முனைவர் பூ.மு.அன்புசிவா
கோயம்புத்தூர் – 641 028
பேச : 098424 95241.
இனபுணர்ச்சியை இத்தனை நுணுக்கமாகவும், வெளிப்படையாகவும். விவரிக்கும் இது போன்ற தமிழ் கவிதைகள் மிக அரிதாக எழுதப்பட்டு வந்தவை. இன்று இது போன்ற பெண் படைப்பாளர்களின் மத்தியில் பரவலாக விவரிக்கப்பட்டு வருகிறது முக்கியத்துவம் பெறுகிறது. சிறுகதை, கட்டுரை , நாவல், புதினம் போன்ற வௌ;வேறு ஆளுமையில் பெண்கள் ;இருந்த போதிலும் அதன் அடுத்தகட்டமான நவீனம். அதிநவீனம் என்கிற இலக்கிய கட்டமைப்பில் எழுதப்பட்டு வந்த பெண் ஒரு களம் கடந்து கவிதைகளிலும் ஆளுமை செய்தது. கோணங்கி, எஸ்.ராமகிருஸ்ணன்;, எம்.ஐp.சுரேஸ் போன்ற ஆண்கள் மட்டுமே புனைவு செய்து வந்த இலக்கியங்களை ஒரு காலகட்டத்தில் பெண்களாலும் அவர்களின் ;வலியை , துக்கத்தை, துயரத்தை பிரதிபளிக்க முடியும் என நிரூபித்தது. வெகுஐன பெண் கவிஞர்கள் எழுதுகிறார்கள். தமிழில் சமையல், வீடு குழந்தைகள் என்ற தளத்திலோ அல்லது பெண்ணியம், சமத்துவம் என்ற தளத்தில் மட்டும் இயங்கிவந்த பெண்மொழி இப்போது பாலியல் உறவுகள், அந்தரங்க விசயங்கள் போன்ற வேறு பல எல்லைகளை தொடத் துவங்கியிருக்கிறது.
சாரு நிவேதா போன்ற எழுத்தாளர்கள் ஆண்களின் சுய விசயங்களைக் கடந்து பெண்மொழியையும், கவிதை, கதை, கட்டுரைகள் போன்ற வெளிப்பாட்டில் அடையாளம் காண்பித்தார்கள். பெண்களுக்கு ஆண்களைவிட அனுபவங்களும், அதற்கான வாய்ப்புகளும் குறைவு என்ற நிலை மாற்றமடைந்து சிலர் தங்களுக்கே உரிய இடத்தை தங்களது படைப்புகளின் மூலம் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நிதர்சனம். ஒரு காலத்தில் லட்சுமி மாதிரியான சில பார்ப்பனியப் பெண்கள் மட்டுமே எழுதிவந்த படைப்புகள் சில காலமாற்றத்;தில் பார்ப்பனர் அல்லாத சில பெண்களையும் கடந்து. ஒதுக்கப்பட்டுக் கிடந்த இலக்கியமான தலித் இலக்கியத்தையும் சிவகாமி, பாமா போன்றோரால் முன்னிலைபடுத்தப்பட்டு கதை வடிவங்கள், நாவல், ஆவணப்படங்கள், என்ற வகைகளும் ஆண்களுக்கு நிகரானது. திலகவதி, சிவகாமி, பாமா, கிருஷாங்கினி, சல்மா, உமாமகேஸ்வரி போன்றோர் இன்னும் படைப்பாளுமையில் உயர்நிலையில் இருக்கிறார்கள். திலகவதியின் கல்மண்டபம் (நாவல்) சாகித்ய அகடாமி விருதுவரை பெற்றிருப்பது தமிழ் பெண்படைப்பாளர்களுக்கு ஒரு பெரிய அடையாளம் என்றே சொல்லலாம்.
சிவகாமியின் பழையன கழிதலும், ஆனந்தாயி, பாமாவின் கருக்கு, சங்கதி மாதிரியான நாவல்கள் தலித் இலக்கியத்துக்கும் பேச்சுமொழி வழக்கு நாவலில் பெரிய அடையாளத்தையும் கொடுத்து பெரிய அளவில் பேசப்பட்டது. சல்மாவின் இரண்டாம் ஐhமங்களின் கதை(நாவல்) இஸ்லாமிய பெண்களின் புறவாழ்வியலை எந்த மாற்றமுமில்லாமல் பட்டவர்த்தமாக எழுதியது இஸ்லாத் சமூகத்து மக்கள் மத்தியில் பெரும் ;சர்ச்சையை கிளப்பியது. சு.தமிழ்செல்வியின் அளம், கீதாரி, கற்றாழை பெரிய அடையாளத்தைத் தந்;தது. பாரததேவியின் கரிசல் இலக்கியத்தின் பேச்சு ;மொழிக்கதைகள் பரவலாக அறியப்பட்டது பல்வேறு பல்கலைகழகங்களில் பாடமாக வைக்கப்பட்டது.
…..சுமக்கவேயில்லாத
படி எப்படி ;இவ்வளவு
கனத்துவிடுகிறது
இந்த மாலை
மாதவிடாய் ஈரம்நிரம்பி
கணக்கிற பஞ்சை
போல (கவிஞர்.சல்மா)
சல்மாவின் ஒரு மாலையும் இன்னொரு மாலையும்(கவிதை) தொகுப்பில் சொல்லப்பட்டுள்ள கவிதை இது. வெளிவந்த காலகட்டங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது இருந்தாலும் இதுமாதிரியான கவிதைகள் கடுமையாக விற்பனையானது. பெருவாரியான வரவேற்பும் கிடைத்தது என்பதை மறுக்க முடியுமா?
தமிழிலக்கியத்தில் தலித் இலக்கியத்துக்குப் பின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்ல எந்த சமூகத்திலுமே ஆண்கள் தங்கள் பாலியல் உணர்வுகளை பேசினால் அது ஆண்களின் ;அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக பெண்கவிஞர்கள். படைப்பாளிகள் தங்கள் பாலியல் உணர்வுகளை பேச வந்திருப்பது நல்ல விசயம். மிக முக்கியமான நிகழ்வு புதியதலைமுறை கவிஞர்களின் அதீத வருகை குறிப்பாக பெண் வாசகர்களின் தனி கவனத்தைப் பெற்று வருகின்றன. தொடர்ந்து; கவிதைகள் தொகுப்புகளாக வந்துகொண்டுதானிருக்கிறது. அகத்திணை(கனிமொழி). பச்சைதேவதை(சல்மர்). முலைகள்(குட்டிரேவதி). மஞ்சனத்தி(தமிழச்சி). சங்கராபரணி(மாலதிமைதிரி), இரவுமிருகம்(சுகிர்தராணி), வெரும்பொழுது(உமாமகேஸ்;வ்ரி). லீனாமணிமேகலை. தமிழ்நதி, இளம்பிறை, அ.வெண்ணிலா, சந்திரா, புரியமாதவி, சத்யா இன்னும் பலவென்று எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போகிறது. இதுபோன்ற புதிய தலைமுறைக் கவிஞர்கள் பெண்மொழி வாயிலாக பெண்களின் அந்தரங்க பிரச்சனைகளாக கருதப்பட்டு வருபவை பற்றியும், உடல் பற்றியும், பாலியல் உறவுகள் பற்றியும், பெண்;ணுறுப்புகள் குறித்தும். தைரியமாக எழுதத் தொடங்கியுள்ளது தமிழிலக்கத்தில் பெரிய அடையாளம் சங்ககாலப் பெண்கவிஞரான வெள்ளிவீதியார் பாடல்களிலும், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆண்டாள் பாடல்;;களிலும் பாலியல் நிகழ்வுகள் நிறைய இருந்தன.
சமகாலத்தில் பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது. எல்லைகளை உடைக்கத் தொடங்கிருக்கும் தங்கள் மீது விமர்சனங்கள் கிளம்புவது நியாயமில்லை என்றே கூறவேண்டும். சிலர் ஒரு சில அதிர்ச்சிக்காக எழுதலாம். ஆனால் எல்லாக் கவிதைகளையும் அப்படிச் சொல்;லிவிட முடியாது. பெண்களுக்கான வெளிப்படைப்புலகம் இப்போதுதான் விரிவடைந்து கொண்டிருக்கிறது. அது முழுவதுமாக அவர்களை ஈர்த்து திசை திருப்பும், யதார்த்தத்தில் இல்லாத, கிடைக்காத சுதந்திரம் கிடைக்கும். அனைவரின் பார்வையும் கூர்மைப்படும். இவ்வiயான பெண்களை ஊக்கப்படுத்தலாம். கூடிய மட்டும் விவாதம் செய்யலாம். விமர்சனம் தவிர்;க்கலாமே. பெண்படைப்பாளி என்கிற பேதமில்லாமல் ;சகபடைப்பாளியாக பார்ப்போமா?
No comments:
Post a Comment