கோவை இலக்கியச் சந்திப்பின் 88 ஆம் நிகழ்வு 25.02.2018 அன்று காலை 10.00 மணிக்கு சிறப்பாக
தொடங்கியது. கவிஞர் இளவேனில்; வரவேற்றார். நிகழ்வில் பேரா. அன்புசிவா, பேரா.சி.சுப்பிரமணியம் ஆகியோர் தொகுத்த (Speech
of Abdul kalam) என்னும் நூலை
முனைவர் அரவிந்த் சுப்பிரமணியம் சிறப்பாக அறிமுகம் செய்தார். பேராசிரியர் அன்புசிவா, அவர்களின் கட்டுரை நூலான “பாரதி முதல் கவிதாசன் வரை” நூலை கவிஞர் இளஞ்சேரல் சிறப்பாக அறிமுகம் செய்தார். முனைவர்
இராமேஷ் அவர்களின் மொழிபெயர்ப்பு நூலான “ரஜியா” சிறுகதை நூலை பேரா. திலீப்குமார் சிறப்பாக
அறிமுகம் செய்தார். எழுத்தாளர் சுப்பிரபாரதிமணியன் அவர்களின் “கடவுச்சிட்டு” என்னும் நாவலை
திருமதி சீலா சிவக்குமார் சிறப்பாக அறிமுகம் செய்தார். நிகழ்வில் சுப்ரபாரதி
மணியன் பேரா.திலீப்குமார் அரவிந்த் சுப்ரமணியன், பேரா ரமேஷ்குமார் பேரா.அன்புசிவா ஆர்.பாலகிருஷ்ணன்
எழுத்தாளர் சீலா சிவக்குமார் ஆகியோர் வந்திருந்து நிகழ்வைச் சிறப்பாக்கிக்
கொடுத்தார்கள். கவிஞர் யோக. செந்தில்குமார் நன்றி கூறினார்.

Comments
Post a Comment