Friday, October 26, 2018

சங்கஇலக்கியமும் தாய்வழிச்சமூக வெளிப்பாடும்...


முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி.
சரவணம்பட்டி, கோயம்புத்தூர் - 641 035.
பேச : 9842495241.           
சங்க இலக்கிய நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் சங்ககாலப் பெண்களின் தலைமை சான்ற இருப்புநிலையை நம் புலவர்கள் பதிவுசெய்துள்ளனர். தாய்வழிச்சமூகத்தில் மேற்கொண்ட இயற்கை வழிபாட்டில் பெண் முதன்மைப்படுத்தப்பட்டதும், பெண் தெய்வ வழிபாடுகளும், அத்தெய்வங்களுக்குரிய இயல்புகளும் பெண்ணின் சிந்தனையைப் பரந்துபட்ட நோக்கமாகக் காட்டியுள்ளன. தந்தைவழித் தலைமையில் நிலவுடைமைச் சமுதாயத்தின் தோற்றம் பெற்ற காலங்களிலும், பொதுவுடைமைச் சிந்தனையோடு திகழ்ந்த பெண்களின் தன்னியல்பு தெய்வத்தை முதன்மையாக வழிபட வைத்து, அவற்றுக்கான சடங்குகளில் அவளை ஈடுபடுத்தி ஆணைச் சார்ந்து வாழும் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டதனை அறிய முடிகின்றது. தந்தைவழிச் சமூகத்தில் அகவாழ்க்கையிலும், புறவாழ்க்கையிலும் சமூகக்கட்டமைப்புக்கு ஏற்ப தனது இருப்பை நிலைப்படுத்தியும், நிறைவு செய்தும் வாழ்ந்த பெண்களின் அடையாளங்கள் தாய்வழிமரபின் எச்சநிலைக் கூறுகளாக அமைந்துள்ளன என்பதற்குச் சங்கப்பாடல்கள் சான்று பகர்கின்றன. அத்தகைய தாய்த்தலைமைக்கான அடையாளங்களை எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தாய்த்தலைமைக்கான கூறுகள்

தமிழ்ச்சமூக அமைப்பில் தாய்த்தலைமைக்கான கூறுகள் எட்டுத்தொகை நூல்களில் காணக்கிடக்கின்றன.
சிறுவர்தாயே பேரிற் பெண்டே        (புறம்.270:6)
செம்முதுபெண்டின் காதலஞ் சிறாஅன்  (புறம்.276:3)
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்” (புறம்.277:2)
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்   (புறம்.278:2)
என்மகள் ஒருத்தியும் பிறள்மகள் ஒருவனும்” (பாலைக்கலி:8)
ஒலிஇருங் கதுப்பின் ஆயிழை கணவன்    (புறம்.138:8)
என்று பெண்களின் அடையாளத்தில் ஆண்கள் சுட்டப்படுவதனை அறியமுடிகின்றது. இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விருந்தோம்பல் பண்புகள் குறித்த பாடல்கள் பெண்களின் விருந்தோம்பல் இயல்புக்குச் சான்று பகர்கின்றன.
வருவிருந்து அயரும் விருப்பினள்” (புறம்.326:12)
வேட்டைச் சமூகத்தில் உணவுப்பங்கீடு செய்வதில் அவளுக்கிருந்த நிர்வாகத்திறனின் தொடர்ச்சியைப் புலப்படுத்துகின்றது. அன்றைய நாட்களில் பெண்ணை வாழ்த்தும்போது,
பேரிற் கிழத்தி ஆக” (அகம்.86:19)
என்று சுற்றத்தார் வாழ்த்துவதன் மூலம் குடும்ப அமைப்பில் பெண்ணுக்கான இருப்பினை உணரவியலுகின்றது. விருந்து பேணுவதில் சிறப்பும், மகிழ்வும் கொண்டவள் என்பதைச் சங்ககால ஆடவர்களும் நன்குணர்ந்திருந்தனர் என்பதனை,
தங்கினர் சென்மோ புலவீர்! நன்றும்
சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி  (புறம்.333:7-8) 
என்ற பாடல் பகுதி மூலம் அறியலாகின்றது. இல்லறம் பேணுதலில் பெண் கொண்டிருந்த தலைமைப்பண்பினை,
மனைவி   (நற்.121:11)
மனையோள்” (குறுந்.164:5)
வளமனைக்கிழத்தி  (அகம்.166:10)
இற்பொலிமகடூஉ   (புறம்.331:9) 
என்று இலக்கியங்கள் சிறப்பித்துள்ளன. பெண்களின் தலைமையில் சமூகம் அமைக்கப்பட்டிருந்ததும், ஆண்கள் பெண்களின் நுண்மாண் நுழைபுலத்திறனை உணர்ந்து அவர்தம் இயல்புகளுக்கு மதிப்பளித்தமையும் புலனாகின்றது. இதற்கு அடிப்படைக் காரணத்தை ஆய்கையில் பழங்கற்காலத்தில் பெண்ணின் தலையாய கடமையாகியிருப்பது வேட்டையாடுதலும், உணவு சேகரித்தலும், பகிர்ந்தளித்தலுமே ஆகும். இதற்கான உடல் வலிமையும், மனவலிமையும் பெண்களிடம் இயல்பாகவே அமைந்திருந்தது. அதனைச் சுட்டிக்காட்டும் ரோஸலிண்ட் மைல்ஸ் கருத்து வருமாறு:

            பெண்களின் கடமைகளில் உணவு சேகரிப்பது கேள்விக்கிடமின்றி பட்டியலில் முதன்மையான இடத்தை வகித்தது. இந்தப் பணி  அவர்களின் குலத்தை உயிர்வாழச் செய்தது. வரலாற்றுக்கு முந்திய காலத்தில் எந்தச் சமுதாயத்திலும் பெண்கள் தமது குழந்தைகளுடனோ அல்லது குழந்தைகள் இல்லாமலோ உணவுக்காகத் தமது வேட்டையாடும் ஆண்களைச் சார்ந்திருக்கவில்லை (ராதாகிருஷ்ணன்.வி., (மொ.ஆ.), உலக வரலாற்றில் பெண்கள், ப.8)
            வேட்டைச் சமூகக் காலத்திலேயே பெண்ணிடம் தன் உயிரை மட்டும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநலப்போக்கு இருந்திருக்கவில்லை. மாறாக, தனது வலிமையைத் திரட்டி தன் கூட்டத்தின் பசியைப் போக்கி, ஆபத்தான விலங்குகளின் மத்தியில் கூட்டத்தாரின் உயிரைக் காத்துப் பேணவேண்டும் என்ற பரந்துபட்ட மனச்சிந்தனையே அன்றையப் பெண்களின் உளவியலாக அமைந்திருக்கின்றது. இயற்கைச் சூழலை எதிர்த்துப் போராடும் போராட்ட மனஉணர்வு அன்றைய பெண்களின் வீர உணர்வை அடையாளப்படுத்துகின்றன. தாய்வழிச் சமூகத்தின் மரபுசார் கூறுகளைச் சங்ககாலத்தில் காண முடிவதோடு, அதன் எச்சநிலையைச் சங்கப்பாடலின் வழியாக அறியமுடிகிறது.

சங்கப் பெண்டிரின் மறப்பண்பு

வேட்டைச்சமூகத்தில் விலங்குகளை வேட்டையாடுவதிலும், உயர்ந்த மலைகளிலும், அடர்ந்த காடுகளிலும் வாழ்ந்த காலங்களில் பெண்ணுக்கிருந்த மனவலிமையும், தீயவைகளை எதிர்த்துப் போராடும் துணிவும் இயல்பாகவே அவளிடம் அமைந்திருக்க வேண்டும். அடுத்து வந்த வேளாண் சமூகத்திலும், அரசுடைமைச் சமூகத்திலும் பெண் தனது வீரப்பண்பை நேரடியாக வெளிப்படுத்த வேண்டிய தேவை இல்லாதிருக்க வேண்டும். தந்தைவழி மரபில் வீரம் மிக்க ஆண்மக்களின் உருவாக்கத்தில் பெண்களின் இயல்பு இன்றியமையாத பங்கினைப் பெற்றுள்ளது. இத்தகைய வீரம் செறிந்த குடிப்பெண்களாகிய மறப்பண்பு குன்றாத முதுமகளை அன்றைய சமூகத்தார் செம்முது பெண்டு’ (புறம்:276) என்று சிறப்பித்துள்ளனர். பெண்டிரின் இயல்பாகிய போர்ப்பண்பு வீரமிக்க ஆண்மக்களை உருவாக்கத்தில் நிறைந்து காணப்பட்டுள்ளது. பெண்களின் இத்தகைய வீரப்பண்புகளை புறநானூற்றுப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. பெண்களின் இயல்புகளைச் சமுதாயத்திற்கு எடுத்துணர்த்தும் உயரிய நோக்கம் அன்றைய ஆண்களுக்கு இருந்துள்ளது என்பதை ஆண்பாற் புலவர்களின் பாடல்கள் வாயிலாக அறிய முடிகின்றது. இதன் மூலம் சங்ககாலச் சமுதாயம் ஆண்களால் பெண்கள் மதிக்கப்பட்ட இணையான சமுதாயம் என்பதை அறியவியலுகிறது.
உடைமைச் சமுதாயத்தில் முதலில் ஆநிரைகளைக் காத்தல் பொருட்டும், பிறகு நிலங்கள் உடைமையாக்கப்பட்டபோது நாடு காத்தலுக்காகவும் போர்கள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இப்போர்ச் சமூகம் ஆண்வழி மரபிற்கு மாற்றமடைந்த காரணத்தால், பெண்களுடைய வீரப்பண்பும், போர் புரியும் துணிவும் அவள் வழியே பெறப்பட்ட ஆண்மக்களிடம் இருப்பதனை புறநானூற்று பாடல்கள் எடுத்துரைக்கின்றன.
சங்ககாலம் ஒரு மாறுதல் காலகட்டம். இனக்குழு வாழ்விலிருந்து நிலவுடைமைக்கு, வீரயுகச் சூழலிருந்து உடைமைச் சமுதாயத்திற்கு மாறுகின்ற காலகட்டம். அரசு உருவான காலகட்டம். தனிச்சொத்துடைமையும் ஆண்வழிச் சமுதாய அமைப்பும் உருவாக வித்திட்ட காலம் (அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும், ப.168)
என்று பெ.மாதையன் கருத்துரைக்கின்றார். போர் புரிவதற்கு ஆண்மக்கள் தேவைப்பட்டாலும், களச்சாவு கண்ட ஆண்மகனுக்குப் பின், பிள்ளைகளைப் பேணுதலும் இல்லறப் பணிகளை நிர்வகிக்கும் பண்பும் பெண்ணுக்கு இயல்பாக இருந்துள்ளது. அதனால், போர்க்களத்திற்கு செல்லாதிருத்தலும், போர்க்காலங்களில் பெண்கள் கொல்லப்படாமல் காத்தலும் மரபாகியுள்ளன. இதனை,
ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்” (புறம்.9)
என்ற பாடல் உணர்த்தி நிற்கின்றது. மறக்குடிப் பெண்ணிடம் பாலருந்திய பிள்ளைக்கும் வீரப்பண்பு உள்ளது என்பதை, பாண்டியன் நெடுஞ்செழியன் அரசு பூண்ட பருவம் குறித்து,
அவன் கண்ணி, தார் பூண்டு
தாலி களைந்தன்றும் இலனேன் பால் விட்டு
அயினியும் இன்று அயின்றனனேன் வயின் வயின்
வியந்தன்றும், இழிந்தன்றும், இலனே;”  (புறம்.77:6-10)
என்ற பாடல் எடுத்துரைக்கின்றது. இத்தகைய வீரப்பண்பு மட்டுமல்லாது எதையும் தாங்குகின்ற பக்குவப்பட்ட மனநிலையும், தன்மானத்திற்காக உணர்ச்சிக்கு ஆட்படாத உள்ளத்தையும் கொண்டவளாகப் பெண் விளங்கியிருக்கின்றாள் என்பதை மூதின்முல்லை துறைப்பாடல்கள் விளக்குகின்றன.
கெடுக சிந்தை; கடிக இவள் துணிவே;
மூதில் மகளிராதல் தகுமே;” (புறம்.279:1-2)
என்ற பாடலில் முதல்நாள் போரில் தன் தந்தையையும், மறுநாள் போரில் தன் கணவனையும் இழந்த பெண், ஒருத்தி மனங்கலங்காது நாடுகாத்தலுக்காக தன் குடியின் ஒரு மகனையும் போர்க்களத்திற்கு அனுப்புகின்ற துணிவு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அதனை,
ஒரு மகன் அல்லது இல்லோள்,
செருமுகம் நோக்கிச் செல்கஎன விடுமே! (புறம்.279:10-11)

            என்ற அடிகள் புலப்படுத்துகின்றன. உயிரைக் காட்டிலும் மானம் பெரிதென எண்ணும் பண்பு குறித்து,
மீன் உண் கொக்கின் தூவி அன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன்என்னும் உவகை
ஈன்றஞான்றினும்பெரிதே  (புறம்.277:1-4)
என்ற பாடலில் உணர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு போரை மறத்தொழிலாக முடித்து குடியைக் காப்பதில் அன்றைய சமூக ஆணுக்கும் பெண்ணுக்கும் கடமையாகியிருந்துள்ளது.
            கட்டுப்பாடற்ற பாலுறவு நிலவிய தொல்பழங்காலத்தில் உலகளாவிய நிலையில் தாய்வழிச் சமுதாயங்கள் மட்டுமே இருந்திருக்க வேண்டும். சுதந்திரமான பாலுறவு நிலவிய அந்தக் காலத்தில் ஒருவரின் தந்தையைச் சரியாக அடையாளம் காணமுடியாமல் வாழ்ந்தனர். இது பாலூட்டிகளின் இனப்பெருக்கத்தில் தாயை மட்டும் அடையாளம் காணக்கூடிய நிலையைக் காட்டுகிறது (தமிழர் மானிடவியல், ப.9) என்று பக்தவத்சல பாரதி எடுத்துரைக்கின்றார்.

ஆண்வழிச் சமுதாய மாற்றமும் பெண்களின் இருப்புநிலையும்

            உடைமைச் சமுதாயமாக மாற்றம் பெறுகின்ற காலங்களில், வரையற்ற பாலுறவிலிருந்து ஒருவனுக்கு ஒருத்திஎனும் நெறிப்படுத்தப்பட்ட பாலுறவுக் கொள்கை உருவாகியுள்ளது. இக்கோட்பாட்டின் அடிப்படையில் ஆணும், பெண்ணும் தனது சுதந்திரமான பாலுறவிலிருந்து விலகி ஒழுக்க நெறியைக் கண்டுணர வேண்டிய தேவை ஏற்படுத்தப்பட்டது. இதன் விளைவாகவே, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் இந்நால் வகைப் பண்புகளும் சமூகத்தாரால் பெண்ணுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. பெண்களையும் ஒழுக்கநெறியை அடிப்படையாகக் கொள்ள வேண்டியே மூத்தப் பெண்டிரால் இளைய பெண்கள் கட்டுப்படுத்தப்படுவதை, களவுப்பாடல்களில் காண முடிகின்றது. களவுக்காதல் கொண்ட பெண்ணின் தந்தை, தமையன் ஆகிய ஆண்கள் அவளைக் கட்டுப்படுத்தியதாகக் கூற்றுகள் அமையவில்லை. மாறாக, இல்லத்தின் மூத்தப் பெண்டிரான நற்றாயும், செவிலியும் அவளைக் கட்டுப்படுத்தியுள்ளதை தலைவி, தோழியின் கூற்றுக்களின்வழி அறிய முடிகின்றது. எனவே, சமூகத்தில் பெண்களின் பாலுணர்வுக் கட்டுப்பாடு பெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பதை உணர முடிகின்றது.
       மனிதனுடைய நடத்தைகள் அனைத்தும் பாலுணர்வில் உந்தப்படுகின்றன என்றும் உள்ளத்தின் முழுமையான ஆற்றல் லிபிடோ எனப்படும் பாலுணர்வு இயல்பூக்கம் (தொன்மவியல் கட்டுரைகள், ப.5) என்று சிக்மண்ட் பிராய்டு கூறுவதாக யாழ்.சு.சந்திரா எடுத்துக்காட்டுகின்றார்.
            இத்தகைய ஒழுக்க நெறியை சமுதாயத்தின் தேவையாகவும் மானிடப் பண்பாடாகவும் ஆக்கியவர்களுள் அன்றைய பெண்கள் பெரும்பங்கு வகித்துள்ளனர் என்பதை களவுக்காலப் பாடல்களும், கூற்றுகளும் மெய்ப்பிக்கின்றன.
            பெண்ணின் பாலுணர்வு நடத்தைகள் கட்டுப்படுத்தப்பட்டால் சமூகம் உயர்வடையும் என்ற சிந்தனையின் அடிப்படையில் பெண்கள் தமக்குத் தாமே இப்பண்புகளை சுயக்கட்டுப்பாடுகளாக விதித்துக் கொண்டுள்ளனர் என்பதும் புலனாகின்றது. எனவே, தந்தை வழித் தலைமையில் சமூகம் மாற்றமடைவதை காலத்தின் தேவையாகவும், தன் மூலமாக பிறக்கும் பிள்ளைப்பேறு நெறிப்படுத்தப்பட்ட பிறப்பாக அமைய உடைமைகள் காக்கப்பட வேண்டி, தந்தை அடையாளப்படுத்தப்படுதல் இன்றியமையாததாக உணரப்பட்டமையாலும் பெண்கள் இம்மாற்றத்தை ஏற்றுச் செயல்பட்டுள்ளனர்.
            தொடக்க காலத்தில் தாய்வழி உரிமையோ தாய்த் தலைமையோ நிலவிய காலம் ஒன்று இருந்திருக்க வேண்டும். இத்தாய்வழி உரிமை கொண்டிருந்தவர்கள் பின்னர் ஆண்வழியில் அவரவர் மக்களுக்குச் சொத்துக்களைக் கொடுக்கும் ஆர்வத்தைப் பெற்றிருக்க வேண்டும் (தமிழர் மானிடவியல், ப.9)
            என்று பக்தவத்சல பாரதி கருத்துரைக்கின்றார். பிறகு நிலங்கள் உடைமையாக்கப்பட்டு சொத்துரிமையும், வாரிசு வேண்டலும் கட்டாயத் தேவையாக்கப்பட்டதால், பெண்ணோடு கொள்ளும் உடல்உறவுக்கு முன் அவர்கள் இருவரையும் ஊரார் முன் அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, மணவினைகள் மூலம் ஆணும் பெண்ணும் முறையான பாலுறவு எய்தி, நன்மக்களைப் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்ற நிலை உருவானது. இதனால், நிலவுடைமைச் சமுதாயத்தில் களவு மணம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை, இற்செறித்தல், வரைவுடன்படுத்த தலைவனை தலைவி வேண்டல், நொதுமலர் வரைவை மறுத்தல், உடன்போக்கு, அறத்தொடுநிலை போன்ற பாடல்கள் மூலம் அறிய முடிகின்றது.
            அன்றைய சமுதாயத்தில் ஆண்கள் பொருளீட்டும் பொருட்டு, போருக்காகவும் தனது குடும்பத்தைவிட்டுப் பிரிந்து செல்லக்கூடிய நிலையிருந்துள்ளது. இவ்வாறு நிகழும் பிரிவுக்காலங்களில்  பெண் இல்லத்தையும், தமக்குரிய நிலத்தில் வேளாண் பணியையும் பிள்ளைகளைப் பேணி வளர்க்கின்ற பொறுப்பையும் சரிவரச் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவேதான், பெண்ணின் கடமையைப் புரிந்து கொண்ட சமூகம் அவளை இல்லாள்’ (கலி131:22) என்று சிறப்பித்துள்ளனர்.
            இல்லாள்என்பது குடும்பத் தலைவியைச் சுட்டும். எதிராக இல்லான்என்பது இன்மையையே சுட்டும். இதில் பெண்ணின்  பெருமை விளங்கும் (நமது சமூகம், ப.334)
            என்று சோ.இலக்குமி ரதன் பாரதி குறிப்பிட்டுள்ளார். ஆணுக்கான சமூகப்பொறுப்பாக ஆநிரை காத்தலும், நாடு காத்தலும் விளங்கியதால் அவன் வீரன், மறவன் என்ற சொற்களால் குறிக்கப்பட்டுள்ளான். இதற்குரிய பெண்பாற் சொற்கள் வழக்கில் இல்லை என்பது சமுதாயத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர்க்கு என்றாகிய கடமையும்  பொறுப்புக்களும் இருந்துள்ளன என்பது புலனாகின்றது. அன்றைய பெண்கள் சமூகச் சூழலுக்கேற்ப வாழ்வியலை அமைத்துக் கொள்ளத் தலைப்பட்டவர்கள் என்பதை உணரமுடிகின்றது. இதனை, தம் முன்னோர்கள் கூடி வாழ்ந்த முறையிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தாலும், பண்டைய குழுக்களில் நிகழ்ந்த பாலுறவு முறையிலிருந்து, மாற்றம் பெற்றாலும் நிலவுடைமைச் சமுதாயத்தில் தந்தைவழி மரபாக மாற்றமடைகின்ற போதும், தமது குழுக்களை விட்டு வேறு குழுக்களில் மணமுறை அமைதல் தவிர்க்கப்பட்டிருந்தது என்பதைச் செவிலிக்கான கூற்றில்,

மகள் நெஞ்சு வலிப்பினும்,
இருபால் குடிப்பொருள் இயல்பின் கண்ணும்” (தொல்.பொருள்.களவி.24)

என்று உரைக்கப்பட்டுள்ளது. இந்நூற்பாவில் தலைவி தலைவனின் குடிப்பெருமையை உணர்தல் எனும் நிலையானது தந்தைவழிச் சமூகமாக தொல்காப்பியர் காலத்திலேயே மாற்றம் பெற்றுள்ளதனை அறியமுடிகின்றது. ஆண் வழிமரபு மாற்றம் பெற்ற சமூகத்தில் ஆண்கள் நெறி பிறண்டதற்கான நிலைகள் ஏற்பட்டிருக்க வேண்டும். அத்தகைய சூழல்களில் அவர்களைக் கட்டுப்படுத்தி நெறிபடுத்த பெண்ணே பெரும் ஆயுதமாக செயல்பட்டிருக்கின்றாள். ஒரு நாட்டில் வாழும் மக்களின் வாழ்வும் தாழ்வும் நிலத்தைப் பொறுத்து அன்று. அந்நிலத்தில் வாழுகின்ற ஆடவரைப் பொறுத்தே அமையும் என்று ஒளவையார் அன்றைய ஆண்களை இடித்துரைத்துப் பாடிய பாட்டின் மூலம் புலனாகிறது.

நாடா கொன்றோ காடா கொன்றேர்
அவலா கொன்றோ மிசையா கொன்றேர்
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!” (புறம்.187)

என்று கூறியிருப்பதன்வழி அன்றைய சமுதாயத்தில் ஆண்களைச் செயலாற்றச் செய்கின்ற நுண்ணறிவும் திறனும் பெண்ணுக்கு இருந்துள்ளதனை அறிய முடிகின்றது. பெண்ணுடைய அறிவையும் ஆற்றலையும் உணர்ந்து கொண்டு அவளிடம் நட்பு பாராட்டிய மன்னர்களும் அன்றைய காலத்தில் இருந்துள்ளனர். போரில் ஈடுபடுதலை விரும்புவது மறக்குடி மகளிரின் பண்பாக இருப்பினும், தேவையற்ற போர்களால் விளையும் உயிர்ச்சேதங்களும், பொருட்சேதங்களும் தவிர்க்கப்பட வேண்டியதனை உணர்ந்த தெளிந்த சிந்தனை அன்றைய பெண்ணுக்கு இருந்துள்ளது. இதனை மன்னன் அதியன் பொருட்டு தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவையின் செயலாற்றல் மூலம் உணர முடிகின்றது.

உண்டாயின் பதம் கொடுத்து,
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே” (புறம்.95:6-9)

என்ற பாடலின் மூலம் ஆண்வழி மரபிலும் அரசர்களிடத்தும் நெருங்கிச் செல்லுகின்ற துணிவும் அவளது இருப்புநிலை அரசுடைமைச் சமுதாயத்திலும் உயர்வாக மதிக்கப்பட்டுள்ளதனையும் அறிய முடிகின்றது.

சங்ககாலத் தமிழரின் வழிபடு தெய்வங்கள்
            பழந்தமிழர்கள் தமது வாழ்வியல் சூழலுக்கும், கடமைகளைப் பேணவும் தமது மனப்பக்குவம், அறிவுநிலை, இவற்றின் அடிப்படையில் இயற்கையைக் கடவுளாக எண்ணி நம்பிக்கை கொண்டுள்ளனர். மனிதனைப் பாதுகாக்கும் புறஆற்றலை தெய்வமாக எண்ணி அக்கால மக்கள் வழிபட்டிருக்க வேண்டும். இதனை,

வழிபடு தெய்வம் நின்புறம் காப்ப” (தொல்.1367)

என்ற நூற்பாவால் உணரவியலுகின்றது. எனவே மக்களுள் அவரவர் வாழ்வியல் சூழலுக்கும், திணை நிலைகளுக்கும் அடிப்படையான படிமங்களையும், குறியீடுகளையும் கொண்டு தெய்வத்திற்கான வடிவங்களைத் தோற்றுவித்துள்ளனர். இதன்வழி, முல்லை நிலத் தெய்வமாக திருமாலும், குறிஞ்சி நிலக் கடவுளாக முருகவேளும், மருதத் திணைக்கு வேந்தனாகிய இந்திரனும், நெய்தல் திணைக்கு வருணனும், பாலைக்குக் கொற்றவையும் தெய்வவடிவங்களைக் கொண்டுள்ளன.

முல்லைத் திருமாலும், குறிஞ்சி முருகனும், மருத வேந்தனும், நெய்தல் வருணனும் (பாலைக் கொற்றவையும்) திணைத் தெய்வங்கள் ஆகும். இத்தெய்வங்கள் நிலத்திற்கேற்ற படைப்புகளே; அவ்வந்நிலப்பொருள்கள் தோற்றிய உருவங்களே என்று அறிய வேண்டும் (தமிழ்க்காதல், ப.138)
            என்று வ.சுப.மாணிக்கனார் மொழிகின்றார். ஆண்களுக்கும், பெண்களுக்கும்  கிளர்ந்தெழும் விலங்கின உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, நடத்தைகளை நல்வழிப்படுத்தும் துணையாகவே தெய்வ வழிபாடுகளைக் கொண்டுள்ளனர். இத்தகைய தெய்வங்களும், தெய்வங்களை வழிபடும் நிலைகளும் அன்றைய கால ஆண்களைக் காட்டிலும், பெண்களின் மீது அதிகளவில் ஆளுமை செய்துள்ளன. ஆணும் பெண்ணும் இணைந்தே வழிபாட்டு முறைகளைக் கையாண்டுள்ளனர். ஆண் தெய்வங்கள் மட்டுமல்லாது பெண் தெய்வங்களையும் அன்றைய சமூகத்தினர் வழிபட்டனர். இதற்கு அடிப்படை, சங்ககாலத்திற்கு முற்பட்டு வாழ்ந்த மக்களிடம் இருந்த தாய்வழிச் சமூகத்தின் எச்சம் சங்க நாட்களின் பெண் தெய்வ வழிபாட்டு மூலங்களாக்கப்பட்டிருக்க வேண்டும். இது குறித்து, க.கைலாசபதி எடுத்துரைக்கும் கருத்து சுட்டிக்காட்டத்தக்கது.
            பெண் தெய்வவழிபாடு தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம் அது  தோன்றிய சமுதாயத்திலே தாய்வழிமுறை நிலவியதே என்பது ஆராய்ச்சியாளர் காட்டும் உண்மையாகும் (பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், ப.3)
            தாய்வழிச் சமூகத்தில், தலைமைச் சிறப்பும், ஆளுமைப் பண்பும் கொண்ட பெண்ணின் உயர்வு சமூகக் கட்டொருமைபாட்டை வழிநடத்தியிருக்க வேண்டும். அந்த மூலங்களே பெண் தெய்வங்களின் தோற்றமாக்கப்பட்டுள்ளன. கணவனோடு உடனுறைத் தெய்வங்களாகவும், ஆண் துணையின்றி தனித்திருக்கும் பெண் தெய்வங்களாகவும் அன்றைய சமூகத்தினர் பாகுபடுத்தியுள்ளனர்.

மணமான பெண் தெய்வங்கள்

            மணமான பெண் தெய்வங்கள் அன்பும், அருளும் கொண்டவர்களாக கணவனுக்கு எதிரான நிலைகளில் பொறுமையிழந்து ஆவேசங் கொண்டதாக சங்க இலக்கியப்பாடல்களில் சுட்டப்படவில்லை. அன்றைய மக்கள் தாம் உற்ற துன்பத்தை உணர்ந்து, அதனை நீக்கும் ஆற்றல்மிக்க தெய்வங்களாக முருகவேளையும் வள்ளியையும் வணங்கியுள்ளனர். தனது வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளை இத்தெய்வங்களின் மீது ஏற்றிக் கூறி, மனித உணர்வுகளை வடிவப்படுத்தியுள்ளனர். முருகனும் வள்ளியும் குறித்து,

குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளிதமர்
வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு
ஒத்தன்று, தண் பரங்குன்று” (பரி.9:67-69)

என்ற அடிகளில் குறிஞ்சி நிலப் பெண்களாகிய கொடிச்சியர்களின் வீரம், பெருமிதம் போன்ற பண்புகள், அந்நிலத்தின் பெண் தெய்வமாகிய வள்ளிக்கும் ஏற்றிக் கூறியிருப்பதும், அக்கொடிச்சியரின் வீரமானது, வள்ளியின் வெற்றிக்குக் குறியீடாக்கப்பட்டிருப்பதனை அறியவிலுகின்றது.
குறிஞ்சிவாழ் மக்களின் இயற்கை விளைபொருளான வள்ளி குறிஞ்சி வாழ் மக்களின் பெண் தெய்வமானது (தமிழ்ச் செவ்வியல் படைப்புகள், ப.187)
            என்று பெ.மாதையன் தெரிவித்துள்ளார். இவ்வாறே வள்ளி என்னும் பெண் தெய்வம் தோற்றுவிக்கப்பட்டதனை உணர முடிகின்றது.

ஆக்கல், அழித்தல், காத்தலாகிய முத்தொழில் புரியும் சிவபெருமானுக்கு அழித்தல் தொழில் புரிய உமையம்மை உடன்படமாட்டாள் என்பதும், அவள் அருளே வடிவானவள் என்பதும் அன்றைய மக்களின் நம்பிக்கையாயிருந்தது. இதனை,

கொலை உழுவைத் தோல் அசைஇ, கொன்றைத்தார் சுவற்புரற,
தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?” (கலி.1:11-13)

என்று கலித்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடலில் உமையம்மையின் சிறப்பு உரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாய்மைப்பண்போடு கூடிய தெய்வமாகவும், பொறுமையும், அன்பும், அருளும் கொண்டவளாக பெண்கள் திகழ வேண்டும் என்று எடுத்துரைக்கப்படுவதனை அறிய முடிகின்றது.

அன்பும், அருளும், பொறுமையும் வீரப்பண்புகளும் போல மனிதனின் உள்ளத்தில் கிளர்ந்தெழும் காமஉணர்வு காமனும் இரதியுமாகிய தெய்வ உருக்கொண்டது. ஆணும், பெண்ணும் காதலுணர்வோடு கூடிக்களித்திடவும், அத்தகைய காதலர்களின் எழிலான தோற்றத்தை இக்காமக் கடவுளர்களாகிய காமன் என்ற மன்மதனும், அவரது துணையாகிய இரதிதேவியும் ஒப்புமையாக்கப்பட்டுள்ளனர். இதனை,

இரதி காமன், இவள் இவன்எனா அ” (பரி.19:48)

என்னும் பாடலடி காட்டும். இதில் காமனின் மனைவியாகிய இரதியைப் பற்றிய குறிப்பு உள்ளது. காமக் கடவுளை பெண்கள் வழிபட்டது குறித்து,

காதலுற்ற கன்னியர், தம் கருத்து நிறைவேறும் வண்ணம் காமனை வேண்டிக் கொள்ளும் வழக்கமும் சமுதாயத்தில் இருந்ததாகத் தெரிகின்றது. காதல் விளைவிக்கும் தேவனைக் காமன்என்றும் காமவேள்என்றும் தமிழர் அழைத்தனர் (தமிழ் இன்பம், ப.61)

என ரா.பி.சேதுப்பிள்ளை மொழிகின்றார். இவற்றின் மூலம் அக உணர்வாகிய காமத்திற்கும், ஆண், பெண் புறத்தோற்ற வர்ணனைக்கும் அழகுடைத் தெய்வத்தை அக்காலத்தார் வேண்டியுள்ளனர். மனிதகுல உருவாக்கத்திற்கு அடிப்படையாகிய காம உணர்வினை வடிவப்படுத்த மன்மதனும், இரதியுமாக உருவாக்கம் செய்துள்ளனர். இக்கடவுளரின் பெயர்கள் பரிபாடலிலும், கலித்தொகையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதனை அறியமுடிகின்றது.

முல்லை நிலத்தில் காடுறைத் தெய்வமாகிய திருமாலையும், அவர்தம் துணைவியாகிய திருமகளையும் அன்றைய மக்கள் வழிபட்டுள்ளனர். கணவனின் மனத்தில் நீங்கா இடம் பெறும் நிலையை மனைவி தனது அன்பினாலும் காதலாலும் அடைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை பெண்ணுக்குணர்த்தும் வண்ணமாக திருமகள் பொருந்திய மார்பனாக திருமால் காட்சியளிப்பதனை பாடல்கள்வழி அறியலாகிறது.

பருதி வலவ! பொரு திறல் மல்ல!
திருவின்கணவ! பெருவிறல் மள்ள” (பரி.3:89-90)

என்ற அடிகளில் வெற்றியையும், வீரத்தையும் கொண்ட கணவனாகிய திருமாலின் பெருமைக்கு, அவரது மனைவியாகிய திருமகளும் காரணமாகியிருப்பதை அறிய முடிகிறது. இவ்வாறு உடனுறைத் தெய்வங்கள் அனைத்தும், அன்பு, அருள்தன்மை, தாய்மைப்பண்பு, வீரம், பெருமிதம் போன்ற பண்புகளைக் கொண்டவர்களாகக் கூறப்படுவதன் மூலம் பெண்களும் இத்தகைய பண்புகளைக் கைக்கொண்டு வாழவேண்டும் என்றும் கணவன்மார்களுக்கு சேவை புரிந்து அடங்கி வாழ்தலே பெருமை தரும் என்றும் மறைமுகமாக வலியுறுத்தியிருப்பதை சங்ககாலத்திலேயே காண முடிகின்றது.


மணமாகாத பெண் தெய்வங்கள்

பழந்தமிழ்ச் சமுதாயத்தில் தெய்வங்களுக்கான வடிவங்களும், பண்பு நலன்களும் அறியப்படாத நிலையில், தம்மை வழிநடத்திப் பாதுகாக்கும் தெய்வமாக அணங்குஎனும் பெண் தெய்வம் மக்களால் வழிபடப்பட்டுள்ளது. இத்தெய்வத்தின் துணைக்கடவுளாகிய ஆண் கடவுள் பற்றிய குறிப்புகள் பாடல்களில் தரப்படவில்லை. மாறாக, அச்சுறுத்தும் பெண் தெய்வமாகவே சங்கப்பாடல்கள் சுட்டுகின்றன. தொடக்கநிலையில் இயற்கையின் சீற்றங்களே மனிதனை தெய்வ வழிபாட்டு நிலைக்குத் தூண்டப்பட்டன. அத்தகைய கட்டுக்கடங்காத சீற்றத்தைப் பெண்ணாக வடிவப்படுத்தி அணங்குஎனும் அச்சுறுத்தும் தெய்வமாக்கி இருக்க வேண்டும்.
            கற்புடைய பத்தினிப் பெண்கள் திருமணமாகா நிலையில் பேராற்றல் கொண்டவர்கள், அவர்கள் சீற்றமடைந்தால் கட்டுக்கடங்கா ஆற்றலை வெளிப்படுத்துபவர்கள்; அழிக்கும் ஆற்றல் படைத்தவர்கள். பழந்தமிழர் வாழ்வில் இவர்களின் ஆற்றல் அணங்குஎன்ற வகையிலும் வெளிப்பட்டது (தமிழர் மானிடவியல், ப.237)

எனப் பக்தவத்சல பாரதி பகர்கின்றார். இயற்கை படைப்புகளுள் பெண் தெய்வமாக உறைந்திருக்கின்றாள் என அன்றைய மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதை,

தெண் திரைப்
பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ” (நற்.155:5-6)

என்ற பாடல் வரிகளில் கடலில் பெண் தெய்வம் உறைந்துள்ளதாக அன்றைய மக்களின் நம்பிக்கை புலனாகின்றது.

ஆண்களின் போர்க்கள வெற்றிக்குக் காரணமாகப் பெண் தெய்வத்தையே கருதியுள்ளனர். தொல்காப்பியத்தில் பெண் தெய்வமாகிய கொற்றவையை,

மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அகத்திணைப் புறனே” (தொல்.புறத்.62)

என்ற நூற்பாச் சுட்டிக்காட்டுகின்றது. அக்கொற்றவைத் தெய்வம்,

ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்
கூளி மலிபடைக் கொற்றவை மீளி
அரண்முருங்க ஆகோள் கருதி னடையார்
முரண்முருங்கத் தான்முந் துறும்” (புறப்பொருள்.வெட்சிப்படலம்:19)

என்ற புறப்பொருள் வெண்பாமாலைப் பாடல பேய்கள் மிகுந்த படையினையுடைய, வெற்றித்திருவாகிய இறைவி எனச் சிறப்பிக்கப்படுகின்றமையை அறியவியலுகிறது. இவற்றால் மணமாகாத பெண் தெய்வங்கள் மூலம் எதிர்மறையான உணர்வுகள் பெண்களுக்கு மட்டும் இருப்பதாகவும், தனித்து வாழும் பெண்களின் நிறைவடையாத மனநிலையைக் காட்டுவதாக அன்றைய மக்கள் கருதியிருக்க வேண்டும்.
இயற்கையைத் தெய்வமாக வழிபட்ட காலத்தில் தமிழ்ச்சமூகத்தில் தாய்வழித்தலைமை நிலவியிருந்ததனைப் பாடல்கள் அடையாளம் காட்டுகின்றன. அடுத்து வந்த காலகட்டங்களில் தெய்வங்களுள் பாலினப் பாகுபாடு ஏற்படுத்தி, இயல்புகளைச் சமூக நடைமுறைகளுக்கு ஏற்றபடியாகப் புகுத்தியிருப்பதனைப் பாடல்கள் மெய்ப்பிக்கின்றன. இதன் வழி ஆண் தெய்வங்களின் துணைக்கரங்களாகப் பெண் தெய்வங்கள் விளங்கியதால் ஆண் ஆதிக்கம் உருப்பெற்றதன் தோற்றநிலை தெளிவாக அறியலாகிறது. தாய்வழிச் சமுதாயம் தந்தைவழித் தலைமை பெற்றதற்குத் தெய்வ வழிபாடு அடிப்படையாக இருப்பதனை முருகன்-வள்ளி, சிவன்-உமையம்மை, திருமால்-திருமகள், அணங்கு, கொற்றவை போன்ற கடவுளர்களின் பாடல்கள் சான்று பகர்கின்றன.

            உடைமைச் சமுதாயத்தில் வாரிசுரிமை அடிப்படையில் சொத்துக்களைப் பெறவும், அரசு அமைக்கவும் சமூகம் தாய்வழித் தலைமையை விடுத்துத் தந்தைவழி மரபுரிமையை, தந்தையர்களை அடையாளங்காணும் பொருட்டு அமைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது புலனாகிறது. இத்தகைய ஆண்வழிச் சமூத்திலும் பெண் தன் இயல்புகள் குன்றாமல் தன் கடமைகளை ஆற்றியிருப்பதிலிருந்து உணரமுடிகின்றது.
            தாய்வழிச் சமுதாயத்தில் பெண்ணின் தலைமைப்பண்பு மக்களைக் காக்கின்றதாகவும், தீமைகளை அழிக்கும் சக்தியாகவும் இருந்திருக்க வேண்டும் என்பதனைப் பெண்தெய்வ வழிபாட்டின் மூலம் அறியமுடிகின்றது. தொடக்க காலங்களில் பெண் தலைமையில் சமூகம் கொண்டிருந்த நம்பிக்கையும், மதிப்பும் புலனாகின்றது. எனவே, சங்ககாலத்திற்கு முற்பட்டு வாழ்ந்த மக்களிடம் இருந்த தாய்வழிச் சமூகத்தின் மரபுசார்ந்த  இயல்புகள் சங்க நாட்களில் பெண் தெய்வ வழிபாட்டுக்கு மூலங்களாக்கப்பட்டிருக்க வேண்டும். காலப்போக்கில் பொதுவழிபாட்டிலிருந்து விலக்கப்பட்டு தனக்கான தன்குடும்பநலன் வழிபாடாக மாற்றம் பெற்றிருப்பதன் மூலம் பெண்ணின் இருப்புநிலை சமநிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு மாறியதனை உணரமுடிகின்றது.
            அகவாழ்க்கையில் மட்டுமல்லாது புறவாழ்க்கையிலும் கல்விப்புலமை, தன் கடமையறிந்து செயலாற்றும் தன்மை, இடித்துரைக்கும் பாங்கு போன்ற பண்புகளை ஒளவை முதலான பெண்பாற் புலவர்களின் வாயிலாக அறிய முடிகின்றது. நாடாளும் மன்னனாக இருப்பினும் அவனை நெறிப்படுத்தும் திறன் பெண்ணுக்கு இருந்துள்ளது. மண்ணைக் காக்க ஆண்மகனைப் பெற்றுத் தருவதனைத் தன் கடமையாகக் கொண்டிருப்பினும், தந்தை, நாடாளும் மன்னன், கொல்லன், ஆண்மகன் ஆகியோரின் கடமைகளையும் துணிவுடன் எடுத்துரைப்பதன் மூலம் தாய்வழி மரபின் மறப்பண்பு வெளிப்படுகின்றது. எனவே, சங்ககாலம் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை உள்ளடக்கியதாக இருப்பினும் அவற்றில் பெண்டிரின் பங்களிப்புத் தலைமை சான்றதாகவே அமைந்திருப்பதனைச் சங்கப்பாடல்கள் மெய்ப்பிக்கின்றன. காலந்தோறும் பெண்களிடம் இத்தகைய தலைமைப்பண்புகள் தாய்வழிச்சமூகத்தின் மரபணுக்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதனை மறுக்கவியலாது.
  
துணைநூற்பட்டியல்

1.         இலக்குமி ரதன் பாரதி சோ., நமது சமூகம், பழநியப்பா பிரதர்ஸ், சென்னை, 1979.
2.         கைலாசபதி.க., பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1999.
3.         சந்திரா சு.யாழ்., தொன்மவியல் கட்டுரைகள், அறிவுப்பதிப்பகம், சென்னை, 2009 (முதல் பதிப்பு).
4.         சேதுப்பிள்ளை ரா.பி., தமிழ் இன்பம், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 2010 (முதற்பதிப்பு).
5.         பக்தவத்சலபாரதி, தமிழர் மானிடவியல், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், 2008 (இரண்டாம் பதிப்பு).
6.         பக்தவத்சலபாரதி, தமிழர் மானிடவியல், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், 2008 (இரண்டாம் பதிப்பு).
7.         மாணிக்கம் வ.சுப., தமிழ்க்காதல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2005 (இரண்டாம் பதிப்பு).
8.         மாதையன் பெ., அகத்திணைக் கோட்பாடும் சங்கஅகக்கவிதை மரபும், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2009 (முதல்பதிப்பு).
9.         மாதையன் பெ., தமிழ்ச்செவ்வியல் படைப்புகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2011 (இரண்டாம் அச்சு).
10.        ரோஸலிண்ட் மைல்ஸ்., ராதாகிருஷ்ணன் வி., (மொ.பெ.), உலக வரலாற்றில் பெண்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007 (மூன்றாம் அச்சு).

Thursday, August 23, 2018

தென்கச்சி கோ சுவாமிநாதன் கதை

ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .
அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்
வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.
அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .
உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"
இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்
" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .
சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்
ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்
மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்
திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்
மனைவி கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்
" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது
எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை "
அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது
அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது
உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !"

புதையல்!

திருவெண்ணெய் நல்லூரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று.
ஒரு நாள்—
வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான்.
வியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெரிந்தது. வண்டியை விட்டு இறங்கிய அவன் அந்தக் கிணற்றருகே சென்றான். ஒரு பாத்திரத்தில் கயிற்றைக் கட்டி அதைக் கிணற்றுக்குள் விட்டுத் தண்ணீர் எடுக்கத் தொடங்கினான்.
கிணற்றுக்குள் இருந்து "யார் இங்கே தண்ணீர் எடுப்பது?' என்ற பயங்கரமான குரல் கேட்டது.
அஞ்சி நடுங்கிய அவன் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நடுங்கும் குரலில், ""ஐயா! நான் ஒரு ஏழை. தண்ணீர் குடிப்பதற்காக இங்கு வந்தேன். நீங்கள் யார்?'' என்று கேட்டான்.
"விரும்பியதை எல்லாம் கொடுக்கும் மந்திரக் கிணறு இது. இதைப் பாதுகாக்கும் பூதம் நான். யார் கண்ணுக்கும் நான் தெரியமாட்டேன்,'' என்றது அந்தக் குரல்.
"மந்திரக்கிணறா! விரும்பியதை எல்லாம் தருமா?'' என்று வியப்புடன் கேட்டான் அவன்.
"உன்னிடம் பொற்காசுகள் உள்ளதா? ஒரு பொற்காசை இந்தக் கிணற்றுக்குள் போடு உன் விருப்பம் எதுவானாலும் கேள். உடனே அது நிறைவேறும். நன்றாக நினைவு வைத்துக் கொள். இரண்டு முறைதான் இந்தக் கிணறு உன் எண்ணத்தை நிறைவேற்றும்,'' என்றது அந்தக் குரல்.
"என்னதான் நடக்கிறது பார்ப்போமே' என்ற எண்ணத்தில் ஒரு பொற்காசை கிணற்றுக்குள் போட்டான். ""விலை உயர்ந்த நகைகளாலும் பொற்காசுகளாலும் என் வண்டி நிரம்ப வேண்டும்...'' என்றான் அவன்.
ஒரு நொடிக்குள் அவன் வண்டி பொற்காசுகளாலும் நகைகளாலும் நிரம்பி இருந்தது. இதைப் பார்த்து வியப்படைந்தான் அவன்.
"ஆ! ஏராளமான செல்வம் கிடைத்துவிட்டது. இந்த நாட்டிலேயே பெருஞ்செல்வன் நான் தான்,'' என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே வண்டியில் அமர்ந்தான்.
"ஐயோ! காட்டு வழியாகச் செல்ல வேண்டுமே! வழியில் திருடர்கள் இருப்பார்களே... அவர்கள் இந்த நகைகளையும் பொற்காசுகளையும் கைப்பற்றிக் கொள்வார்களே! என்ன செய்வது?' என்று சிந்தித்தான்.
நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. கிணற்றருகே வந்த அவன் தன்னிடம் இருந்த இரண்டாவது பொற்காசையும் அதற்குள் போட்டான்.
"உனக்கு என்ன வேண்டும்?'' என்று உள்ளிருந்து குரல் கேட்டது.
"வண்டியில் இருக்கும் நகைகளும் பொற்காசுகளும் என் கண்களுக்கு மட்டும் தெரிய வேண்டும். பிறர் கண்களுக்குத் தெரியக் கூடாது,'' என்று கேட்டான்.
"அப்படியே ஆகட்டும்,'' என்று குரல் வந்தது.
வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டான். எதிரில் திருடர்கள் சிலர் வந்தனர். அவர்கள் கண்களுக்கு வண்டியில் இருந்த நகைகளும் பொற்காசுகளும் தெரியவில்லை. தன் அறிவுக் கூர்மையை மெச்சிக் கொண்டான் பேராசைக்காரன். மகிழ்ச்சியுடன் தன் வீட்டை அடைந்தான்.
வீட்டுக்குள் ஓடினான். ""இனி நாமோ நம் பரம்பரையோ வறுமையில் வாட வேண்டாம். அரசனைப் போலச் செல்வச் செழிப்புடன் வாழலாம். வண்டியில் விலை உயர்ந்த பொருள்கள் என்னென்ன கொண்டு வந்துள்ளேன் பார்!'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.
வண்டி காலியாக இருப்பதைப் பார்த்து அவன் மனைவி திகைத்தாள். ""என்னங்க! வண்டியில் விலை உயர்ந்த பொருள்கள் இருப்பதாகச் சொன்னீர்கள். எந்தப் பொருளும் இல்லையே,'' என்றாள்.
அவன் கண்களுக்கு வண்டியில் ஏராளமான பொற்காசுகளும் நகைகளும் இருப்பது தெரிந்தது. மனைவியைப் பார்த்து, "வண்டியை நன்றாகப் பார்,'' என்றான்.
நன்றாகப் பார்த்து விட்டுத் தான் சொல்கிறேன் என்றாள்.
அப்பொழுதுதான் அவனுக்குத் தான் கேட்ட இரண்டாம் வரம் எவ்வளவு தவறானது என்று புரிந்தது. தன் மனைவியிடம் நடந்ததைக் கூறினான். கிடைத்த விலை மதிப்பற்ற பொருள்களைப் பயன்படுத்த முடியாத நிலையை எண்ணி வருத்தம் அடைந்த அவன் வண்டியை ஓட்டிக் கொண்டு மீண்டும் காட்டிற்குச் சென்றான்.
அந்த இடத்தில் மந்திரக் கிணறும் இல்லை; ஒன்றும் இல்லை. பைத்தியம் பிடித்தவனைப் போல் வண்டியை எட்டி உதைத்தான். அதிலிருந்து நகைகளும், பொருட்களும் கீழே கொட்டிச் சிதறின.
என்ன பிரயோஜனம். அவை இவன் கண்களுக்கு மட்டுமே தெரிந்தன. தன்னுடைய பேராசை குணத்திற்கு கிடைத்த பரிசு என நினைத்து மிகவும் வருந்தினான் பார்த்தசாரதி.

ஓவியா கல்வி அறக்கட்டளை

Account Number: 2002875993
Branch : Oddanchatram
IFSC Code : SBI0009588
Account Holder Name: P.M.Anbushiva
Account Type: Current
Bank : state bank of india
State : Tamil Nadu
District : Dindigul 
Phone No: 09842495241/09843874545

முட்டாள் வேலைக்காரன்!

ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன்
ஒருநாள் அவனை அழைத்து, "நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ... அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் நீயும் மரங்களை வெட்டிக்கொண்டு வா!'' என்றான்.
அப்படியே அவனும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். அங்கே சிலர் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டு இருந்தனர். சிலர், கீழே கிடக்கும் மரங்களை முயன்று வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்ததும் வேலைக்காரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
"என்ன இவர்கள் எல்லாரும் முட்டாள்களாக இருக்கின்றனர். மரம் வெட்டும் போதே அதற்குக் கீழாக வண்டியை வைத்தால் மரம் அதில் சரியாக விழும். வீனாக ஒரு முறை பூமியில் கிடக்கும் மரத்தை வண்டியில் ஏற்ற வேண்டாமே!' என்று நினைத்தான்.
"என் திட்டத்தை இவர்கள் கண் முன்னாலேயே செய்து காட்டி, நான் எத்தகைய அறிவாளி என்பதைப் புரிய வைப்பேன்' என்ற எண்ணத்தில், தான் வெட்ட வேண்டிய பெரிய மரத்தை தேர்ந்தெடுத்தான்.
கோடாரியால் அந்தப் பனை மரத்தின் அடிப்பகுதியைப் பாதி அளவு வெட்டி முடித்தான். பிறகு, அந்த மரம் விழக்கூடிய இடத்திற்கு நேராக மாட்டுடன் வண்டியை நிறுத்தினான். மரம் வெட்டிக் கொண்டிருந்த மற்றவர்கள், "ஏன் இவன் இப்படிப் பைத்தியக்கார வேலை செய்கிறான்!' என்று நினைத்தனர்.
சிறிது நேரத்தில் அந்த மரம், "சடசட'வென்ற சத்தத்துடன் வண்டியின் மீது வேகமாக விழுந்தது. அவ்வளவுதான், வண்டி தூள் தூளானது. கால் உடைந்து குற்றுயிரும் குலை உயிருமாக மாடு துடித்துக் கொண்டிருந்தது. இதைக்கண்டு அவன் திகைத்து விட்டான். தன் திட்டத்தில் என்ன குறை என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
"என் திட்டம் நல்ல திட்டம் தான். வண்டிக்குத்தான் வலிமை இல்லாமல் போய்விட்டது' என்ற முடிவுடன் வீடு திரும்பினான். நடந்ததை அறிந்த வணிகன், முட்டாளாக இருக்கிறாயே! இப்படி செய்யலாமா? என்று வேலைக்காரனைத் திட்டினான்.
சில நாட்கள் சென்றன. திடீரென்று அந்த ஊரில் மண்ணெண்ணெய் பஞ்சம் வந்துவிட்டது.
"தன்னிடம் இருக்கும் இருபத்தைந்து பீப்பாய் எண்ணெயைப் பதுக்கி வைத்தால் நிறைய லாபம் கிடைக்கும்!' என்று நினைத்தான் வணிகன். உடனே வேலைக்காரனை அழைத்து, ""கடையில் இருக்கும் மண்ணெண்ணெய் எல்லாவற்றையும் இன்றிரவு நம் தோட்டத்தில் பள்ளம் தோண்டிப் புதைத்துவிடு. யாருக்கும் தெரியக் கூடாது!'' என்றான்.
வணிகன் சொன்னபடியே, நள்ளிரவில் பெரிய பள்ளம் தோண்டினான் வேலைக்காரன். ஒவ்வொரு பீப்பாயாக உருட்டிச் சென்று அதிலுள்ள எண்ணெயைப் பள்ளத்தில் ஊற்றினான். இப்படியே எல்லாப் பீப்பாய்களில் உள்ள எண்ணெயையும் ஊற்றி முடித்தான்.
இப்போது அவன் உள்ளத்தில், "இந்தக் காலிப் பீப்பாய்களை என்ன செய்வது? இது குறித்து முதலாளி ஒன்று சொல்லவில்யலையே!' என்ற சிந்தனை எழுந்தது.
"சரி, அவரையே கேட்டு விடுவோம்' என்ற எண்ணத்தில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த வணிகனை எழுப்பினான்.
"ஐயா! நீங்கள் சொன்னபடி மண்ணெண்ணெயைப் பள்ளம் தோண்டிப் புதைத்துவிட்டேன். காலி பீப்பாய்களை என்ன செய்வது என்று கேட்டான். வணிகனுக்குச் சிறிது சிறதாக உண்மை புலப்படத் தொடங்கியது. ஐயோ, "மண்ணெண்ணெய் எல்லாம் பேச்சே!' என்று அலறிய வணிகன், அன்றே அவனை வேலையிலிருந்து நீக்கினான்.".

நாயும், கிளியும்!!

ஒரு ஊர் ஒன்று இருந்துது. அந்த ஊருக்குப் பேர், 'ஊ ஊ'. ஏனந்தப் பேர் எண்டால், அங்கே எப்பவும் சரியான காத்து.... ஊ ஊ என்று சத்தம். அங்கே கன வீடுகள் இருந்தது. அதுல ஒரு வீட்டில், ஒரு பறவை இருந்தது. அது கதைக்கும். அது கிளியாக இருக்கலாம். பக்கத்து வீட்டில் ஒரு நாய் இருந்தது. அங்கே வேறு வீடுகளில் வேறு நிறைய மிருகங்களும் இருந்தது. அந்த நாய்க்கு வெளியில போய் splash splash அடித்து தண்ணியில் விளையாட நல்ல விருப்பம். மழை பெய்தால் வெளியில விளையாடப் போய் விடுவார். மற்றவைக்கு விருப்பமில்லை. அந்த இடத்துல நெடுக மழை பெய்யுறதால அவை வேறு எங்கையாவது ஊருக்குப் போகலாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தார்கள்.

ஒருநாள் நல்ல மழை. மரமெல்லாம் முறிந்து வீட்டுக்கு முன்னுக்கு விழுந்திருந்தது. மழையில நிறைய தண்ணி, (அப்பா கேட்கிறார்... வெள்ளமா அஞ்சலி?), வெள்ளம்தான் வந்திருந்தது. மரம் இருந்ததால வெள்ளம் வீட்டுக்குள்ளே வரவில்லை. அந்த நாய்க்கு நல்ல சந்தோஷம். வெளியில் போய் நல்லா விளையாடி, தண்ணியில நீந்தி நீந்தி விளையாடி, மரத்தையும் இழுத்துக் கொண்டு போய்விட்டார். அதனால் வீட்டுக்குள்ளே எல்லாம் தண்ணி வந்து விட்டது. அப்போ எல்லாம் மிருகங்களுக்கும் சரியான கோபம் வந்தது. கிளி சொன்னது நாங்கள் இவரை வெளியில கலைச்சு விடுவம், இவர் இங்க வரக்கூடாது என்றது. எல்லோரும் ஓமென்று சொல்லி நாயை கலைத்து விட்டார்கள்.

நாய்க்கு நல்ல சந்தோஷம். அவர் வெளியில நின்று, நிறைய நேரமா விளையாடினார். 3 நாள் போனதும், அவருக்கு சரியான கஷ்டமா போச்சுது. சரியான குளிரும். அப்ப அவர் திரும்பி வீட்டுல வந்து கேட்டார், என்னை வீட்டுல விடுங்கோ, நான் இனி குழப்படி செய்ய மாட்டன் என்று. அவையளும் சரியென்று சொல்லி, வீட்டுக்குள்ளே விட்டார்கள். அதன் பிறகு நாய் குழப்படி விடாமல் அவர்களுடன் சேர்ந்து இருந்தார். எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்

ஓநாயும், ஆட்டுக்குட்டியும் !

ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். ஓநாயை, ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை.
அதைத்தான் இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய்.
""ஏன் இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்?'' என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்த ஆட்டுக்குட்டி பயத்துடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியது.
""நான் எப்படி நீரைக் கலக்க முடியும்? தாங்கள் குடித்த மீதி தானே கீழ்ப்புறம் வரும்!'' என்று மெல்லிய குரலில் கேட்டது.
""பதில் பேசுமளவுக்குத் திமிராகி விட்டதா? நீ கலக்காவிடில் உங்கப்பன் கலக்கியிருப்பான்! உங்கப்பன் கலக்கா விட்டால், உன் பாட்டன் கலக்கியிருப்பான். உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது!'' என்றபடி ஓட முயன்ற ஆட்டுக்குட்டி மேல் பாய்ந்து அதை இரையாக்கிக் கொண்டது.
துஷ்டர்களிடம் நியாயம் எடுபடாது. மவுனமாக ஒதுங்கிச் செல்வதே நன்மை தரும். காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படியும் பேசுவர். அவர்களிடம் எல்லாம் வாய் பேசாமல் செல்வதே நலம்.


Thursday, June 07, 2018

அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


இரா.காமராசு 

அறிஞர் அண்ணா தமிழ்ச் சமூகத்தில் அசை வியக்கத்தை உருவாக்கியவர்.  எழுத்துபேச்சுநடிப்புசெயல்பாடு..  எனப் பன்முக ஆளுமையாக மிளிர்ந்தவர்.
குள்ள உருவம்குறும்புப் பார்வைவிரிந்த நெற்றிபரந்த மார்புகறைபடிந்த பற்கள்கவலை யில்லாத தோற்றம்;நறுக்கப்பட்ட மீசை;நகை தவழும் முகம்;சீவாத தலை;சிறிதளவு வெளிவந்த தொப்பைசெருப்பில்லாத கால்பொருத்தமில்லாத உடைகள்இடுப்பில் பொடி மட்டை,கையில் வெற்றிலை பாக்கு பொட்டலம். இந்தத் தோற்றத்தோடு அதோ காட்சியளித்து நிற்கிறாரே அவர் தான் அண்ணாஎன அவரின் புறத்தோற்றத்தைக் காட்சிப்படுத்துவார் நாவலர் இரா.நெடுஞ்செழியன்.
அவரின் அகத்தினை,“பேரறிஞர் அண்ணா அறிவுலக மேதை,அரசியல் விடிவெள்ளிபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் தன்மானத் தளபதி,கலையுலகக் காவலர்திரையுலகில் திருப்புமுனையை உண்டாக்கியவர். சாதி மதப் பேதங்களைச் சாடு வதில் இங்கர்சால்இசையறிவில் ஏழிசை மன்னர்தாய்மொழி காப்பதில் தன்னிகரில்லா அரியேறுநயம்பட நவில்வதில் நாவலர் மாமணிஎழுத்துலகிற்கு எழுஞாயிறுஉரையாடலில் அங்குப் புகழ்பெற்ற ஒளிவிளக்கு,வாதிடுவதில் வல்லமை,பேரறிஞர் அண்ணா நல்லதொரு பல்கலைக்கழகம் என்று போற்றப்படுவர்” என்று சா.மருதவாணன் அடையாளப்படுத்துவார்.
அறிஞர் அண்ணா திராவிட இயக்கத்தை வெகு மக்கள் கருத்தியக்கமாக மாற்றிக் காட்டியவர். தந்தை பெரியார்,கல்வியறிவற்ற மக்களையும் கவரும் வகையில் தன் பரப்புகையை மிக எளிமையாக அமைத்துக்கொண்டார். அண்ணாவோ காலனியத் தாக்கத்தால் உருவான எழுத்தறிவுபெற்ற இடைத் தட்டு மக்களைத் தன் இலக்காக்கிக் கொண்டார்.  இவ்வகையில் முதல் ஓரிரு தலைமுறைகளாகக் கல்வி பெற்று அரசு தனியார் நிலைகளில் மாத ஊதியம் பெறுவோர்,வணிகர்கள்,சுயதொழில் புரிவோர்,படித்த இளைஞர்கள்,பயிலும் மாணவர்கள் ஆகிய சமூகத்தின் விழிப்படைந்தபகுதியினரிடம் திராவிடக் கருத்தியலை எடுத்துச்செல்லும் பொறுப்பு அவருக் கிருந்தது. 
நாடு விடுதலை அடையும் தருணத்திலும் அதன் பிறகான தொடக்க காலத்திலும் உருவான தமிழ் இலக்கியப் பரிச்சயமும்வாசிக்கும் பழக்கமும்நாடகம்திரைப்படம்மேடைப்பேச்சு ஆகிய காட்சி,கேள்வி ஊடகத் தாக்கமும் மக்களிடையே ஒரு வித விழிப்புணர்வை உருவாக்கின. இதனை மிகச் சரியாக அண்ணாவும் அவரின் திராவிட இயக்கத்தினரும் பயன்படுத்திக் கொண்டனர்.
அண்ணா,எழுத்தின் அனைத்து வகைமை களையும் கையாண்டவராகத் திகழ்கிறார்.  பத்திரிகை களுக்குத் தலையங்கம்கட்டுரைசிறுகதைநெடுங்கதைகடிதங்கள்உரையாடல்நாடகம்திரைப்படம்திறனாய்வுகவிதைமேடைப்பேச்சுகேலிச் சித்திரங்கள்மொழிபெயர்ப்பு...  முதலிய அனைத்திலும் தடம் பதித்தவர் அண்ணா.
அண்ணா முழுநேர எழுத்தாளர் அல்லர்;களப்பணியாளர். தேவை கருதி எழுத்தைப் பயன்படுத்தியவர். “கடுமையாகப் பணியாற்றுவதற்கு இடையிலேயும் உனக்கு மடல் எழுதவும்,கதை கட்டுரை உரையாடல் போன்ற வடிவங்களில் என் எண்ணங் களை வெளியிடவும் நான் தயங்கினதுமில்லை. அது எனக்குப் பளுவான வேலையாகவும் தோன்றினது மில்லை. 
சொல்லப்போனால் மனத்திலே ஏற்பட்டு விடும் சுமையும் அதனாலேற்படும் சோர்வும் உனக்காக எழுதும்போது பெருமளவு குறைந்து போவதுடன் புதிய தெம்பும் பிறந்திடுகிறது” (தம்பிக்கு அண்ணா 2008:205) எனத் தான் எழுதும் சூழலையும்அதனால் தான் அடையும் மன நிறை வையும் அண்ணா பதிவு செய்வார்.
அண்ணாவின் கவிதைப்பார்வை
அமைப்பு நிலையில் அண்ணாவின் கவிதைகள் எளிமையும்இனிமையும் நிரம்பியவையாக உள்ளன. இசைப்பாடல்கள்வாழ்த்துப்பாக்கள்இதழ் வாழ்த்து,பொங்கல் வாழ்த்துகதைப்பாடல்கள்அங்கதப் பாடல்கள்போற்றிப்பாடல்கள்மொழிபெயர்ப்புப் பாடல்கள்...  என அவரின் கவிதைகள் அமைகின்றன. ‘அண்ணாவின் கவிதைகள்என்னும் நூலில் உள்ள குறிப்புகளின் வழி அவரின் முதல் கவிதை 9.12.1937 நாளிட்ட விடுதலை (காங்கிரஸ் ஊழல்) இதழில் வெளிவருகிறது. 
இறுதிக் கவிதை தென்னகம்வார இதழுக்கு அவர் எழுதிய வாழ்த்துக் கவிதையாக 16.01.1969இல்வெளிவருகிறது. அண்ணாவின் கவிதைகள் திராவிடநாடுகாஞ்சிவிடுதலைகுடியரசு,தென்னகம்ஆகியஇதழ்களில்வெளிவந்தன. அண்ணாவின்உரைநடைதனிச்சிறப்புமிக்கது. 
நீரோட்டம் போலத் தாவி வரும் வார்த்தைகள்வரிக்கு வரி அழகான உவமைகள்,புதிய புதிய சொல்லாட்சி,தமிழ் இலக்கணத்திற்கே அப்பாற்பட்ட புதிய பாணிகள்என அண்ணாவின் மொழி ஆளுமையைக் கவிஞர் கண்ணதாசன் சிறப்பிப்பார். ‘அண்ணா ஒரு பேச்சுப் பாடகர்’ என்பார் கவிஞர் சுரதா.
வெட்டிப்பேச்சைத் தட்டி நடக்கும் வீரர்கள் - கை
கொட்டி நகைத்து மட்டித்தனத்தை மட்டந்தட்டும் மாவீரர்கள்
சுகபோகங்களில் சுகவாழ்வு நடத்தும் சுயநலமிகளைப்பார்த்துச்
சுருட்டிக் கொள்உன் சூதை என்றுரைக்கும் சூரர்கள்
என்றெல்லாம்அண்ணா எழுதும்போது உரை நடைக்கும்,பாட்டுநடைக்கும் இடைப்பட்டதொரு நடை புதிதாக உருவாகி விடுவதைக் காணலாம்.  மட்டுமல்ல,
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
என்றெல்லாம் தொடர்களை அமைப்பது ஒற்றை வரிக் கவிதைகளாகக் கருதத்தக்கன என்றாலும்அண்ணாவிற்குக் கவிதை குறித்த தனித்தனிக் கருத்துக்கள் இருந்தன.  தமிழின் சங்க இலக்கியங் களையும் காப்பியங்களையும் ஆழமாகக் கற்று அதன் நுட்பங்களை அழகாகத் தன் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்தியவர். ஆங்கில மொழி இலக்கியத்திலும் ஆழங்கால்பட்ட அறிவு மிக்கவர்.  தமிழ்ஆங்கில இலக்கியஇலக்கணதிறனாய்வு நுட்பங்கள் தெரிந்தவர். எனவேதான் பிற இலக்கிய வடிவங்களைச் சரளமாகக் கையாளும் அண்ணா கவிதையை மிகவும் எச்சரிக்கையாகக் கையாள்கிறார்.  அவரே கூறுகிறார்:
பாடுகிறான் அண்ணன் ஓர் கவிதை என்று
பரிவாலே எண்ணிடாதீர் உடன்பிறந்தோரே!
சீர் அறியேன் அணி அறியேன் சிந்தை உந்தும்
செய்திதனைத் தெரிவித்தேன் ஆசையாலே(1969)
சீர்,அணி முதலிய யாப்புக் கூறுகள் கவிதைக்கு அடிப்படை என்பது அண்ணாவின் கருத்தோட்டம். அதே போலச் செய்யுளைக் காட்டிலும் ஓசையுடைய பாடல்கள்மெட்டுக்குரிய பாட்டு என்பதில் அண்ணா ஆர்வம் காட்டினார்.  இதுவும் கூடத் தனது கருத்துமக்களிடம் பரவலாகச் செல்ல வேண்டும்;அதற்குப் பாமரரையும் கவரும் இசைப்பாடல் வடிவம் சிறந்தது என அவர் எண்ணியிருக்கக்கூடும்.  பாரதிதாசனின் பிறந்த நாளையொட்டி எழுதப்பட்ட ஒரே நிலவுஎன்ற கவிதையில்,தனது கவிதை குறித்த கருத்துக்களை மேலைக் கவிஞர்களின் கூற்றுக்களோடு முன்வைக்கிறார்.
எதுகைமோனைஎழில் தரும் உவமை
வசீகர வர்ணனை - பழமைக்கு மெருகு
இத்தனையும் தேடிஎங்கெங்கோ ஓடி
வார்த்தைமுடையும்வலைஞன் அல்ல!                                                                          - வால்ட் விட்மன்
உயர்ந்த உள்ளங்களின் உன்னத நேரங்கள்!
வடித்துக் காட்டும் வரலாற்றுத் துளிகள்
அவையே கவிதை அதுவே வாழ்வின் நூல்!
                                                                                                                                                                                - ஷெல்லி
உன்னத எண்ணம்உயர்ந்த உணர்ச்சி
எழுப்பிக் காட்டும் இனிய சங்கீதம்
அதுவே கவிதை
                                                                                                                                                                     - வால்டேர் (ப.7)
ஆகவேஅண்ணா யாப்பமைதி கொண்ட பா வகைகளைமரபுக்கவிதைகளைஇசைப்பாடல் களையே கவிதைகள் எனக் கொள்கிறார் எனலாம்.
அண்ணாவின் பிற படைப்புகள் பேசப்பட்ட அளவுக்கு அவரின் கவிதைகள் கவனப்படுத்தப் படவில்லை.  அண்ணா தன் அரசியல்சமூகச் செயற் பாடுகளுக்கு உறுதுணையாகவே தன் கவிதைகளைப் படைத்துள்ளார். சாதி,மத,மூடநம்பிக்கை எதிர்ப்பு,வைதீகஎதிர்ப்புபொருளாதார ஏற்றத் தாழ்வு எதிர்ப்புசமூக விடுதலைபொருளாதார விடுதலைஅரசியலில் லஞ்சம் / ஊழல் எதிர்ப்பு.... ஆகியன அண்ணாவின் கவிதைகளின் பாடுபொருள்களாகின்றன. மரபும்புதுமையும் சேர்ந்த கலவை யாக அவரின் கவிதைகள் மிளிர்கின்றன.
கவிதைகளின் உள்ளடக்கம்
அறிஞர் அண்ணாவின் கவிதைகள்யாவும் பகுத்தறிவு,சுயமரியாதை,சமதர்மக் கொள்கைகளைத் தாங்கியே நிற்கின்றன. இரண்டாம் மொழிப் போரில் தந்தை பெரியார் சிறைப்பட்டபோது அவருக்குப் புறாவிடம் கவித்தூது அனுப்புகின்றார். ஓர் புறம் ‘ஒழிக இந்தி’,மறுபுறம் பெரியார் வாழ்கஎன இரண்டு பக்க இறக்கைகளோடு புறா பறந்து செல்கிறது.
பெரியாரை,
வாழ்ந்திட வேண்டும் வையகமெல்லாம்
தாழ்ந்தவர் மேலவர் எனும் தருக்கின்றி
உழைத்திடும் மக்களை உறிஞ்சிடு கூட்டம்
ஊரில் இருப்பது உலகக் கேடென
உரைத்திடும் பண்பினர் ஊன்று கோலினர்” (ப.18)
என்கிறது புறா.
இலஞ்சம்ஊழலுக்கு எதிரானவர் அண்ணா.  அன்றைய ஆட்சியின் அவலத்தினைக் கூறும் ஒரு கவிதையில்,
புதிது புதிதாய் வெளிக்கிளம்புகிறது - அனுதினமும் பேப்பரில்
லஞ்சப் புரளி அதிகரிக்கிறது
..............................................
தேசிய போர்வையைப் போர்த்திக் கொண்டே
சிலர் திருடும் தொழிலாக இருந்தால்
அதைத் திருத்தி அமைக்க வேண்டுமென்றே” (ப.30)
என வெளிப்படையாய்ப் பேசுகின்றார்.  அதே போலப் பிடிபட்டான் என்ற கவிதையில் சூழல் காரணமாகச் சொற்பப் பணத்துக்கு ஆசைப்பட்டு இலஞ்சம் பெற்ற அரசு அலுவலர் ஒருவர் மாட்டிக் கொண்டு,தண்டனையும் பெறுவதையும்இதற்கு மேல் இவனைப் போன்றவர்களைக் கருவியாக்கிக் கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பவர்கள் தப்பித்துக் கொள்வதை நுட்பமாகவும் ருசிகரமாகவும் விளக்குகின்றார்.
மேலும் அண்ணாவின் பல கவிதைகள் வெள்ளை யாதிக்கத்துக்கு எதிராகவும் நம்மவரின் கொள்ளை யாதிக்கத்துக்கு எதிராகவும் முழங்குகின்றன. ஏழ்மைவறுமை ஒழிந்து சமத்துவம் மலர வேண்டும்,பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அகல வேண்டும் என்பது இவரின் பேரெண்ணமாக இருப்பதை இவரது கவிதைகள் மெய்ப்பிக்கின்றன. சமூகச் சிக்கல்கள் அளவுக்குப் பொருளியல் சிக்கல்களையும் அண்ணா கவனப்படுத்தியிருப்பது நோக்கத்தக்கது.
சீறிடும் சிட்டு’ என்றொரு கவிதை.
பாரீர்! படுத்துறங்கும் பராரியை! எழுப்பிப்
பணக் கோட்டைகளைப் பிடித்துக் குலுக்கு!
அடிமைக் குருதி கொதித்திடும் நம்பிக்கை யூட்டிச்
சிட்டு வல்லூறை எதிர்த்திடும் வகை செய்!
மக்களாட்சி மலர்ந்ததென மொழிந்து
பழமைப் பாசிப் படத்தைத் துடைத்திடு!
உழவன் வாழ்ந்திட வழிதரா வயலின்,
செந்நெலை மிதித்து மண்ணாகச் செய்திடு!
பட்டிட்டுப் பரமனை மறைத்திடல் ஏனோ!
பக்தர் கண்படாது களித்திடத்தானே!
கோயிற் குருக்கள் கூட்டத்தை விரட்டிடும்.” (ப.124)
இது 1942இல் வெளிவந்த கவிதை. விடுதலைக்குப் பின் நடக்கவேண்டிய சமூகப் பொருளாதார மாற்றத்தை முன்மொழிகிறார். இப்படிப் பல கவிதைகள் ஒட்டுமொத்த மாற்றம் குறித்துப் பேசுகின்றன.
அண்ணாவின் கவிதையமைப்பும் வடிவமும்
பெரும்பாலும் ஆசிரியப்பா அமைப்பின் பல வகைமைகளில் அண்ணாவின் கவிதைகள் அமை கின்றன.  மரபுப்பாவில் படைத்தாலும் கருத்துக்களில் புதுமையே காணப்படுகின்றது.  வாழ்த்துப் பாக்களிலும் அண்ணாவின் அழகுநடை ஈர்க்கிறது. தென்னகத்தின் பெருமை கூறும் கவிதையில்
அதிர்ந்தன நாலு திசைகள்!
அடங்கின ஏழுகடல்கள்!
பதிர்ந்தன ஓரி மலைகள்!
பிறந்தது தூளி படலம்!  (ப. 26)
என்று பா எழத்தக்க வீரம் காட்டினர்” என அடுக்கிக் காட்டுவது சுவைக்கத்தக்கது.
பொங்கல் வாழ்த்தில் கூட
தமிழ்வாழ நாம் வாழ்வோம்
அறிவாய் நன்றாய்!
நாம் வாழ்வில் பெறும் இன்பம்
கரும்பாகிடல் வேண்டும்
நாட்டி னோர்க்கு” (ப. 26) இக்கவிதையில் மொழிச் சிந்தனையும் வாழ்வியல் சிந்தனையும் இணைகின்றன.
இசைப்பாடல் வெளிப்பாடு
இசையோடு பாடுவதற்குரிய பாடல்கள் அண்ணா இயற்றினார். நேரடி அரசியல் கருத்துக்களை அச்சமயம் புகழ்பெற்றிருந்த பாடல் மெட்டுகளில் எழுதி உள்ளமை கவனிக்கத்தக்கது.  இப்பாடல் களைச் சிந்துநொண்டிச்சிந்துகும்மிஎண்சீர் விருத்தம்ஆகிய வகைமைகளில் அடக்கலாம். எனினும் எளிமையாக நடப்பு அரசியல்,சமூக நிகழ்வுகளை மக்கள் மனதில் ஓசைநயத்துடன் பதிவு செய்வதாய் அமைந்துள்ளன.
வெள்ளி முளைக்குது’ என்னும் பாடலில் ஆரிய திராவிடப் பகைமையைச் சுட்டுகிறார்.
ஒன்றே குலமென்றோம் நாம் ஒருவனே தேவனென்றோம்
ஓங்கார மூர்த்திக் கன்று ஒய்யாரமில்லையென்றோம்.
ஆங்கார ஆரியர் அலைந்து திரிந்தவர்கள்
ஆபாச நியதிகள் அவர்வாழப் புகுத்தினார்.” (ப.34)
இதற்குத் தீர்வாகப் பெரியாரின் கொள்கை களை முன்வைக்கிறார்.
வெள்ளி முளைக்குது வெண்தாடி அசையுது!
வீணரின் விலாவெல்லாம் வேதனை மீறுது
வெள்ளையரும் அதிரவெடி வேட்டுக் கிளம்புது
வேதியக் கூட்டமெல்லாம் வியர்த்தின்று விழிக்குது” (ப. 35)
விளக்கம் தேவைப்படாத வரிகள் இவை
மகாத்மா காந்தியடிகளைக் கொன்ற கோட்ஸே குறித்த பாடலில்.
அநியாயம் தானுங்கோ
அவனிக் கடுக்காதுங்க!
அக்ரமக்காரன் பேரு
கோட்சே தானுங்க... (ப. 26)
என்று பாடுவதோடு நிற்க வில்லை.
கோட்சே கூட்டம் இன்னும்
கொடிகட்டி ஆளுவதா?
கொலைக்காரக் கும்பலின் கொட்டம்
தரைமட்ட மாக்கோனும்
குலமும் ஒண்ணுகடவுளும் ஒண்ணு
என்றேதான் ஓதனும்” (ப. 42)
எனத் தீர்வையும் கூறுகிறார். மதவெறி கூடாது. மனித நல்லிணக்கம் தேவை என்பது அண்ணாவின் கருத்து.
கதைப்பாடல் உத்திகள்
அண்ணாவின் கவிதைகளில் அழுத்தமான இடத்தினைப் பிடிப்பது அவரின் கதைப்பாடல்கள் தாம். குறுங்காப்பியங்கள் என உணரும்வகையில் அமைந்த இக்கதைப்பாடல் வடிவத்தில் அண்ணா தான் கூற எண்ணும் சீர்திருத்தக் கருத்துக்களை அற்புதமாக முன்வைத்துவிடுகிறார்.  பாத்திர உருவாக்கம்கதைப்போக்குவளர்த்தெடுத்தல்திருப்பம்தீர்வுமுடிவு எனக் கச்சிதமாக இக்கதைப் பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அண்ணா எழுதியுள்ள கதைப்பாடல்கள்
1. தேம்புகின்றேன் (1956)
2. மூதறிஞர் மூவர் (1961)
3. நானே தலைவன் (1961)
4. புத்தியில்லா உலகமிது (1963)
5. அவனா இவனா அறிவாளி (1964)
6. காடுடையார் (1965)
7. வேட்பாளர் வருகின்றார் (1965)
8. கோபம் (1965)
இக்கதைப்பாடல்களின் உள்ளோட்டமாக அரசியல் அமைகின்றது என்றாலும் நேர்மையாக வாழ்தல்மூடநம்பிக்கை ஒழித்தல்உழைத்தல்சோம்பல் போக்குதல்கோபம் தவிர்த்தல்சந்தேகம் கொள்ளாமல் வாழ்தல்,பிறர்க்குதவுதல்,மொழிப்பற்றுடன் இருத்தல்நாட்டுக்குழைத்தல் ஆகிய மனிதவாழ்வின் கொள்ளத்தக்க பண்பியல்புகளை இக்கதைப்பாடல்கள் முன்னிறுத்துகின்றன.
போலிச்சாமியாரிடம் ஏமாந்து இல்லறம் துறந்து அவர் வழியில் சென்ற ஒருவன் உண்மை உணர்ந்துதிருந்தி இல்லறம் திரும்புவதைக் கூறும் தேம்புகின்றேன்’ கதைப்பாடலில். . .
கட்டுவது காவிதான்
கருத்தோ ஆதிக்கம் தாவும் காணீர்!
உருட்டுவதும் உருத்திராக்க மாலை யேதான்,
உருட்டு விழிப் பாவையர்-மேலே நாட்டம்!
அருட்கடலே! என்றேத்தி வருவோர் பல்லோர்.
அவர் தாமும் அடித்தாட் கொள்வார்.
வெருட்டுவார்வெஞ்சினங் கொண்டு,
மருட்டுவார்மாடென்பார் மனிதர் தம்மை. (ப.44)
எனப் போலிச்சாமியாரின் சித்துவேலைகளைத்’ தோலுரிக்கின்றார்.
மூதறிஞர் மூவர்” கதைப்பாடல்மருத்துவம்சோதிடம்இசைஞானம்கைவரப் பெற்ற மூவரைப் பற்றியது. மூவரும் சமையல் செய்யத் திட்டமிடுகின்றனர். காய்கறி வாங்க மருத்துவரும்,அரிசி வாங்க சோதிடரும்,அடுப்பு மூட்ட இசை கற்றோரும் ஒத்துக்கொள்கின்றனர். மூவரும் தத்தமது புலமைச் செருக்கால் உணவுக்கு வழிஇன்றி நிற்பதை எள்ளலுடன் அண்ணா பகர்கின்றார்.
இடரை வரவழைத்து இலட்சியம் இழந்திடுதல்
எற்றுக்கு என்பதனை எண்ணிடுவீர் எல்லோரும்
சாதாரண சமையல்அதனைச் செய்திடவோ
சங்கீதம் கற்றவனும் ஜாதகம் கணிப்பவனும்
நோய் தீர்க்கும் மருத்துவனும் கூடி முடியவில்லைகாரணமோ,
குறிக்கோள்தனைக் கெடுக்கும் குறை அறிவு கொண்டதுதான்.
                                                                                                                                                                                       (ப.49.50)
மற்றும் தமக்கென்று மாமேதாவித் தன்மை
மெத்த இருக்குதென்ற பித்தத்தி னாலுங்காண்
ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது.  கொள்கை இலட்சியம் வேறு.  நடைமுறை அறிவு வேறு.  அண்ணா உள்அரசியலை மையப்படுத்தினாலும்கூட இக்கவிதை இன்றைக்கும் வாழ்வியலுக்குச் சிறந்த சான்றாக அமைகின்றது.  நானே தலைவன் - கதைப்பாடல் எட்டாம் ஹென்றி வரலாற்றிலிருந்து ஒரு நிகழ்வை எடுத்துத் தமிழகத்து அரசியலுடன் ஒப்புமை செய்து அங்கதச் சுவையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
புத்தியில்லா உலகமிது’ கதைப்பாடல் சமூக அவலத்தை ஏழ்மைக் கொடுமையினால் நவீன நல்ல தங்காள் ஆகிப்போன வேணி என்னும் பெண்ணின் சித்திரத்தை அண்ணா சித்திரிப்பதில் கலையியல் செறிவினைக் காணமுடிகிறது.  பொறுப்பற்ற கண வனால் தனது குழந்தைகளில் இரண்டைக் கொன்று விட்டு மூன்றாம் குழந்தையோடு தானும் உயிர்துறக்க நினைக்கும்போது, ‘கொலைக்காரி’ என்னும் பட்டத்தைச் சமூகம் அளிக்கிறது.  வாழ்வதற்குப் போராடிச் சாகலாம் என முயன்று அதற்காகவும் போராடும் அவலம்அப்பெண்ணுக்கு.  ‘இது பொல்லாத உலகம் மட்டுமல்ல,புத்தியில்லாத உலகமும்தான்எனச் சூடு போடுகிறார் அண்ணா.
மலர்கள்தரும் கொடியதுவும் காய்ந்து - போனால்
மணம் விரும்பும் மக்கள் அதை நாடு வாரோ?
ஏழை அனாதைப் பெண்ணிற்கு அண்ணா காட்டும் உவமை இது.
யாழ் இனிது,குழல் இனிது என்றெல்லாம் குழந்தைகளின் மழலையைக் கொண்டாடும் சமூகம்.  அண்ணா அதைப் பற்றி வேறு சித்திரத்தைத் தருகிறார்.
குழலப்பா...  யாழப்பா என்று யாரும்
குழந்தைகளின் ஒலிபற்றிச் சொன்னாரில்லை
அவன் செவிக்கு அவ்வொலியே நாராசமாக” (ப.60)
வறுமை,ஏழ்மை,வாழ வழியற்ற நிலைமையில் மழலை மதிப்புகள் நாராசமாக மாறுகின்றன.  அப்பெண் குழந்தைகளைக் கொன்று தானும் சாக முடிவெடுப்பதை அண்ணா,
பூவும் பிஞ்சும் போகும் முதலில்
பின்னர் சாயும் கொடியே வேரும் அறுத்து” (ப.67)
எளிமையான நெருடலற்ற உருவகம்!
அவனா இவனா அறிவாளி?’ என்னும் கதைப் பாடல் அருணகிரிபெரியண்ணன் என்னும் இரு எதிர் எதிர் பண்புடையாரைப் பற்றி உரைக்கின்றது.  ஏழை ஓ பணக்காரன்அறிவாளி ஓ முட்டாள்நல்லவன் ஓ கெட்டவன் என முரண்களில் வளரும் வாழ்க்கை.  காலமும் சூழலும் நல்லதை அழித்து அல்லதைச் செழிக்கச் செய்கிறது. நேர்மைஉழைப்புதிறமை இவற்றுக்குச் சமயங்களில் பின்னடைவு ஏற்படலாம் என்ற கருத்து இப்பாடலில் எதிரொலிக்கிறது.
மோட்டார் வருகுது ஊர் சுற்ற
நோட்டாய்க் குவியுது இலஞ்சமுந்தான்.
பாட்டாய்ப் படிக்கிறார் உடன் உள்ளார்
பழிபாவம் கண்டு பயம் கொள்வார்” (ப.76)
இப்படிச் சந்த நயத்தோடு பாடல் முழுமையும் அமைக்கப்பட்டுள்ளது.
காடுடையார் என்னும் கதைப்பாடலில் காட்டிலிருந்து பிடித்துவரப்பட்ட புலிக்குட்டியானது ஒரு சீமானின் வீட்டில் வளர்கிறது. அங்கு நகரத்தின் அசிங்கத்தைத் தரிசிக்கிறது.  அங்கிருந்து தப்பிப் போகிறது. நடந்தவற்றைத் தன் இனத்திடம் கூறி,பின் கடவுளைச் சந்தித்து மனிதர்களின் மோசமான பண்புகளைப் பட்டியல் போடுகிறது. இதனைக் கேட்டு நொந்துபோன இறைவன் இனி நாடு உதவாது எனக் ‘காடுடையார்’ ஆகிறார். இதனைக் கனவு காணும் உத்தியில் அண்ணா படைத்துள்ளார்.
விலங்குகள் இரை தேடும் நிலையைப் புலி,
வயிற்றுக்கு வழி தேட
மோப்பம் பிடித்தறிந்துமெல்ல
நடை நடந்து
இடம் பார்த்துப் பாய்கின்றோம்
இடறியும் வீழ்கின்றோம்
எத்தனையோ இன்னல்பிறகே
இரைதனைப் பெறுகின்றோம். (ப.83)
எனக் கூறித் தான் பார்த்த மனிதரின் நிலையைப் புலி ஒப்பிடுகிறது.
உழைக்காமல் உருசியான
பண்டம் பானமெலாம்
வேண மட்டும் உட்கொண்டு
வீணாக்கியும் போடும்
வித்தையினைக் கற்றவர்கள்
மாளிகையில் வீற்றுள்ளார்.
.............................
சிரித்தபடியே அவர்கள்
சித்ரவதை செயவல்லார்!
சொல்லாமலே சாகடிக்க
வல்லாரும் ஆங்குள்ளார்.
.............................
உண்டு மகிழ்வதுடன்
ஊர்க் குடியைக் கெடுப்பதற்கு
விழித்துக் கிடக்கின்றார். (ப.83-84)
.............................
என வரிசையாக மனிதரின் இழிசெயல்களைப் புலி பந்தி வைக்கிறது.கடவுள் கலக்கமுறுகிறார்.  நாடு வெறுத்துக் காடடையத் தயாராகிறார்.
கடவுள்:
நாடு கைவிடினும் காடுளது
களிப்புற்றேன் மிகவும் என்றார்.
அதற்குப் புலி:
காடுடைப் பொடி அலவோ
பூசிடுவதுமய்யா!
ஆடையும் எமதினம்
அளித்தது அன்றோ! (ப.92)
என்கிறது.
சிரித்தார் சிவனார்.  சிரித்தேன் நானும்.
எனப் பொருத்தமாக முடிக்கிறார். நடப்பைக் கற்பனையாய் உருவகம் செய்து கவி புனைந்திருப்பது சிறப்பு.
வேட்பாளர் வருகின்றார்’ - கதைப்பாடல் இன்றைய தேர்தல் முறைவேட்பாளர் தகுதிப்பாடு குறித்ததாக அமைகின்றது.  குறுக்குவழியில் பணம் சேர்த்தவர்கள் தேர்தலில் கொடி நாட்டும் இழி நிலையை அண்ணா கவிதைகளாகப் படைத்துள்ளார்.
கோபம்’ என்னும் கதைப்பாடல் சுப்பன்-குப்பி என்னும் இருமாந்தர்களை வைத்து நடத்தப் பெறுகின்றது. வறுமையும் ஏழ்மையும் வாட்டும் குடும்ப நிலை. வேலையில்லை இருவருக்கும். குடும்பம் காக்க பெண்ணான குப்பி,விறகு சுள்ளிப் பொறுக்கச் செல்கிறாள் தோப்புக்கு. கண்ணப்பர் என்னும் பண்ணையாரோ குப்பியைச் சுற்றுகிறார். ஒரு நாள் முயற்சியிலும் இறங்குகிறார். தப்பி வருகிறாள் குப்பி. கணவனிடம் கயவனைக் குறை சொல்ல அச்சம். இந்நிலையில் கண்ணப்பருக்காகச் சொக்கன் என்பவனை வெட்டிக்கொன்றுவிட்டுச் சுப்பன் சிறைக்குச் செல்கிறான். இத்தருணத்தைத் தோட்டக்கார முதலாளி பயன்கொள்ளக் கருதகுப்பி சென்னைக்கு மில் வேலைக்குப் பயணமாகிறாள்.
பாலியலை உளவியல் நோக்கில் நுட்பமாகக் கூறுகின்றார் அண்ணா.
ஊருக்குப் பெரியவராம்
உண்மை நீதி அறிந்தவராம்
ஏருக்கு மாடாக உழைக்கும்
ஏழைக்குக் கூற்றாவார்.
பெண்பித்துக் கொண்டலையும்
பேயெனத் தெரிந்திருந்தால்
பொன்விறகு கிடைத்தாலும்
புகுவேனோ மாந்தோப்பு!
பாம்பு சீறுமுன் பசுப்புல்
வெளியதுவும் பாங்குதான்.  அதுபோல
பாவி இப்பார்வை காட்டு முன்னே
என்தந்தை போல் தெரிந்தார். (ப. 102-103)
மிக எளிமையாகச் சூழலைக் காட்சிப்படுத்தும் பாங்கு அண்ணாவின் படைப்புத்திறனாக மிளிர்கிறது.
பல்சுவைப் பாடல்களின் தனித்தன்மைகள்:
பல்சுவைப்பாடல்கள் பகுதியில் மொழி பெயர்ப்புக் கவிதைகளும் சில புதுக்கவிதை வடிவங்களும் இடம்பெறுகின்றன.
சூரிய குட்டியைத் தேடிய மாப்பிள்ளை
மாடு இல்லா வண்டி
மானத்திலே போவுதாம்!
மைதானத்திலே ஒரு கம்பி!
எண்ணை இல்லே திரியுமில்லை
எரியுதாம் விளக்கு!
என்னென்னமோ இருக்குதாம்
என்மாமன் வாழும் சீமையிலே.” (ப.123)
விடுகதையைப் போல அமைக்கப்பட்ட கவிதை.  இது 30.08.1942-இல் வெளிவந்தது.  விமானம்வானொலிமின்விளக்கு ஆகியவற்றைச் சுட்டும் கவிதை இன்புறத்தக்கது.
சின்னான் சிந்து’ என்னும் கவிதை ஏற்றத் தாழ்வுற்ற சமுதாயத்தின் அவசியத்தைச் சிந்து வடிவத்தில் தருகிறது.
வெள்ளைக்காரக் கூட்டமெல்லாம் வெளியேறிப் போகணும்!
சள்ளைப்பிடிச்ச வாழ்வுபோயி ஒரு சவுகரியம் பிறக்கணும்!
கொள்ளையிடும் கும்பலது கூண்டோடே தொலையணும்!
பள்ளுபறை என்ற பேச்சைப் பழசாக்கிப் போடணும்!
ஏழை எளியவங்க பிழைக்க வழிதேடணும்!
வெள்ளை - சள்ளை கொள்ளை.....
பள்ளு பறை.....
ஏழை எளியவங்க....” (ப.133)
என்சாதி உசந்ததென்னும் எண்ணக்காரன்
ஒழியனும் எல்லாரும் ஒண்ணு என்னும்
எண்ணம் உதிக்கணும்.
போன்ற எதுகைமோனை சந்தச் சொல் அமைப்புகள் பாடலில் இயல்பாக அமைந்துசிறப்புத் தருகின்றன.  சாதியற்ற சமூகம் உருவாக அண்ணாவின் கவிதை அறைகூவி நிற்கின்றது.
புதுக்கவிதை
அண்ணா மேலைக் கவிதைகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாலும் புதுக்கவிதை போன்ற யாப்பு மீறிய கவிதை அமைப்புகளில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. ஒரு சில கவிதைகள் புதுக்கவிதை களாகக் கருதத்தக்கவை.
மனிதன்
மனிதா!
நீ யாருக்கும் தலைவணங்காதே.
நிமிர்ந்து நட!
கைவீசிச் செல்!
உலகைக் காதலி!
செல்வரை செருக்குள்ளவரை
மதவெறியரைத் தள்ளி எறி
மனசாட்சியே உன் தெய்வம்!
உழைப்பை மதி ஊருக்குதவு.
உனக்கு எட்டாத கடவுளைப் பற்றிப் பிதற்றாதே! (ப.135)
சிந்தனை செய்! செயலாற்று!
வண்டிக்காரன் மகன்
ஓயாமல் உழைக்கின்றாய்!
உன் மகனை ஆளாக்க
ஊர் மெச்சும் வாழ்வுதர
உருக்குலைய உழைக்கின்றாய்!
பேர் சொல்லி மகன் வாழ்வான்
பெருமை மிகும் என்றெண்ணிப்
பேய் மகனும்உனை மறந்தால்
நாய் மகனே ஆவான் காண்! (ப. 152) என்பன போன்ற அறச்சீற்றங்களும் அண்ணாவின் கவிதையில் காணக்கிடைக்கின்றன.
அண்ணா தனது கருத்துநிலைகளைப் பரப்புகை செய்யும் விதமாக இசையும் சந்தமும் மிக்க பாடல் களைப் படைத்துள்ளார். அண்ணாவின் உலக நோக்கையும் சமூக நோக்கையும் அறிந்திட அவரே தன்நிலை அறிமுகமாக ஒரு கவிதையில் கூறுகிறார்.
மனித மேம்பாடு
மனித மேம்பாடே என் இயக்கம்
தோழமையே என்மேடை
தூய மனத்தினர் என்பேன்
உழைத்திடின் மக்கள் நன்மைக்கே
தொலைவிலே சிறு பொறி கண்டு
துடித்தெழும் போக்கினர் யாரும்
தோழர்களையும் எந்தனுக்கே
துணைவராம் புனிதப்போர் தனக்கே. (ப.198)
இக்கவிதையில் தன் பயணம்,பாதை,வழித் துணை ஆகிய யாவற்றையும் அண்ணா சுட்டி விடுகிறார்.  இதுதான் அண்ணாவின் இலட்சியம் எனலாம்.
மொழிப்பயன்பாடு
மொழிப்பற்று மிக்குடையவரான அண்ணா தம் படைப்புகளில் பிறமொழிச் சொற்களையும்வட்டார வழக்குச் சொற்களையும் வசதி கருதியும் சராசரி மக்களுக்கு விளங்கும் தேவை கருதியும் பயன்படுத்துகிறார்.
ஓய்ந்தது பாளை உட்கார்ந்தா(ள்) சாணாத்தி” (பழமொழி)
கரடுமுரடான பாதையிலே அந்தக் கறுப்புக் கண்ணாடி கோச்சு மானும்’ (பிறமொழிச்சொல்)
நாமே நம் ஓட்’ கொடுத்து நல்லவரென்றே எடுத்து’ (ப.32)
                                                                                                                                                            (பிறமொழிச்சொல்)
கஷ்டத்தை எண்ணினால்
கலந்தண்ணீர் வருகுதே
அடுப்பிலிட்ட கட்டைபோல்’                                                                                                (வட்டார வழக்கு)
சர்க்கார் மோட்டார் (பிற மொழிச் சொற்கள்)
ஏனப்பா எம்மான் பேச்சு எப்படி இருந்த தென்றேன்?
தேனப்பா! தெவிட்டா தப்பா! தேகமே கூசு தப்பா!
ஆமாப்பா! என்றான் நண்பன்’                                                                                                  (பேச்சு வழக்கு)
மொழித்தூய்மை நோக்கு அண்ணாவின் கவிதை களில் இல்லை. மக்கள் பயன்பாட்டில் உள்ளவற்றை அப்படியே எடுத்தாளும் போக்குக் காணப்படுகிறது.
எச்சரிக்கையுணர்வு
தமிழ்க் கவிதையியலின் ஆழங்களை உணர்ந்தவர் அண்ணா. எனவே மேம்போக்காகக் கவிதை போலச் செய்வதில் அவருக்கு உடன்பாடில்லை. மரபு தழுவிய இசைப்பாடல் வகையினையே அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.  பேச்சிலும்மடல்சிறுகதைநாடகம்போன்ற உரைநடை வடிவங் களிலும் தன்னியல்பாக வீரியத்தோடும் துணி வோடும் வெளிப்பட்ட இவர் கவிதையில் மட்டும் உள்வாங்கிச் செயல்படுகிறார்.  தன்னடக்கம் என் பதைக் காட்டிலும் இலக்கண - இலக்கியச் செழுமை மிக்க மொழியின் மீதான கவனத்தையே இது காட்டுகிறது.
இது கவிதை அல்ல - புலவர் துணை கொண்டு
கவிதையாக்கிக் கொள்க’.
தமிழாசிரியர்துணைகொண்டு சீரும் தளையும் செப்பனிட்டுக் கொள்வாய் என்ற துணிவில் குறை நிறை கவிதை வடிவம் கொடுத்துவிட்டேன்என் றெல்லாம் ஆங்காங்கே குறிப்பிடுவது அண்ணாவின் படைப்பு நேர்மையைக் காட்டுகிறது.
முடிவாக
ஆசிரியப்பாவின் வகையினங்கள்சிந்துகண்ணிவாயுரை வாழ்த்துகும்மி... என மரபோடு எழுதப் பட்ட கவிதைகள் அண்ணாவினுடையவை.
எளிதில் புரியும் மொழியும்மனதில் நிற்கும் ஓசை ஒழுங்கும் இவரின் பொதுவான கவிதை இயங்குதளங்கள்.
அரசியல் சார்ந்த கருத்துகளை வலிமையோடு மக்கள்திரள் முன்படைத்திடும் தன்மை இவரின் கவிதைகளின் அடிப்படையாகின்றது.
எதுகைமோனைஅடுக்குமொழிபேச்சுவழக்குபிறமொழிச் சொற்கள் விரவி நின்று அண்ணாவின் கவிதைகளுக்கு அணி செய்கின்றன.
உவமைகள்உருவகங்கள் மிக எளிய அடிப் படையில் கவிதைகளில் ஆங்காங்கே தென்படுகின்றன.
அண்ணாவின் கதைப்பாடல்கள் தனித்துவ மிக்கவை.  குறுங்காப்பியங்களாக விரியும் தன்மை கொண்ட இவற்றில் கதைகளில் இவரின் கற்பனையாற்றலும் படைப்புத்திறனும் வெளிப் படுகின்றன. கதைக்கருத்தேர்வுபாத்திர வளர்ப்புநிகழ்வுக்கோவைசொல்லாட்சிநடத்திச்செல்லுதல்,எடுத்துரைப்பு,முடிவுஆகியகூறுகள்யாவும்ஓர்மையுடன்தொழிற்படுகின்றன.  தமிழ் மரபுக் கவிதைகளில் அண்ணாவின் பங்களிப்பு என  யோசித்தால் அவரின் கதைப்பாடல்களாகவே அமையும் சிறப்புப் பெறும்.


ஒட்டுமொத்த சமூக மாற்றம் என்கிற கருத் தியலே அண்ணாவின் கவிதைகளின் இயங்கு தளமாக உள்ளது.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...