனப் பொருட்களில் ஏதாவது குளறுபடி ஏற்படும்போது நரம்பணுத் தொகுதியின் செயற்பாடு குழப்பமடைந்து மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கிறது.

ஹோர்மோன்கள் Hormones. ஹோர்மோன்கள் மூளையின் கட்டுப்பாட்டினால் சுரக்கப்படும் பதார்த்தங்கள். இவை கட்டுப்பாட்டிற்குள் (சமநிலையில்) இருக்கும்போது உடலின் தொழிற்பாடுகள் சரியாகவிருக்கும். சமநிலையில் தளம்பல் ஏற்படும்போது, சில வேளைகளில் மன அழுத்தம் ஏற்படுகிறது.

பரம்பரைத் தொடர்ச்சி Inherited traits. குடும்பத்தில் (தாய் / தந்தை) பக்கத்தில் யாருக்காவது மன அழுத்தம் வந்திருந்தால் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அது வருவதற்குச் சாத்தியமுண்டு.

குழந்தைப் பருவத்தில் ஏற்படும் அதிர்ச்சி Early childhood trauma.  குழந்தைப் பருவத்தில் அதிர்ச்சிதரும் சம்பவங்கள்( பெற்றோரை இழத்தல்), உடல் / உள ரீதியான துர்ப்பிரயோகங்கள் போன்றவை நடைபெற்றிருந்தால் அவை மூளையில் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இப்படியானவர்களில் சிலர் பிற்காலத்தில் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.

எதிர்மறையான எண்ணங்களைக் கற்றுக்கொள்தல் Learned patterns of negative thinking. பதின்ம வயதினரின் மன அழுத்தம், சில வேளைகளில் ‘நிர்க்கதியாகிவிட்டோம்’, ‘தனிமைப்படுத்தப்பட்டுவிட்டோம்’, ‘உதவியற்றவராகிவிட்டோம்’ என்பது போன்ற எண்ணங்களை வளர்த்துக்கொள்ள இடமளிப்பதன் மூலம், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியாது தப்பியோடும் மனப்பான்மை வேரூன்ற அனுமதிப்பதன் மூலமும் ஏற்படுகிறது.

ஆபத்துக் காரணிகள் Risk factors

பல காரணிகள் பதின்ம வயதினரில் மன அழுத்தத்தை உருவாக்கவோ அல்லது கிளறிவிடவோ செய்கின்றன. அவை:

உடற் பருமன் (obesity), தோழமைப் பிரச்சினைகள் (peer problems), நீண்டகாலமாகக் கொடுமைப்படுத்தப்படல் (long-term bullying), கல்வியில் வெற்றி காணாமை ஆகியவை ஒருவரின் தற்பெருமையை (self-esteem) வெகுவாகப் பாதிக்கின்றன.

உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ பாதிக்கப்பட்டிருத்தல்

இதர உள வளப் பிரச்சினைகள், உதாரணமாக, இரு-துருவக் கோளாறு (bipolar disorder), பதட்டம் (anxiety), பசியின்மையால் உண்ணாதிருத்தல் (anorexia) அல்லது பெரும்பசியால் அதிகமுண்ணுதல் (bulimia)

கற்கை இயலாமை (learning disability), கவனக்குறைவு (attention-deficit) / அதிதுடியாட்டம் (hyperactivity) (ADHD)

நீண்டகால வியாதிகளால் ஏற்படும் உடல் வலி ( புற்றுநோய், நீரழிவு, தொய்வு)

ஆளுமைப் பிரச்சினைகள் (தற்பெருமைக் குறைவு, இன்னொருவரில் தங்கியிருத்தல், தன்னில் குறை காணுதல், நம்பிக்கையீனம்)

மது, புகைத்தல், போதை வஸ்து பாவனைகள்

பாலியல் பிரச்சினைகளை (ஒருபால் மோகம், பாலடையாளம்) எதிர்கொள்வதற்கேற்ற சூழல் அமையாமை

குடும்பத்தில் பின்வரும் வியாதிகள் / குறைபாடுகள் இருந்திருந்தால் உங்கள் பதின்ம வயதுப் பிள்ளை, பேரப்பிள்ளைகளுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடிய சாத்தியங்களுண்டு:

பெற்றோர், அவர்களின் பெற்றோர் அல்லது இரத்த உறவுகள் யாராவது மன அழுத்தம், இரு-துருவக் கோளாறு அல்லது போதைக்கு அடிமையாகும் பழக்கங்களுக்கு உள்ளாகியிருந்தமை

யாராவது குடும்ப உறவினர் தற்கொலை செய்துகொண்டமை

பெற்றோர் பிரிந்து வாழ்ந்தமை அல்லது தொடரும் குடும்பப் பிரச்சினை

குடும்பத்தில் பிரிவு, இறப்பு போன்ற அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றமை

சிக்கல்கள் Complications

சிகிச்சை பெறாத மன அழுத்தம் பதின்ம வயதினரின் வாழ்வின் இதர பக்கங்களையும் தீவிரமாகப் பாதிக்க வாய்ப்புண்டு. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் சில:

மது அல்லது போதை வஸ்துவுக்கு அடிமையாதல்

கலவியில் பின்தங்கல்

குடும்பப் பிரச்சினைகள், உறவு நீடிப்பில் பிரச்சினைகள்

குற்றவியற் பிரச்சினைகளுக்குள் சிக்குதல்

தற்கொலை முயற்சிகள் அல்லது தற்கொலை செய்துகொள்ளல்

தவிர்ப்பு Prevention

மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கு உகந்த வழிகள் என்று எதையும் சொல்வதற்கில்லை. இருப்பினும் சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அவற்றில் சில:

மன இறுக்கத்தைத் (stress) தவிர்க்க முயலுங்கள். தற்பெருமையை வளர்த்து, பிரச்சினைகள் தோன்றும்போதே தீர்த்துக்கொள்ள முயற்சியுங்கள், தாங்கும் திறனை (resilience) வளர்த்துக் கொள்ளுங்கள்

நல்ல நண்பர்களையும், சமூகச் சூழலையும் உருவாக்கி பிரச்சினை வரும்போது அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுங்கள்

பிரச்சினையின் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். மன அழுத்தம் மோசமாவதை அது குறைக்கும்.

பரிந்துரைக்கப்பட்டால், அறிகுறிகள் நின்றபோதும் கூட சிகிச்சையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளுங்கள். நோய் திரும்பி வராமல் இருப்பதற்கு இது அவசியம்.

எப்போது அவசர சேவைகளை நாடுவது?

தற்கொலை, பெரும்பாலும் மன அழுத்தத்துடன் தொடர்புடையது. தற்கொலை செய்யவேண்டுமென்ற உணர்வு எப்போதாவது உறுத்துமானால் உடனே 911 ஐ / அவசர அழைப்பிலக்கத்தை அழையுங்கள் அல்லது உங்கள் பெற்றோரையோ, நீங்கள் நேசிக்கும் ஒருவரையோ அல்லது உற்ற நண்பரையோ அழையுங்கள்.


மன அழுத்தத்திற்கு பல காரணங்கள்

வேலை செய்யும் இடங்களில் நிலவும் பகை, எரிச்சல், கடுமை, மரியாதையின்மை, மன அழுத்தம் என்று பலவித எதிர்மறை மனோபாவங்கள் பற்றியும் அவை நம் உடல் நிலையை எப்படி பாதிக்கின்றன என்பது பற்றியும் அந்தக் கட்டுரை விரிவாக எழுதப்பட்டிருந்தது. கட்டுரை எழுதியவரின் அப்பா ஒரு ஆஸ்பத்திரியில் மூக்கிலும் வாயிலும் டியூப்கள் பொருத்தப்பட்டு படுக்கையில் இருந்ததைப் பார்த்து மனம் நொந்து அவர் எழுதுகிறார். “எப்படி கம்பீரமாக, சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த என் அப்பா இந்த நிலைக்கு தள்ளப்பட்டார்? நிச்சயமாக அலுவலகத்தில் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம்தான் காரணம் என்று எனக்குப் புரிகிறது. இப்போதெல்லாம் வேலை செய்யும் இடங்களில் நிலவும் போட்டியும், கடுமையும், பிறர் உணர்வுகளை மதிக்காத மனோபாவமும் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி உடல் நிலையை மிகவும் பாதிக்கின்றன. என் அப்பா ஒரு உதாரணம்….” என்ற ரீதியில் செல்கிறது அந்தக் கட்டுரை. 

“ஜீப்ராக்களுக்கு  ஏன் அல்சர் போன்ற வியாதிகள் வருவதில்லை – Why Zebras don’t get Ulcers” என்ற புத்தகத்தை எழுதிய ராபர்ட் எம் சபோல்ஸ்கி (Robert M Sapolsky) என்ற ஸ்டான்போர்ட் யுனிவர்சிடி பேராசிரியர் ஒருவரின் ஆராய்ச்சியை இந்தக் கட்டுரையாளர் மேற்கோள் காட்டுகிறார். மன அழுத்தத்தினால் இதயக் கோளாறுகள், டயபடீஸ், நரம்புத்தளர்ச்சி, கான்சர் போன்ற உடல் உபாதைகள் வருகின்றன என்று இந்த ஆராய்ச்சி சொல்கிறது.  

அலுவலகத்தில் ஏற்படும் எரிச்சல் அல்லது தகாத வார்த்தைகள் போன்றவை நம் காதுகளில் விழுந்தவுடனேயே அவை மூளையில் உள்ள  செல்களை பாதிக்கின்றன. க்ளுகொகார்டிகாய்ட்ஸ் (Glococorticoids ) என்ற ஹார்மோன் உற்பத்தி அதிகரித்து  உபாதைகளை விளைவிக்கிறது என்றும் இந்த ஆராய்ச்சி விளக்குகிறது.

இந்தக் கட்டுரையைப் படித்தபோது 1990 ல் இதே போன்று மன அழுத்தம் ஏற்படுத்தும் உடல் உபாதைகளைப் பற்றி நான் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. அன்று எழுதியதிலிருந்து சமூகம் மாறிப்போய்விடவில்லை. 25 வருடங்கள் கழித்தும்  இன்றைய சூழ்நிலைக்கும் இந்தக் கட்டுரை மிகப் பொருந்தும். 

1990 – டில்லி

அந்தக் குடும்பத்தில் ஒரு காலை வேளை  அது. 7.30 மணிக்கு தெரு முனையில் ஸ்கூல்  பஸ்ஸில் குழந்தைகளை ஏற்றிவிட்டு, அவசரம் அவசரமாக திரும்பக் கிச்சனுக்குள் ஓடிவந்து பாக்கி சமையலை முடித்து தனக்கும் கணவனுக்கும் இரண்டு டிபன் பாக்ஸ்களை ரெடி செய்துவிட்டு என்று தொடர்ந்து அந்தப் பெண் ஓடி, பின்னர் ஒரு வழியாக ஆபீசில் தன் இடத்தில் வந்தமர்ந்தபோது அவளுக்கு மூச்சு  முட்டுவதுபோல் இருந்தது. பைக்குள்ளிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு அன்றைய வேலைகளைப் பார்க்க ஆராம்பித்தாள் அவள்.

வீட்டிலும் வெளியிலும் ஓய்வில்லாது உழைக்கும் அந்தப் பெண்ணுக்கு  ஏகப்பட்ட மன அழுத்தம். இன்னும் சில நாட்களில் அவருக்கு இதய நோய்கள், அல்லது நரம்புத் தளர்ச்சி என்று வந்தால் அதன் காரணம் இந்த மன அழுத்தமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

ஆண்களும் பெண்களுமாக இவரைப்போல் இன்று பலர் மன அழுத்தத்தில் தவிக்கிறார்கள். இதற்கு பெரும்பாலும் வேலை செய்யும் இடங்களும் வேலைக்கான பளுவும்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.  பலர் வெளியே சொல்வதுமில்லை.  

பலர் நினைப்பதுபோல் மன அழுத்தம் என்பது ஒரு மன நிலையோ அல்லது ஒரு உணர்ச்சியோ அல்ல. தாங்கள் எதிர்நோக்கும் சவால்களையும் சந்திக்கும் சூழ்நிலைகளையும் ஒருவர் மனதால் அணுகும் முறையும், எதிர்கொள்ளும் முறையும்தான் இப்படி மன அழுத்தமாக வெளிப்படுகிறது என்று மன நல மருத்துவர்கள் கூறுகின்றனர். 

“மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் உள்ளன.” என்று குறிப்பிடுகிறார் பி.பி. பக்ஷி என்ற மன நல மருத்துவர். ஒவொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இந்தக் காரணங்கள் வேறுபடும். “ஒவ்வொருவரும் தாங்கள் வளர்ந்த சூழ்நிலை அல்லது மனத்  திண்மை போன்றவற்றை பொறுத்து ஒரே விதமான காரணம் பலவித வித்தியாசமான விதங்களில் விளைவுகளை ஏற்படுத்தும்.

உதாரணமாகக் காலை வேலை அவசரம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலகெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்று கட்டாயம் போன்றவை சிலருக்கு அழுத்தம் கொடுக்கும். “ஆனால் இது போன்ற அழுத்தங்கள் எனக்கு ஒரு பொருட்டே அல்ல” என்கிறார் நிர்வாகத்துறையில் ஆலோசகராக இருக்கும் ஒரு பெண். “இது போன்ற அழுத்தங்கள் ஒரு சவால் போல. நம் மூளைக்கும் சுறுசுறுப்பு கிடைக்கும். தவிர இவை ஆக்கப்பூர்வமான அழுத்தங்கள். ஒரு குறிக்கோளை நோக்கி செல்கிறோம் என்று மனதில் ஒரு ஆர்வம் அல்லது கடமையுணர்வு இருக்கும். சாதிக்கும் உணர்வும் இருக்கும். அதனால் இது போன்ற அழுத்தங்கள் உடல் நிலையை பாதிக்கும் என்று கூற மாட்டேன். என்னைப் பொறுத்தவரையில் மன அழுத்தம் என்பது எந்த ஒரு முடிவும், என்ன ஆகும் என்று தெரியாத ஒரு சூழ்நிலை. ஒரு  uncertainty அல்லது vagueness நிலை எனக்கு ஏகப்பட்ட மன அழுத்தத்தைக் கொடுக்கும்.” என்கிறார் இவர். இவரது தந்தை சமீபத்தில் காலமானபோது மிகுந்த மன அழுத்தம் இருந்தது என்கிறார் இவர். 

தினசரி வாழ்க்கைக்கே வருமானம் போதாமல் இருக்கும் குடும்பத்தில் ஒருவித அழுத்தம் என்றால், வியாபாரத்தில் போட்டி, நஷ்டம் என்று வேறுவிதமான அழுத்தம் செல்வந்தர்களுக்கு. 

வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் மன அழுத்தம் தற்காலத்தில்  அதிகமாகத்தான் இருக்கிறது. உலகில் நிலவி வரும் வியாபாரப் போட்டியே காரணம். ” சின்னதாக சறுக்கினாலும் அதள பாதாளத்தில் விழுவோம் என்ற நிலையில்தான் இன்றைய வேலை செய்யும் இடங்கள் இருக்கின்றன. இதற்கு முன்னால் எவ்வளவு திறமையாக வேலை செய்தோம் என்பதெல்லாம் காணாமல் போய்விடும்,” என்கிறார் ஒரு கணினிப் பொறியாளர். “குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்கிற அழுத்தமும், செய்யும் வேலையைத் திறமையாக முடிக்க வேண்டுமே என்ற அழுத்தமும் எனக்கு சற்று அதிகம்தான் என்று ஆமோதிக்கிறார் ஒரு அரசு அதிகாரி. 

சமூக சூழ்நிலைகளில் அழுத்தம் உண்டாக்கும் காரணங்களில், இன்னும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் அல்லது ஆசைப்படுவதெல்லாம் கையில் கிடைக்க வேண்டுமென்ற மனோபாவமும் மிக முக்கியமான ஒன்று என்று கருதப்படுகிறது. பாண்டிச்சேரி ஜிப்மேரில் உளவியல் துறையில் பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்ற திரிவேதி சொல்கிறார், “தங்கள் தேவைகளைப் பெருக்கிக்கொண்டு, இன்னும் வேண்டும்; அது வேண்டும் இது வேண்டும் என்று ஆசை பேராசையாக உருவெடுக்கும் இந்நாட்களில் இதுபோன்ற ஆடம்பர பொருட்களின் பின்னால் ஓடும் மனோபாவத்தால் பலர் மன அழுத்தத்தில் விழுகின்றனர்.” 

ஒரு கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கும் டாக்டர்  சரஸ்வத், போட்டி மனப்பான்மை மன அழுத்தத்திற்கு வெகுவாக காரணம் என்கிறார். ஆனால் பொருள் திரட்டுவதற்காக, விரும்பியதை வாங்க வேண்டும் என்பதற்காக இப்படி உடல் உபாதைகளை வரவழைத்துக்கொள்ள வேண்டுமா? 

“கட்டாயமாக. வேற வழி? என் மகளுக்கு நல்ல வாழ்க்கையை நான் கொடுக்க வேண்டாமா? நாளைக்கு அவளுக்கு என்று நான் ஏதாவது விட்டுச் செல்ல வேண்டாமா?” என்கிறார் நிர்வாக ஆலோசகரான தாய். 

மன அழுத்தத்தினால் சில சமயம் நல விளைவுகளும் உண்டு. “இன்று மிகவும் பிரபலாமாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும் பலர் இப்படி ஒரு அழுத்தத்தின் உந்துதலில்தான் பல வெற்றிப்படிகளைத் தாண்டியுள்ளார்கள்“, என்கிறார் டாக்டர் பக்ஷி. இந்த மாதிரி மனோபாவம் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் ஒரு தூண்டுகோல். இது இல்லையென்றால் இவர்கள் வேலை செய்யும் திறன் குறைந்துவிடும்.” என்று இவர் விளக்குகிறார். வீட்டில் மந்தமாக உணரும் சில பெண்கள் வெளியே வேலை செய்யப்  பிரியப்படுவார்கள். அதில் எதிர்கொள்ளும் அவசரமும், டென்ஷனும் அவர்களுக்கு இன்னும் ஊக்கம் கொடுக்கும். Adrenaline ஓட்டத்தை விரும்பும்  மனிதர்கள் இவர்கள். சிலருக்கு ஒய்வு என்பதே பிடிக்காது. அதேபோல் வேலை செய்யும் இடங்களில் இவர்களது ஆர்வத்துக்கும், மனத் தேவைக்கும் சவால்கள் இல்லாமல் இருக்கும்போது இவர்கள் விரைவிலேயே சலித்து விடுவார்கள். அதுவே கூட அவர்களுக்கு வேறுவிதமான மன அழுத்தத்தைக் கொடுக்கும்” என்கிறார் பக்ஷி. மலையேறுவது, பந்தயங்களில் பங்கு பெறுவது போன்ற வீர சாகச செயல்கள் செய்பவர்கள் இது போன்ற அழுத்தம் விரும்பிகள் என்கிறார் இவர். workaholic எனப்படும் வகையைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட அழுத்தத்தை விரும்புவார்கள். சவால்களும், சாகசங்களும் சிலருக்கு விருப்பமாக இருப்பதற்கு காரணம், அந்த சவால்களைத் தீர்க்கும் ஆர்வமும், சாதிக்கும் ஆர்வமும்தான். நமக்குப்  பிடித்த எதையும் செய்யும்போது அது டென்ஷனாக இருந்தாலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாது. 

ஆனாலும் சில சமயம்  அப்படிப்பட்ட பாசிட்டிவ் மன அழுத்தங்களும் கூட உடல் நிலையை பாதிக்கும் என்கிறார் டாக்டர்  திரிவேதி. அழுத்தம் நம்மை முன்னேற்றுகிறது என்று வைத்துக்கொண்டாலும், உடல் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை.” என்கிறார் இவர். இந்த மாதிரி நபர்களுக்கு வேலையிலிருந்து ரிடையர் ஆனவுடன் “சும்மா” இருக்கும் மன அழுத்தம் பாதிக்கும். இது பல விதத்தில்  உடல் நலத்தை பாதிக்கும் என்பதோடு, வாழ்க்கையில் ஒரு பிடிப்பின்மையையும் உண்டாக்கும். மன அழுத்ததிற்காக வேலையைத் தேடித் தேடி செய்து பழகியவர்கள் ரிடையரானவுடன் தங்கள் காலுக்கடியில்  கம்பளம் உருவப்பட்ட உணர்வில் தவிப்பார்கள். 

தனக்கு வரும் நோயாளிகளில் இப்படி பலவித மன அழுத்தத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டு வருபவர்கள் அதிகம் என்று  குடும்ப மருத்துவர் டாகடர் பி. எம். வர்மா சொல்கிறார். 

எப்படி இந்த மன அழுத்தம் உடல் நிலையை பாதிக்கிறது? Fight or Flight என்ற முறையில்  நம்முள் இயற்கையாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. ஏதோ ஒரு அழுத்தம் என்ற நிலை மூளையில் பதிவு செய்யப்பட அடுத்த நொடியில் இந்த பாதுகாப்புப் படை இயங்க ஆரம்பிக்கிறது. இதற்கு முக்கிய சேனாதிபதி, மூளைக்கு அடியில் இருக்கும்  பிட்யூட்டரி சுரப்பி. ஹார்மோன்கள் உற்பத்தி செய்தபடி இருக்கும் என்டாக்ரின் (Endocrine) சுரப்பிகள் இப்போது இன்னும் வேகமாகவும் அதிகமாகவும் சப்ளை செய்ய ஆரம்பித்து ரத்த ஓட்டத்தில் கலக்கும். Stress Harmones எனப்படும்  cortisol, epinephrine என்ற ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கும்போது அவை நமது உடலில் பல செயல்பாடுகளை பாதிக்கும். அல்சர், ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் வர ஆரம்பிக்கும்.” என விளக்குகிறார் டாக்டர் வர்மா. 

டாகடர் ஹான்ஸ் செல்யே என்ற ஹங்கேரியைச் சேர்ந்த மருத்துவர் இந்த ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார். இவை மூன்று நிலைகளில் வேலை செய்கிறது என்று இவர் குறிப்படுகிறார். ஒரு மன அழுத்த சூழ்நிலை அறிவிப்பு மூளைக்கு வந்தவுடனேயே, ஒரு ராணுவத்தடவாளம் போன்று பிட்யூட்டரி சுரப்பிகள் ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன. இது ஒரு “அபாய அறிவிப்பு” போன்று முதல் கட்டம். Somatotrophic harmone (STH), மற்றும் Adrenocriticotropic ()ACTH  என்பவை இதில் சுரக்கும்   முக்கியமான இரண்டு ஹார்மோன்கள்.

இதில் எஸ் டி ஹெச் எனும் ஹார்மோன் உடனடி விளைவுகளை வெளிப்படுத்தும் – அதாவது காய்ச்சல், உடல் வலி, அசதி என்று முதல் அறிவிப்புகளை வெளிப்படுத்தும். ஏ சி டி ஹெச் ஹார்மோன் அடிரிலின் சுரப்பியை ஊக்குவித்து கார்டிசோல்  என்கிற ஹார்மோனை சுரக்க செய்யும். இந்த ஹார்மோன் எஸ் டி ஹெச் விளைவுகள் சமன் செய்யும். இப்படி நம் உள்ளுக்குள்ளேயே தாக்குதலும் தானாகவே சமாதானமும் ஆகிக்கொண்டிருக்கும். இது இரண்டாவது கட்டம். மன அழுத்த நிலை தற்காலிகமாக உருவாகும்போது இப்படி நம் உள்ளே இருக்கும் பாதுகாப்பு படைகள் நிலையை சரி செய்துவிடும்.

ஆனால், ஹார்மோன்கள் சரியாக தேவையான அளவு மட்டுமே சுரக்கும் போது பிரச்சனையில்லை. மன அழுத்த நிலை தொடர்ந்து,  தேவைக்கதிகமாக கார்டிசால் சுரக்கும்போது  அயர்ச்சி என்ற மூன்றாவது கட்டத்தைத்  தொடும்.  இந்த மூன்றாவது கட்டத்தில்தான் அல்சர், டயபெடீஸ், ரத்தகொதிப்பு போன்ற வியாதிகள் ஆரம்பிக்கின்றன. 

சில சமயம் இந்த மன அழுத்தம் உடலில் வலிகளைத் தோற்றுவித்து தசை மற்றும் நரம்புக் கோளாறுகளும் வர ஆரம்பிக்கும். தலைவலிக்கு பெரும்பாலும் இந்த அழுத்தமே காரணம். இது மன அழுத்தமாக இருக்கலாம் அல்லது உடலில் வேறு எந்த அவயத்தின் மீதும் அழுத்தம் ஏற்படலாம். தலை மற்றும் கழுத்து தசை நார்கள் தொடர்ந்து சுருங்கி விரிந்து வேலை செய்யும்போது அவைகளில் ஒரு இழுப்பு (spasm) வரக்கூடும். இந்த தசை இழுப்பு ரத்த நாளங்களையும் இழுத்து அதனால் வலி ஏற்படலாம். அளவுக்கதிகமாக வேலை செய்பவர்கள், அழுத்தம் நிலவிய சூழ்நிலையில் வேலை செய்பவர்கள், அல்லது பிடித்தமில்லாத வேலையைச் செய்பவர்களுக்கு இப்படிப்பட்ட வலிகள் வரும். மற்றொரு வகை டென்ஷன் தலைவலி வாஸ்குலர் தலைவலி எனப்படும். இதில் ரத்த நாளங்களில் சுருங்கி விரியும் வேலை மிக விரைவாக நடக்கும். இந்த சமயத்தில் ரத்த நாளங்களில் படபடப்பும் (throbbing) கசிவும் இருக்கும். மைகிரைன் வித தலைவலி இந்த வகை. 

வயிற்றுக்கும், நம் உணர்வுகளுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. வயிற்றைக் கலக்கும் டென்ஷன்களும், வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வுகளும் நமக்கு மிகப்  பழக்கமானவையே. அதேபோல், ரொம்ப பசியாகவோ அல்லது வேறு ஏதோ உடல் உபாதையில் இருந்தால்கூட, ஒரு சந்தோஷமான விஷயம் காதில் விழுந்தவுடன், அல்லது நமக்குப்  பிடித்த நபரின் வருகை என்ற நிகழ்வுகள் நடக்கும்போது பசியோ உடல் உபாதையோ காணாமல் போய்விடும். இதனால், வயிற்றுப்புண் வியாதிக்கும் மன அழுத்தத்திற்கும் தொடர்பு உண்டு. 

ஜீரணம் ஆகும் வகையில் நம் வயிற்றில் ஜீரண திரவங்கள் உற்பத்தியாகிக்கொண்டிருக்கும். மன அழுத்தம் ஏற்படும்போது ஸ்டிரெஸ் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரந்து, வயிற்றின் சுவர்களில் ரத்த சப்ளையை தாமதப்படுத்தும். இந்தச்  சுவர்களில் மெல்லிய திரை போன்ற ஒன்று படர்ந்து இருக்கும். ரத்த ஓட்டம்  குறையும்போது இந்தத் திரைகளுக்கு ஜீரண அமிலத்தை எதிர்க்கும் சக்தி குறைந்துவிடும். அழுத்த சூழ்நிலையில் ஜீரண திரவங்கள் அதிகமாக உற்பத்தியாகும். ஒரு  பக்கம் ரத்த ஓட்டம் குறைந்து ஜீரண அமிலங்களை எதிர்கொள்ளும் சக்தி குறைகிறது. மறு பக்கம் இந்த அமிலங்களின் உற்பத்தி அழுத்த சூழ்நிலையால் அதிகமாகி, வயிற்றுக் சுவர்களின் மேல் இருக்கும் மெல்லிய திரைக்கு மேலும் சோதனை. முடிவில் அவை பிய்ந்து, வயிற்றில் புண்கள் ஆரம்பிக்கும். 

இதுபோல், மன அழுத்தத்தால் கோபம் ஏற்பட்டு மூளையில் உள்ள ரத்த நாளங்கள் வெடித்து உயிருக்கு ஆபத்தான உதாரணங்கள் அநேகம். எக்கச்சக்கமாக ரத்த நாளங்கள் சுருங்கி விரியும் வேலையைச் செய்தால், கொரோநரி ஆர்டரீஸ் எனப்படும் இதயத்துக்கு ரத்தம் கொண்டு போகும் ரத்த நாளங்கள் சுருங்கிப்போகும். 

சுருங்கிய ரத்த நாளம் வழியாக இதயத்துக்கு ரத்தம் செல்லும் அளவு குறைந்துவிடும். நாளடைவில் இந்த ரத்த நாளம் மிகவுமே சுருங்கும்போது அது அந்த மனிதரின் முடிவில் கொண்டுவிடும். 

நாம் உண்ணும் உணவில் இருக்கும் சக்தியை புரதச் சத்தாகவும், க்ளுகோசாகவும்  மாற்றும் ஸ்டிரெஸ் ஹார்மோன்கள் அளவுக்கதிகமாக சுரக்கும்போது சக்கரை அளவு ரத்தத்தில் அதிகமாகி டயபடீஸ் உருவாகிறது. 

பொதுவாகவே மன அழுத்தம் பலவித நோய்களை விளைவிக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரிந்தாலும் நம்மையறியாமலேயே ஏதோ ஒரு ஓட்டத்துக்குள் நுழைந்துவிடுகிறோம் – ஆசைகள், ஆர்வங்கள் நிறைவேற்ற வேண்டிய குறிக்கோள்கள் என்று நம்மை ஓட வைக்கும் இந்த லிஸ்ட் வெகு நீளம். ஆனால் ஒரு நிமிடம் நின்று நிதானித்து மன அழுத்த சுழல் காற்றில் சிக்காமல் படிப்படியாக நமது குறிக்கோள்களையும் ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளலாமே? 

கட்டாயம் முடியும் – மனது வைத்து ஒருமுகமாக செயல்பட்டால். நமது வாழ் முறையையும் உணவுப் பழக்கங்களையும்  இன்னும் இயற்கையோடு ஒத்ததாகவும், உடல் நல கேடுகள் வராமலும் இருக்கும் வகையில் அமைத்துக்கொள்ளலாம். நம் ஓட்டத்தில் மன அழுத்தம் தவிர்க்க முடியாததா? பரவாயில்லை. அவ்வப்போது நின்று நிதானித்து பயணப்படலாம். இளைப்பாறி, பயணத்தைத் தொடரலாம். மனதுக்கு பிடித்த விஷயங்களில் – இசை, நண்பர்களுடன் அரட்டை, அல்லது வழக்கமாக செய்யும் வேலையிலிருந்து  ஏதும் வித்தியாசமான ஆர்வம், என்று பல வித மாற்று வழிகளில்  நடுநடுவே மனதை செலுத்தலாம்.

செய்த ஒரு ஆராய்ச்சியில் atherosclerosis என்ற இதய நோயை வாழ் முறையை மாற்றிக்கொள்வதன்  மூலமும் உணவுப் பழக்கத்தில் மாறுதல் செய்வதன் மூலமும்  மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மருந்தே அவசியமில்லை. 

உடல் பயிற்சிகளும் ஒரு அருமையான Stress busters. நாம் முன்பு பார்த்த நிர்வாக ஆலோசகர் பெண் கூறுகிறார். “சில சமயம் வீட்டில் தரையை நன்றாகத் துடைப்பது என் மன அழுத்தத்திற்கு சரியான வடிகாலாய் உணருகிறேன்.” என்கிறார். யோகா, தியானம், ஏரோபிக்ஸ் என்று உடல் பயிற்சிகளும் பலவகை. ஒன்றுமேயில்லாமல் வெறுமே நடைப் பயிற்சி கூட சிறந்த பலனையளிக்கும். 

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...