Posts

கனவு மெய்ப்பட வேண்டும்

முன்னுரை தூக்கத்தில் காண்பது கனவு அல்ல. எது நம்மை தூங்கவிடாமல் செய்கின்றதோ அதுவே கனவு என்று கனவு காண தூண்டியவரே முன்னால் ஜனாதிபதியான அப்துல் கலாம் அவார்களாவார். அந்த வகையில் எமது கனவானது ஓர் இலக்கை நோக்கி செல்லுமானால் வெற்றி நிச்சயம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. கனவு மெய்ப்பட கனவு கானுங்கள் கனவு காண்பது ஓர் தனிமனிதனுடைய வெற்றிக்கான முதல் படியாகும். அதாவது ஒரு இலக்கை நோக்கிச் செல்லும் மனிதனை உந்துகின்ற சக்தியாக கனவு காணப்படுகிறது. நாம் ஒரு செயலில் வெற்றிபெற வேண்டுமாயின் எமது எண்ணம் சிறந்ததாக அமைய வேண்டும். அந்த வகையில் கனவு காணாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. இன்று பல்வேறு சாதனைகளை படைத்தவர்களின் வாழ்வில் நிச்சயம் சிறந்த கனவு இருக்கும் அதன் உந்துதலே அவர்களின் வெற்றியாக நிகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சிறந்த கனவுகளை காணுங்கள் அதுவே நாளை எம்மை சிறந்த சாதனையாளராக அல்லது சிறந்த தலைவராக உருவாக்கும். வெற்றிக்கு வித்திடும் கனவு நாம் காணுகின்ற கனவானது எம்மை வெற்றிப்பாதையை நோக்கி வழிகாட்டக் கூடியதாக அமைய வேண்டும். அதாவது அன்றாட வேலைகளை செய்து தினமும் வீடு வீடாக சென்று பத்திரிகைகளை வழங்க...

காமராஜர் அரசியல் பயணமும் சமுதாய வாழ்க்கையும்

முனைவர் பூ . மு . அன்புசிவா தமிழ்த்துறைத்தலைவர் , ஜேப்பியார் பல்கலைக்கழகம் , ராஜீவ்காந்தி சாலை , சென்னை -600119. பேச :98424 95241. முன்னுரை                 செயற்கரிய செய்வார் பெரியர் என்னும் வள்ளுவரின் வாய்மொழிக் கேற்பச் செயற்கரிய செயல்கள் புரிந்து செயல் வீரர் என்று புகழப்படுபவர் காமராஜர் . பாரதத்தின் விடுதலைக்காக மட்டுமல்லாமல் விடுதலை பெற்ற பாரதப்   பெருநாட்டின் உயர்வுக்காகவும் அயராது பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் காமராசர் . தலைநிமிர்ந்த தமிழகத்தைக் காணவிரும்பி , அயராது உழைத்த தன்னலமற்ற தலைவர் காமராசர் . தோற்றமும் இளமையும்                 காமராசர் 1903, சூலை 15- ஆம் நாள் விருதுநகரில் பிறந்தார் . தந்தை குமாரசாமி , தாயார் சிவகாமி அம்மையார் . தந்தையை இளமையிலேயே இழந்த காமராசர் தம் படிப்பை இடையிலே நிறுத்திவிட்டார் . தம் மாமாவின் கடையில் வேலை செய்தார் . செய்தித்தாள்களைப் ...

பாவேந்தர் கவிதைகளில் இயற்கையும் வாழ்க்கையும்

  முனைவர் பூ . மு . அன்புசிவா தமிழ்த்துறைத்தலைவர் , ஜேப்பியார் பல்கலைக்கழகம் , ராஜீவ்காந்தி சாலை , சென்னை -600119. பேச :98424 95241.   இந்த நூற்றாண்டில் தலை சிறந்த கவிஞராய்,   புரட்சி கவிஞராய் பாவேந்தராய் பாரதிக்குப்பின் வாழ்ந்த கவிஞர்களுள் தகுதியும் சிறப்பு மிக்கவராய் விளங்குபவர். புதுவை புரட்சிக்குயில் பாரதிதாசன் ஆவார்.   "நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா" என்று பாரதியாரை,   பாரதிதாசன் குறிப்பிட்டிருப்பது அவருக்கும் பொருந்தும். தமிழ்ப் பெரியார் திரு.வி.க அவர்கள் எனக்கு குயிலின் பாடலும்,   மயிலின் ஆடலும், வண்டின் யாழும் அருவியின் முழவும் இனிக்கும்,   பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்,   என்று குறிப்பிட்டுள்ளார் நாடற்ற வெள்ளத்தின் வேகம் கொண்ட கவிதைகளால் பாவேந்தர் புரட்சி செய்தார்.   கீழே அடித்தவுடன் மேல் எழும்பும் பந்தின் வேகம் போல அது புரட்சி கவிஞருக்கு பொருந்தும் என்று உவமைக் கவிஞர்   சுரதா புகழ்ந்துள்ளார். மொழியை வைத்துதான் ஒரு சமுதாயத்தின் வரலாறு, மாண்புகளை அறிய முடியும் . மொழியைப் புறக்கணித்துவிட்டு ஒரு சமுதாயம...