Thursday, February 01, 2018

சமுதாய வளர்ச்சிக்கு இன்றைய இளைஞர்களின் பங்கு

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோவை-641 035
அலைபேசி: 98438 74545.
சமுதாயத்தில் இளைஞர்கள் 
இளைய சமுதாயம்தான் நாட்டின் முதுகெலும்பு என்பதற்கேற்ப இன்றைய இளைஞர்கள் தங்களது சக்தியை நல் வழியில் பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும். 
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டுபாட்டுடன் வளர்த்தால் நல்ல ஒரு இளைஞர் சமுதாயம் உருவாகும். குழந்தை பருவத்திலே அவர்களை நல்வழிப்படுத்தி வருதலில் பெற்றோர்களின் பங்கு அதிகம் உள்ளது. இளைஞர் சமுதாயத்தை நல்ல முறையில் 'டியூன்” செய்தால், இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. 
இன்றைய இளைஞர் சமுதாயத்தில் இன்றைய இளைஞர்களிடம் சமூக அக்கறை இல்லை. அவர்களது வாழ்க்கையே வாட்ஸ் ஆப், பேஸ் புக் என்றாகி விட்டது. வரதட்சணை கொடுமை போன்ற செயல்கள் தான் அடிக்கடி நடக்கின்றன. இவற்றின் பின்னால் இளைஞர் சமுதாயம் உள்ளது. ஒருவர் தப்பு செய்யும் போது ஒட்டு மொத்த இளைஞர் சமுதாயத்தை இது பாதிக்கிறது. இளைமையிலே குடி பழக்கத்திற்கு அடிமை ஆவதால் அவர்களால் சமுதாயம் சார்ந்த அக்கறைகளில் ஈடுபட முடியாமல் போகிறது. இதை ஒவ்வொரு இளைஞர்களும் ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்தாலே போதும், அவர்களின் வாழ்க்கை அவர்கள் கையில் என்பது புரியும்.
தாழ்வு மனப்பான்மையால்
தாழ்வு மனப்பான்மை இளைஞர்களை சமுதாய அக்கறையில் ஈடுபட முடியாமல் செய்கிறது. படிக்கிற காலத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் திட்டும் போது தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. குடும்ப பொருளாதார நிலைமையால், அவர்களது தோற்றம், நடை, உடை போன்ற பல விஷயங்களில் ஒவ்வொரு இளைஞனும் தாழ்வு மனப்பான்மையால் சுருங்கி போகிறான். தாழ்வு மனப்பான்மை போன்ற காரணிகளை தவிர்த்து, இளைஞர் சமுதாயத்தை சமூக அக்கறை கொண்டவனாக மாற்ற வேண்டும்.
சமுதாய அக்கறை அதிகமே 
இன்றைய இளைஞர்களிடம் சமுதாய அக்கறை அதிகம் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போதே என்.எஸ்.எஸ்., என்.சி.சி., களில் சேர்ந்து சமுதாய பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறான். இதன் மூலம் அவன் மனதில் சமூக அக்கறை ஏற்படுகிறது. கல்லூரி காலத்தில் கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரம், ஆறு, கண்மாய் போன்றவைகளில் தூர் வாரும் பணிகளில் ஈடுபட்டு சமுதாய அக்கறையில் பங்கு பெறுகிறான். 
ஜாதி, மத பேதமின்றி உதவி 

  • இன்றைய இளைஞர் சமுதாயத்தினர் அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மையை அதிகம் கொண்டுள்ளனர். 
  • நூற்றுக்கு 50 சதவீதம் உதவும் மனப்பான்மை இருக்கும் என்றால், மீதமுள்ள 50 சதவீதம் உதவா எண்ணம் இருந்தால் யாராது சொல் கேட்டு உதவி செய்யாமல் இருப்பர். 
  • சென்னையில் நடந்த இயற்கை பேரிடர் நேரத்தில் இளைஞர்கள் சமுதாயம் தானாக முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜாதி, மத பேதமின்றி உதவி செய்துள்ளதை குறிப்பிடலாம். 
நாடு முன்னேற துடிப்பு வேண்டும் 
சமுகத்தில் என்ன நடக்கிறது, நாம் எப்படி சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் இன்றைய இளைஞர் சமுதாயம் உள்ளது. நாட்டு நடப்புகளை ஊடகங்கள், நாளிதழ்களை பார்த்து அப்டேட் செய்து கொள்ள வேண்டும். சமுகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் உள்ளனர்.
சமூகத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு அதை முன்னேற்று வதற்கான வழிமுறைகளை தேட வேண்டும். நாடு முன்னேற வேண்டுமானால், இளைஞர் சமுதாயத்தினர் துடிப்புடன் செயல்பட வேண்டும்.
ரத்த தானம் செய்வதில் ஆர்வம்
இன்றைய இளைஞர்கள் சமுதாய அக்கறையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். உயிர் காப்பு பணிகளில் அதிகம் ஈடுபடுகின்றனர். விபத்து காலங்களில் இளைஞர்கள் ரத்த தானம் செய்கின்றனர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ரத்த தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளனர். தாய் நாட்டின் மீது உள்ள அக்கறையால் தான் ஆண்கள், பெண்கள் அனைவரும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுகின்றனர்.
உறுப்பு தானங்களில் இளைஞர்கள் 
உடல் உறுப்பு தானங்களில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும் விபத்து நடந்து உயிர் இழந்த இளைஞனின் உடல் பாகங்கள் மற்றவர்களுக்கு பொருத்தப் பட்டுள்ளதாக செய்திகளில் அடிக்கடி பார்க்கிறோம். கல்லூரிகளில் சமூக நற்பணி மன்றங்கள் அமைத்து பொதுமக்களுக்கு சமுதாய் தொண்டாற்றி வருகின்றனர். 
சாதிக்கும் உணர்வை விதைப்போம் 
இன்ளைய இளைஞர்களிடத்தில் ஜாதிய உணர்வு அதிகம் உள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூலம் இது ஓரளவு தடுக்கப்படுகிறது என்றாலும், இதுஒரு 'ஸ்லோ பாயிசன்' மாதிரி இளைஞர்களிடத்தில் பரவி மெதுவாக சமுதாயத்தை அழிக்க கூடியது. நம்முடைய துரதிஸ்டம், இதை வளர்த்து விடத்தான் ஆட்கள் இருக்கிறார்களே தவிர, இதை ஒழித்து நல்ல இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. இவற்றையெல்லம் கடந்து தான் இளைஞர் சமுதாயம் நல்ல முறையில் வந்து கொண்டிருக்கிறது. சாதியை சான்றிதழில் மட்டும் வைத்து விட்டு, சாதிக்கும் உணர்வை மட்டும் மனதில் விதைப்போம். இளைஞர்களே டாக்டர், ஆசிரியர், இன்ஜினியர் என எது வேண்மானாலும் ஆகுங்கள். மனிதனாய் இருங்கள்.
நம்நாட்டின் தரத்தை உயர்த்த வேண்டும் 
இன்றைய இளைஞர்களிடம் சாதிக்கும் உணர்வு அதிகமாக உள்ளது. படித்துமுடித்த உடன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். தாய் நாட்டில் வேலை பார்த்து நம்நாட்டின் தரத்தை உயர்த்த வேண்டும். சமூக அக்கறை என்பது முதலில் தேர்தல் காலங்களில் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவது தான். இதை பெரும்பாலான இளைஞர்கள் செய்வது இல்லை. தானும் வாக்களித்து, மற்றவர்களையும் வாக்களிக்க செய்வது தான் உண்மையான சமூக அக்கறை. இதை ஒவ்வொரு இளைஞனும் செய்ய வேண்டும்.
மாணவர்களின் முன்னேற்றத்தில் ஓர் ஆசிரியரின் பங்கு
  • ஆசிரியர் தொழில் புனிதமானது. மாணவர்களின் அறிவுக் கண்களைத் திறப்பவர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி உணர்வுக்கும் ஊக்கத்துக்கும் முக்கிய தூண்டுகோலாக இருப்பவர்கள் ஆசிரியர்களே. 
  • “எழுத்தறிவித்தவன் இறைவனாகும்" என்பது அதிவீர இராம பாண்டியரின் வெற்றி வேற்கை ஆகும். அறிவே தெய்வம் என்பர் அறிஞர் பெருமக்கள். அறிவைப் போதிக்கும் ஆசானும் இங்கு தெய்வமாக கருதப்படுகிறான்.
  • மாணவர்கள் தொடர்ந்து படித்து முன்னேற வேண்டுமானால்ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களின் கல்வியில் அக்கறைக் காட்ட வேண்டியது அவசியம் ஆகும். பள்ளியில் கல்வியைப் பாதியில் விடுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு ஆசிரியர்கள் மாணவர்களின் படிப்புக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்க வேண்டும். இந்திய சமுதாயம் ஏழைச் சமுதாயம் என்பதை மனதில் நிறுத்தி, ஆசிரியர்கள் மொட்டாக இருக்கும் மாணவச் செல்வங்களுக்கு நிறைவான கல்விச் செல்வத்தைக் கொடுத்து மணம் வீசும் மலராக திகழச் செய்ய வேண்டும். ஒவ்வொரு தமிழாசிரியருக்கும் மொழிப்பற்று, இனப்பற்று, சமுதாயப் பற்று இருக்க வேண்டியது அவசியமாகும்.

  • கண்ணுடையர் என்பவர் கற்றோர்,
  • முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்
என்ற குறளுக்கு ஏற்ப பகுத்தறிவையும், அறிவு சிந்தனையையும் சமூகத்திற்கு உருவாக்கிட ஆசிரியர் பணி மிகப்பெரிய பங்கை வகிக்கின்றது. அறிவுக் கண்களைத் திறந்து விடும் கல்விப் பணி மிக முக்கியமானதாகும். அந்த உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களைச் சமூகம் பெருமளவில் நம்பியிருக்கிறது. 
  • எதிர்காலத்தில் பல சாதனைகளைப் படைக்கவிருக்கும் மாணவர்களின் கல்வி அறிவு எந்த அளவுக்கு முக்கியம் என்பது அனைவரும் அறிந்த எனவே, ஆசிரியர்கள் மாணவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அன்பு கலந்த மனித நேயத்தோடு கல்வி கற்பிக்க வேண்டும். எத்தனை ஆண்டுகள் வேலை செய்தோம் என்பது முக்கியமல்ல. மாறாக எத்தனை மாணவர்களை முன்னேற்றியுள்ளோம் என்பதே முக்கியம். தன்னிடம் கற்ற மாணவன் ஒருவன் உயர்ந்த நிலையில் வாழ்கிறான் என்று கேள்விப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அந்த நல்ல வார்த்தைகளை செவிமடுப்பது ஒன்றே ஒரு நல்ல ஆசிரியருக்கு கிடைக்கும் அரிய பரிசாகும்.  
  • “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பது அமுதவாக்காகும். தெய்வத்திற்குச் சமமாக கருதப்படும் ஆசிரியர்கள் பெருமைக்குரியவர்களே! எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிக்கள் ஆசிரியர்கள் என்றால் அதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது. 
  • இன்றைய கல்வி உலகம் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு, அதற்கேற்ப அதிநவீன முறையில் கல்விக்கூடங்களும் உருவாகி வருகின்றன. கல்வித் துறையிலும் போதனா முறையிலும் பல்வேறு புதிய நவீன உத்திகள் முறைகள் கையாளப்படுகின்றன. இருந்தபோதும் ஆசிரியரின் பங்கும் இன்னும் குறிப்பிட்டு கூறுகிற அளவில் இருப்பதை யாராலும் மறுக்க இயலாது. 
  • தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மிகக்குறைந்த கற்றல் கற்பித்தல் வசதிகளோடு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுகிறார்கள். அரசாங்கமும், பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பை வழங்கினால், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்ற இன பள்ளி மாணவர்களுக்கு இணையாக விளங்குவார்கள் என்பது முற்றிலும் உண்மையாகும். 
  • தேர்வில் வெற்றிபெறவும் தலைசிறந்த மாணவனை உருவாக்குவதற்கும் ஆசிரியர்களே தங்களது பொன்னான காலத்தை மாணவர்களுக்கு அர்ப்பணிக்கிறார்கள். மாணவர்களின் பிரச்சினைகளைத் தெளிவுடன் சிந்தித்து, கவனத்தைப் படிப்பின் மீது செலுத்துவதற்கு உதவுகிறார்கள் ஆசிரியர்கள். கல்வி அறிவைத் தவிர்த்து மாணவர்களுக்கு பொது அறிவையும் சமுதாய சிந்தனையையும் உட்புகுத்துகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் உலக விஷயங்களையும் அறிந்துக் கொள்கிறார்கள். தம்மிடம் பயிலும் மாணவர்கள் நல்வாழ்வுக்குப் பாடாற்றக் கூடிய ஆசிரியர்கள் தம் மாணவர்கள் வாழ்வு நாசமாவதை விரும்ப மாட்டார்கள். 
  • ஆசிரியர் பணி போற்றுதலுக்குரியது. சில ஆசிரியர்கள் நோய் கண்ட காலங்களிலும் பரிவோடும், பள்ளி மாணவர்கள் மீது அன்பும் பாசமும் காட்டி சிறப்பாகப் போதிக்கின்றனர். இதனை மனதார உணர்ந்து, மதித்துப் போற்றுவது முகாமை கடமையாகும். ஆசிரியர்களை மதித்துப் போற்றியவர் தாழ்ந்த தில்லை, மிதித்துத் தூற்றியவர் வாழ்ந்த தில்லை". உலக உண்மையை அறிந்து கொள்ள இயலாதவனாய் இருந்த மனிதனை உலக வளர்ச்சிக்கு ஏற்ப அவனது எண்ணத்தை தட்டியெழுப்பியவர் ஆசிரியரே! கற்றவனுக்குச் சிறப்பு சேர்க்கும் ஆசிரியர் துறை போற்றுதலுக்கு உரியது.

“மன்னும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையோன்"
“மன்னனுக்கு தன் தேசமல்லால் சிறப்பில்லை
கற்றோனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”.
வருங்கால இந்தியாவில் மாணவர் பங்கு 
  • இந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில்தான். மான் *அவன் + மாணவன். மாண் என்றால் பெருமை. அதனால்தான் மாண்ூஅவர்கள் என்று இந்தப் பருவத்தினரை ஊக்கப்படுத்தி வருகின்றாகள். இப்பருவத்தினரின் மீது ஊக்கம் செலுத்தி வருவதால் மாண்ூஅவர்கள் பங்கு வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது. 
  • பெருமைமிக்க திறமைகள் இப்பருவத்தில் தான் கிடைக்கும். மண்ணைக் குழைத்தால்தான் பாண்டம் வரும். மாணவர்களை செம்மைப்படுத்தினால்தான் இந்தியா வளரும். இந்தியாவின் ஆக்கப் பூர்வ சக்தியே இந்த மாணவர்கள் தான். மாணவர்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது. 
  • தேசியத் தலைவர்கள், மாணவர் பருவத்திலேயே இந்தியாவிற்கு ஆற்றவேண்டிய பங்குகளை செய்ததினால்தான் இன்றும் அவர்கள் சரித்திரத்தில் நிலைத்து இருக்கிறாகள். அன்றைய காலக் கட்டத்தில் சுதந்திரம் தான் பிறப்புரிமையாக கருதப்பட்டது. இன்றையக் காலக்கட்டத்தில் மேலும் ஒரு பாரம் மாணவர் சமுதாயத்தின் மீது விழுந்துள்ளது. அதுதான் தீவிரவாத சக்திகளுக்கு எதிரான போராட்டம். வேலிப் போட்டால்தான் விலங்குகள் பயிரினை மேயாது. இந்தியாவின் வேலிகளாக மாணவர்கள் இருந்தால்தான் தீவிரவாதங்கள் தலைத் தூக்காது. காந்தி தேசத்தில் கோட்சேக்களை வளரவிடக்கூடாது. அவர்களை அழிப்பதில் பெரும்பங்கு மாணவர்களுக்கு இருக்கிறது என்பதை இன்றைய தருணத்தில் மாணவர்கள் முழுமையாக உணரவேண்டும். 
  • மாணவர்களின் சேவைகளில்தான் இந்தியாவின் தேவைகள் எதிர்ப் பார்க்கப்படுகிறது. இன்றையக் காலக் கட்டத்தில் இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதங்களை ஒடுக்குவதற்கு மாணவர் சமுதாயம் பல நல்ல யுக்திகளை கையாள வேண்டும். இந்த இந்திய மண் எதிரியையும் வாழ வைக்கின்ற கருணை மண். அதனால்தான் இந்த மண்ணில் மட்டும் மனித இனத்திற்கு எதிராக மரண தண்டனைகள் மறுக்கப்படுகின்றன. எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் சிறைவாசத்தின் மூலம் அகிம்சை வழியில் அவர்களை திருத்தக்கூடிய கண்ணியம் இந்த மண்ணிற்கு உண்டு. கண்ணியத்தைக் கடைப் பிடிக்கக்கூடிய சட்டத் திட்டங்களைப் பின்பற்றக் கூடிய மாணவ சமுதாயம் உருவாக வேண்டும். (அல்லது) உருவாக்கவேண்டும். 
  • ஒளிதரும் நெருப்பாக இருக்க வேண்டுமே தவிர ஒழிக்கும் நெருப்பாக மாணவ சமுதாயம் மாறக் கூடாது. இதற்க்கு சிறந்த எடுத்துக் காட்டாக நமது இந்திய ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் போன்ற மாணவர்கள் சமுதாயத்திற்குத் தேவை. கற்றக் கல்வியால் இந்தியாவிற்கு ஆற்றக் கூடிய கடமைகளையும் கற்று வரக்கூடிய மாணவர் சமுதாயம் தேவை. 
  • புயல் வீசினால் படகை செலுத்த நினைப்பது தவறு. தீய சக்திகளை தீய சக்திகளால் அழிக்க நினைப்பது தவறு. புயலைப் போன்ற தீய சக்திகளை பொறுமையோடு யோசித்து களைவதற்கு தேவையான காரியங்களை உருவாக்க வேண்டும். 
  • படிக்கின்றப் பருவத்திலேயே இடையூறு வந்தால்தான் சிறந்த சிந்தனை வளரும். ஈர மண்ணில்தான் பூக்கள் அழகைக் கொட்டும். மாணவப் பருவத்தில்தான் மனதைக் கட்டுப் படுத்த முடியும். அதற்கான பயிற்ச்சிகள் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். அப்படிப்பட்டப் பயிற்சிப் பெற்ற மாணவர் சமுதாயத்தின் மூலம் இந்தியாவின் தேவைகள் எதிர்ப் பார்க்கப்படுகின்றன. வருங்கால இந்தியாவின் மாணவர் பங்கு இன்னொரு கால சரித்திர சுவடாகும்.

சமூக சேவையில் இளைஞர்களின் பங்கு! 
  • இன்றைய உலகம் அதீத வளர்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது என்றால் அதில் இளைஞர்களின் பங்கு மிகப் பெரியதாகும். காரணம் எதையும் செய்து முடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் துணிவும் ஒரு இளைஞனிடம் இருப்பது தான். எனவே ஒரு சமூகத்தை வளர்ச்சி பாதையில் இழுத்து செல்ல வேண்டுமென்றால் அது அந்த சமூகத்தின் இளைஞர்கள் கையில்தான் இருக்கின்றது. அப்படிபட்ட இளைஞர்களை உருவாக்குவது இந்த சமூகத்தின் கடமையாகும்.
  • ஆனால் நமது சமூகத்தில் இன்றைய இளைஞர்களின் போக்கு மிகவும் கவலையளிப்பதாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவர்களிடையே உண்மையான இஸ்லாமிய அறிவும் தேடலும் அற்றுப்போனமையாகும். நமது இளமைப்பருவத்தை வீணான கேளிக்கைகளிலும் அர்த்தமற்ற செயற்பாடுகளிலும் பயனற்ற பொழுதுபோக்குகளிலும் செலவிடுகின்றனர்.
  • இன்று சில சிந்தனை உள்ள இளைஞர்களும் படித்து பட்டம் பெற்று கைநிரம்ப சம்பாதித்து வாழ்க்ககையில் செட்டிலாகி விடவேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் அவர்களை வளர்க்கும் பெற்றேர்களும் நல்ல படித்து வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற சிந்தனையை படிக்கும் பருவத்திலேயே புகுத்தி விடுகின்றனர்.
  • இந்த சமூகத்தின் மீது அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் எந்த அளவு அக்கறை உள்ளவர்களாக இருந்தார்கள் அந்த உணர்வு நம்மிடம் உள்ளதா? என்பதை இன்றைய இளைஞர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். உண்மையான சமூக அக்கறை என்பது ஆபத்திலிருந்து மக்களை காப்பாற்றுவது தான் இதை தான் நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்.
  • என்னுடைய நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அவரைச் சுற்றிலும் அது ஒளிவீசியபோது விட்டில் பூச்சிகளும் நெருப்பில் விழும் இதரப் பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றை (தீயில் விழாமல்) தடுத்துக் கொண்டிருந்தார். (ஆனால்) அவை அவரையும் மீறி தீயில் விழுகின்றன. (இவ்வாறுதான்) நரகத்(தில் விழுவதிலிருந்து (உங்களைத்) தடுக்க உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். (ஆனால்) நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்து கொண்டிருக்கிறீர்கள்.'என்று கூறினார்கள்.  
  • நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகானவர்களாகவும் மக்களிலேயே வீரமிக்கவர்களாகவும் மக்களிலேயே தாராள மனமுடையவர்களாகவும் இருந்தார்கள். (ஒரு முறை மதீனாவின் மீது பகைவர்கள் படையெடுத்து வருகிறார்கள் என்று வதந்தி பரவவே) மதீனாவாசிகள் பீதிக்குள்ளானார்கள்.
  • அப்போது அவர்களை நபி(ஸல்) அவர்கள் முந்திச் சென்று குதிரையில் ஏறி (மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் எதிரியை எதிர்கொள்ளப்) புறப்பட்டார்கள்; மேலும் 'இந்தக் குதிரையைத் தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டேன்' என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல்:புகாரி
  • சமூக சேவைகளிலேயே சிறந்தது மக்களை நரகிலிருந்து காப்பற்றி சுவனத்திற்கு அழைத்தும் செல்லும் பணியாகும். இந்த சேவைக்காக தான் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் இருபத்தி மூன்று ஆண்டுகளின் வாழ்வை தியாகம் செய்தார்கள்.
  • இன்றைய சமூக சேவை இரண்டு விசயங்கள் மூலம் நடைபெற வேண்டும். ஒன்று உடல் உழைப்பின் மூலம் செய்யபவை மற்றொன்று செல்வத்தின் மூலம் செய்யபவை ஆகும்.
  • இன்று பலர் தங்களுக்கு உடல் வலிமை இருந்தும் செழிப்பான செல்வம் இருந்தும் சமூகத்தின் மீது கொஞ்சம் கூட சிந்தனை இல்லாமல் அலட்சியமாக இருக்கின்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களின் பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட நபித்தோழர்களில் ஒருவர் இந்த சமூகத்தில் அதிக இரக்கமுள்ளவர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் ஆவார். கஷ்டப்படுபவரின் கஷ்டங்களை களைந்தவர்.பாதிக்கப்பட்டவரின் உரிமைகளை வாங்கி கொடுத்தார்கள்.எவருக்கும் தெரியாமல் தன் குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவருக்கு அவரின் குடும்பத்தின் வாழ்க்கை வசதியை செய்து கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்.
  • தனது மகள் ஆயிஷா (ரலி) அவர்களை பற்றி தவறான கருத்தை கூறியதற்காக இனிமேல் உனக்கு நான் செய்து கொண்டிருந்த உதவியை நிறுத்தி விடுவேன் என்று கூறிய போது அதை மறுத்து இறைவன் நீங்கள் மன்னியுங்கள் இறைவன் உங்களை மன்னிக்க வேண்டாமா? என்ற இறைசெய்தி வந்த உடன் செய்த சத்தியத்தை முறித்து விட்டு தொடர்ந்து உதவிகளை செய்து கொண்டிருந்தார்கள்.
  • இன்னும் உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும் தக்க வசதி உடையவர்களும் உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்புமிக்கவன். அல்குர் ஆன் 24:22.
  • நமது நாட்டின் தேச தந்தை காந்தியடிகள் இந்தியாவின் இறையான்மை உள்ள சிறந்த ஆட்சி அமையவேண்டு மென்றால் உமருடைய ஆட்சியை போல் அமைய வேண்டும் என்று கூறினாரே அந்த உமர் (ரலி) அவர்கள் இந்த சமூகத்தின் மீது வைத்திருந்து அவரின் உணர்வுள்ள சிந்தனைகளை எந்த முஸ்லிமினாலும் மறுந்து விடமுடியாது.ஒட்டு மொத்த மக்களுக்கும் பாதுகாப்பு அரனாகவும் மக்களின் கஷ்டங்களை தனக்கு வந்த ஒரு கஷ்டத்தை போன்று செயல் பட்ட வல்லவராக திகழ்ந்தார். அந்த உமர் மதீனாவின் ஆட்சியாளராக இருந்தபோதும் அதற்கு முன்பும் மக்களின் பாதுகாப்பு கவசமாகவே இருந்துள்ளார்.


No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...