Posts

மகாகவி பாரதியார் வரலாறு

சுப்பிரமணிய பாரதியார் பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் 1882-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் நாள் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் சின்னசாமி அய்யர், தாயாரின் பெயர் லட்சுமி அம்மாள். பெற்றோர் இவருக்கு சுப்பிரமணியன் என்று பெயர் சூட்டினர். இருப்பினும் அப்பெயரைச் சுருக்கி சுப்பையா’ என்றே அழைத்து வந்தனர். சிறுவயதிலேயே அறிவோடும் ஆற்றலோடும் விளங்கிய சுப்பையாவை பெற்றோர்கள் உரிய வயதில் பள்ளிக்கு அனுப்பினர். சுப்பையாவுக்கு பள்ளிப்படிப்பில் ஆர்வம் அதிகம் இல்லை bharathiyar history in tamil . சுப்பையாவுக்கு ஐந்து வயதானபோது அவனது தாயார் லட்சுமி அம்மாள் மறைந்தார். தாயின் மறைவு சுப்பையாவின் மனதை வெகுவாகப் பாதித்தது. பாரதியார் வரலாறு தாயில்லாமல் சுப்பையாவை வளர்க்கப் பெரிதும் சிரமப்பட்ட அவனது தந்தை சின்னசாமி அய்யர், 1889-ம் ஆண்டு வள்ளியம்மாள் என்ற பெண்மணியை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். வள்ளியம்மாளும் தன் சொந்தப் பிள்ளையைப் போலவே சுப்பையாவிடம் அன்பு காட்டினார். சின்னசாமி அய்யருக்கு சுப்பையாவை கலெக்டராக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே அவர் எப்போதும் சுப்பையாவிடம் பள்ளிப்பாடங்களை...

ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கை வரலாறு

ஆபிரகாம் லிங்கன் அறிமுகம்  ஆபிரகாம் லிங்கன் சுய முன்னேற்றத்துக்கான அடிப்படைப் பண்புகளும், வெற்றிக்கான தகுதிகளும் ஒரு சேரப் பெற்றவர் ஆபிரகாம் லிங்கன். அவர் நற்பண்பு களைத் தேடிப் பெற்றவர், தகுதிகளை வளர்த்துக் கொண்டவர். மரம் வெட்டுவதில் இருந்து, நாட்டை ஆள்கிறது வரை அத்தனைக்கும் பொருத்தமான ஆளாய் இருந்தார் அவர். அமெரிக்கக் குடியரசின் பதினாறாவது அதிபரான லிங்கன் சுயமாய் படித்து முன்னுக்கு வந்தவர்.  மிகவும் எளிமையான குடும்பத்தில் 1809-ஆம் ஆண்டு அவர் பிறந்தார். விறகுக் கட்டை அல்லது மிருகக் கொழுப்பை எரியவிட்டு அந்த வெளிச்சத்தில் படிப்பார். புத்தகங்களை இரவலாய் பெற்றுவர வெகு தொலைவு நடந்து சென்றிருக்கிறார். படிப்பதில் அத்தனை ஆர்வம், சொந்த மாய் புத்தகம் வாங்க முடியாத அளவுக்கு வறுமை! அப்படிப் படித்துதான் அவர் வழக்கறிஞரானார். தான் காதலித்த பெண்ணை மணக்க முடியாத ஓர் அதிர்ஷ்க்கட்டை அவர்.  ஆபிரகாம் லிங்கன் திருமண வாழ்க்கை  மரத்தாலான சிறு குடிசையில் பிறந்த லிங்கன் மேரிடாட் என்கிற பணக்கார வீட்டுப் பெண்ணை மணந்ததும் அவருடைய துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். யானையைக் கட்டித் தீனி போடுகிற மா...

ஆபிரஹாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

காலங்கள் பல கடந்தாலும், உலக மக்களின் நினைவில் ஆபிரஹாம் லிங்கன் இருக்க காரணம் அவரது ஆட்சித்திறமை மட்டும் காரணமல்ல. யாருக்கும் தீமை செய்யாமல், சட்டம் மற்றும் விதிகளை மீறாமல் அவர் நடந்து கொண்டதே. இதற்கு உதாரணமாக, தன் மகன் படித்த பள்ளி ஆசிரியருக்கு ஆபிரஹாம் லிங்கன் எழுதிய கடிதத்தை குறிப்பிடலாம். இதோ அந்த கடிதம்... 'அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் மனிதர்களில் பகைவர்களுக்கு இடையில் நண்பர்களும் இருக்கிறார்கள் என்பதை என் மகனுக்கு கற்றுக் கொடுங்கள். அவனுக்கு பொறாமை குணம் வந்துவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து சுருங்கிக் கொள்வது, கோழைத்தனம் என்பதை புரியவையுங்கள். புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள். வானில் பறக்கும் பறவைகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும், பசுமையான மலை அடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க அவனுக்குகற்றுக் கொடுங்கள். ஏமாற்று...

ஆசிரியரும் வகுப்பறைச் செயற்பாடுகளும் - அதன் பிரதிபலிப்பும்

ஆசிரியரும் வகுப்பறையும் ஆசிரியர்கள் தனிமனிதனையும் சமூகத்தையும் முழு உலகினையும் கூட உருவாக்குபவர்களாவர். ஆசான்களின்றி கல்விச் செயன்முறை நடைபெறலாம். ஆனால் பூரணமான முழுமையான கல்வியைப் பெற்றுக் கொள்வது என்பது இயலாத காரியமாகும். ஒரு சிற்பியானவன் எவ்வாறான நுணுக்கங்களைக் கொண்டு சிலை ஒன்றினை செதுக்குகின்றானோ? அது போலவே ஆசிரியரும் சிறந்த எண்ணங்களையும், சிந்தனைகளையும், நுணுக்கங்களையும் கொண்டு ஒரு தனி மனிதனை செதுக்குகின்றார். எண்ணங்கள் சிந்தனைகள் நோக்கங்கள் எவ்வளவு சிறந்தனவாக இருப்பினும், நிர்வாகம் எவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாக இருப்பினும், கற்பதற்கான வளங்கள் எவ்வளவு ஏராளமானதாகவும் காலத்துக்கு ஏற்றனவாகவும் இருப்பினும் அவற்றால் மாணவர்கள் அடையும் பயன் ஆசிரியர்களை பொறுத்தே ஆகும். மாணவர்களின் அறிவு மட்ட வளர்ச்சி ஆசிரியர்களது அறிவு மட்ட வளர்ச்சி என்பவற்றுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்ற கோட்பாடும் காணப்படுகின்றது. ஆசிரியரும் வகுப்பறைச்  செயற்பாடுகளும் ஆசிரியரும் வகுப்பறைச்  செயற்பாடுகளும் வினைத்திறனுடைய ஆசிரியர் ஒருவர் மாணவரின் தேவைகளைக் கனிப்பவராகவும், மாணவர்கள் பிரச்சினைக்கு உள்ளாகும் போது அவர்...

வகுப்பாசிரியரின் பணியும் வகுப்பறையில் ஆசிரியர் பேணவேண்டிய ஆவணங்களும்

பல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும்  நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின்  தேவையற்ற  நடத்தைகளைக் கட்டுப் படுத்தும் வகையிலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு அணுகுமுறையே வகுப்பறை முகாமைத்துவமாகும். வகுப்பறையானது நன்கு கட்டமைக்கப்பட்ட கற்றல் கவிநிலையை ஏற்படுத்துவதாகவும், தீய நடத்தைகளைக்  கட்டுப்படுத்தி, கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக் கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இவற்றை அடைவதற்கேற்ற தெளிவாக வரையறை செய்யப்பட்ட சட்ட விதிகளைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். ஆசிரியர் ஓர் முகாமையாளராக பல பொறுப்புக்களை கொண்டுள்ளார். திட்டமிடல். ஒழுங்கமைத்தல். வழிப்படுத்தல். தொடர்பாடல். அறிக்கைப்படுத்தல். தலைமைத்துவம் உண்டாக்கல். வரவு செலவுக்குட்படுத்தல். வகுப்பறைகளை மேம்படுத்துவதில் வகுப்பாசிரியரின் பணியும்,கவனிக்கவேண்டிய விடயங்களும் வகுப்பறையினை மேம்;படுத்துவதில் ஆசிரியர் கொண்டுள்ள பொறுப்புக்களை நாம் பின்வரும் விடயங்களினூடாக ஆராய்ந்து நோக்கலாம். 1. ஆசிரியரின் தலைமைத்துவப் பொறுப்புக்கள். குழுவினது புலனை அல்லது சிந்தனையைக் கற்றலுக்குக...

ஆசிரியரின் பொறுப்புக்களும்,கடமைகளும்

ஆசிரியர் மாணவரின் மூன்றாவது பெற்றோர் ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நிலையான நேர்மறையான, முன்னுதாரணமான முன்மாதிரியாக எப்போதும் இருக்க வேண்டும். ஆசிரியரானவரான பிள்ளைக்கு அடிப்படை அறிவு, திறன், மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வதுடன் இன்னும் பல பொறுப்புக்களையும் கடமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளார். அவ்வாறு அனுதினமும் ஆற்றும் பொறுப்புக்களையும் கடமைகளையும் ஒருபோதும் வரையரை செய்து கூற முடியாது.  தினமும் ஆசிரியரால் ஆற்றப்படும் கடமைகளும் பொறுப்புக்களும் பிள்ளையினது அறிவு,  திறன்,  மனப்பாங்கு,  பலம்  மற்றும் பலவீனங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் மதிப்பிடுதல். வகுப்பறை விதிகளை திட்டமிடல்,  நடைமுறைப்படுத்தல். மாணவர்களை தயார்படுத்துதல். (பரீட்சை, போட்டிகள்,விளையாட்டு, ஏனையவை) மாணவர் முன்னேற்றம் தொடர்பாக பெற்றோருக்கு தெரிவித்தல். (கற்றல், பரீட்சை புள்ளிகள், ஒழுக்கம், செயற்பாடுகள்) மேற்பார்வை செய்தல். வகுப்பறைச் செயற்பாடுகளைகளை ஒழுங்கமைத்து மேற்கொள்ளுதல்.        போன்ற பல கடமைகளை தினமும் பொறுப்பாக நிறைவேற்றுகின்றார். புதிய மாணவன் என்பவன் எந்த...

சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (06.04.2022) இயல் இசை நாடகம் மன்றம் தொடக்க விழாவில் பேசிய போது எடுத்த படம்.

Image