Skip to main content
துளசி செடியைச் சுற்றி வரக் காரணம் அறிவியலா? சமயமா?
- அறிவியலும் சமயமும் இணைந்ததே இந்து
மதம். துளசி செடியை காலையிலேயே
வணங்க வேண்டும் என்பார்கள். காரணம் இல்லாமல் காரியம்
இல்லை.
- துளசி மனதிற்கு அமைதிப்
படுத்தும் மனமும் மருத்துவ குணமும்
நிறைந்தது. துளசி நம் ஆரோக்கியத்திற்கு
மிக உகந்த ஒரு மூலிகைச்
செடி என்பதால் நம் அன்றாட வாழ்வியலுல்
துளசி முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.
- இதனால்தான் நாம் துளசி நீர்
அருந்துவதும், துளசி மாடம் வீட்டில்
வைக்க வேண்டும் என பெரியோர்கள் கூறுவதும்
காலங் காலமாக உள்ளது.
- துளசி பிராணவாயுவை வெளிப்படுத்தும்
ஒரு செடியாகும். இதனால்தான் வீட்டில் துளசி செடியை வைக்கச்
சொன்னார்கள். காலையிலேயே இந்தச் செடியை சுற்றி
வருவதால் நம் உடலுக்கு தேவையான
பிராணவாயு கிடைக்கின்றது. அளவான பிராண வாயு
நம் மூலையின் இயக்கத்தை சீராக்குகின்றது.
- துளசியில் புரதம், நார் சத்து,
மாவு சத்துகள் நிறந்துள்ளன.இதனால்தான் துளசி இலையை மென்றோ
அல்லது துளசி கலந்த நீரை
பருகுகின்றோம்.
- மேலும் துளசி இலை
சளிப் பிரச்சனையை நீக்கும் ஒரு செடியாகும். தினமும்
துள்சி இலையை மென்று விழுங்குவதால்
ஞாபக சக்தி அதிகரிக்கும். குழந்தைகள்
பால் குடிக்காமல் இருந்தால் இந்த இலைச் சாற்றுடன்
தேன் கலந்து கொடுக்க பிள்ளைகள்
பால் குடிக்கும்.
- துளசிச் சாற்றில் எலுமிச்சை
சாற்றை கலந்து தோலில் ஏற்பட்டிருக்கும்
சொறி சிரங்கில் தேய்க்க இந்தப் பிரச்சனை
நீங்கும். துளசி சாற்றை புண்ணில்
கட்ட புண் சீக்கிரமாக ஆறும்.
- சிறிதளாவு துளசி சாற்றை குடித்து,
தேள் கொட்டிய இடத்தில் டுளசி
சாற்றை ஊற்ற, விஷம் இறங்கும்.
தேகம் சுத்தமாகி நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்க, ஒரு துளசி இலையுடன்
3 மிளகை விழுங்கி வெந்நீர் குடிக்க வேண்டும்.
- தலை சுற்றல் மர்றும்
பித்த மயக்கம் நீங்க, துளசி
சாற்றுடன் சக்கரை கலந்து காலையில்
ஒரு மேசைக்கரண்டி என 1 வாரத்திற்கு பருக
வேண்டும்.
Comments
Post a Comment